ஸ்கார்லெட் ஜோஹான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுகார்லெட் ஜோஹன்சன்
Scarlett Johansson by Gage Skidmore 2 (cropped, 2).jpg
பிறப்புஇசுகார்லெட் இங்க்ரிட் ஜோஹன்சன்
நவம்பர் 22, 1984 (1984-11-22) (அகவை 38)
நியூயார்க், அமெரிக்கா
பணிநடிகை
பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ரியான் ரெனால்ட்ஸ் (2008-2011)
ரோமன் டையூரிங்க் (2014-2017)
கொலின் ஜோஸ்ட் (2020-)
பிள்ளைகள்2

இசுகார்லெட் இங்க்ரிட் ஜோஹன்சன் (ஆங்கில மொழி: Scarlett Ingrid Johansson) (பிறப்பு: நவம்பர் 22, 1984)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 2018 மற்றும் 2019 இல் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார், மேலும் போர்ப்ஸ் பத்திரிகையால் வெளியிட்ட பிரபல 100 பட்டியலில் பல முறை இடம்பெற்றுள்ளார். இவரது படங்கள் உலகளவில் $14.3 பில்லியனுக்கும் மேல் வசூல் செய்தன மற்றும் இவர் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த வசூல் நட்சத்திர வரிசையில் ஒன்பதாவது இடம் ஆகும்.

இவரின் நடிப்புத்திறனுக்காக இரண்டு அகாதமி விருதுகள் மற்றும் ஐந்து கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகளும், டோனி விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார்.

இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு குழந்தை நட்சத்திரமாக 'நோர்த்' என்ற திரைப்படம் மூலமாக நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.[2] அதை தொடர்ந்து மேன்னி & லியோ (1996), கோஸ்ட் வேர்ல்ட் (2001) போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் 2003 இல் சோபியா கொப்போலாவின் லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன் என்ற படத்தில் வயது வந்தோருக்கான வேடத்தில் நடித்தார், இது அவருக்கு சிறந்த நடிகைக்கான பாஃப்டா விருதை பெற்றுக்கொடுத்தது.

2010 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத்[3] திரைப்படங்களான அயன் மேன் 2,[4] தி அவெஞ்சர்ஸ் (2012),[5][6][7] கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014),[8] அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), பிளாக் விடோவ் (2021)[9] போன்ற படங்களில் பிளாக் விடோவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Scarlett Johansson". British Film Institute. November 17, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 20, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Shulgasser, Barbara (August 9, 1996). "Many things to like about "Manny & Lo'". San Francisco Chronicle. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/e/a/1996/08/09/WEEKEND6031.dtl. 
  3. "Heroes, Villains, Rejects, and A-Holes: The Marvel Cinematic Universe Ranked". /Film. May 10, 2017. October 1, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 30, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. Finke, Nikki (March 11, 2009). "Another 'Iron Man 2' Deal: Scarlett Johannson To Replace Emily Blunt As Black Widow For Lousy Lowball Money". Deadline Hollywood. May 1, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 28, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. Frost, Caroline (September 13, 2012). "Interview: Scarlett Johansson On Buffing Up For Avengers, Speaking Russian And Trying To Look Sexy...". HuffPost. http://www.huffingtonpost.co.uk/2012/09/13/interview-scarlett-johansson-avengers-assemble-marvel_n_1880147.html. 
  6. "Marvel's The Avengers (2012)". Rotten Tomatoes. June 30, 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 30, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. McClintock, Pamela (June 2, 2012). "Box Office Milestone: 'The Avengers' Becomes No. 3 Pic of All Time With $1.331 Billion". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/news/box-office-milestone-avengers-number-three-332331. 
  8. Earp, Catherine (August 16, 2014). "Captain America stars contributed to script". Digital Spy. October 2, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 2, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  9. Kit, Borys (July 12, 2018). "'Black Widow' Movie Finds Director in Cate Shortland (Exclusive)". The Hollywood Reporter. July 12, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 12, 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]