ஜான் பெவ்ரோ
ஜான் பெவ்ரோ | |
---|---|
பிறப்பு | ஜொனாதன் பெவ்ரோ அக்டோபர் 19, 1966 நியூயார்க் நகரம் அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்றுவரை |
வாழ்க்கைத் துணை | ஜோயா டில்ம் (தி. 2000) |
பிள்ளைகள் | 3 |
ஜான் பெவ்ரோ (Jon Favreau, பிறப்பு: அக்டோபர் 19, 1966 ) என்பவர் அமெரிக்கா நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு ரூடி என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக வெளிக்காட்டினார். அதை தொடர்ந்து ஸ்விங்கர்ஸ் (1996), டேர்டெவில் (2003), பிரேக் அப் (2006), செஃப் (2014) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எல்ஃப் (2003)[1], அயன் மேன் 1 (2008), அயன் மேன் 2 (2010), தி ஜங்கிள் புக் (2016)[2][3][4] மற்றும் லயன் கிங் (2019) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் அயன் மேன் 1 (2008) என்ற திரைப்பட தொடரில் மார்வெல் திரைப் பிரபஞ்ச கதாபாத்திரமான கப்பி கோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவெஞ்சர்ஸ் திரைப்பட தொடர்களான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Will Ferrell Says 'Bah Humbug' to 'Elf 2'". Archived from the original on 2017-12-08. பார்க்கப்பட்ட நாள் 2019-05-20.
- ↑ "Pixar is Helping with Jon Favreau's 'Magic Kingdom' - CraveOnline". July 25, 2012.
- ↑ "Is Jon Favreau Still Making Magic Kingdom At Disney? Here's What He Says - CINEMABLEND". April 5, 2016.
- ↑ "Jon Favreau Still Wants To Do 'Magic Kingdom'; Could Be After 'Jungle Book' - /Film". March 10, 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1966 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- யூத நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- மீநாயகன் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- அமெரிக்கத் திரைக்கதை எழுத்தாளர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் நகைச்சுவையாளர்கள்
- அமெரிக்கக் குரல் நடிகர்கள்
- அமெரிக்க தொலைக்காட்சி நடிகர்கள்