அயன் மேன் (2008 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அயன் மேன் 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அயன் மேன்
Iron Man
திரைப்பட சுவரொட்டி
தயாரிப்பு
மூலக்கதைஅயன் மேன்
ஸ்டான் லீ
லாரி லீப்பெர்
டான் ஹெக்
ஜாக் கிர்பி
இசைரமீன் ஜவாடி
நடிப்பு
கலையகம்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்1
வெளியீடுஏப்ரல் 14, 2008 (2008-04-14)(Sydney premiere)
மே 2, 2008 (அமெரிக்கா)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$140 மில்லியன்
மொத்த வருவாய்$585.1 மில்லியன்

அயன் மேன் (ஆங்கிலம்:Iron Man) இது 2008ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், டெர்ரென்ஸ் ஹோவர்ட், ஜெப் பிரிட்ஜஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் 14, 2008ஆம் ஆண்டு வெளியானது.

கதைச்சுருக்கம்[தொகு]

டோனி ஸ்டார்க் என்பவர் தொழிற்துறைச் சார்ந்த மகிழ்ச்சியான இளைஞராகவும் மற்றும் நுண்ணறிவுமிக்கப் பொறியாளராகவும் இருந்தார். அவர் கடத்தப்பட்டு கடத்தல்காரர்களால் அதிகமான பேரழிவு ஆயுதங்களை உருவாக்குமாறு வற்புறுத்தப்பட்ட போது கடுமையான இதயக் காயத்தால் அவதிப்பட்டார். தனது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளவும் சிறைபட்ட நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் திறனுள்ள பாதுகாப்புக் கவச அங்கியை உருவாக்கினார். பின்னர் அவர் அயன் மேன் என்ற பாத்திரத்தின் மூலம் உலகத்தைக் காக்க இந்த அங்கியைப் பயன்படுத்திக் கொண்டார். டோனி தனது ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் என்ற பன்னாட்டு நிறுவனமான மூலமாக, இராணுவ ஆயுதங்கள் மற்றும் தனது சொந்த உலோக அங்கியைத் தொழில்நுட்பக் கருவிகளுடன் உருவாக்கி குற்றத்திற்கு எதிராக செயல்பட வைத்தார். பொது உடைமைத் தத்துதுவத்திற்கு எதிரான சண்டை யிட்டு அதில் எப்படி வெற்றி கண்டார் என்பது தான் கதை.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Iron Man (film)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.