ஜேடன் சிமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேடன் சிமித்
Smith at The Nobel Peace Prize Concert 2009.
பிறப்பு ஜேடன் கிறிஸ்டோபர் சிமித்
சூலை 8, 1998 ( 1998 -07-08) (அகவை 18)
மாலிபு, கலிபோர்னியா, அமெரிக்கா
பணி நடிகர், ராப், நடன கலைஞர்
செயல்பட்ட ஆண்டுகள் 2002–அறிமுகம்
பெற்றோர் வில் சிமித்
ஜேதா பின்கட் ஸ்மித்

ஜேடன் சிமித் (Jaden Smith, பிறப்பு: ஜூலை 8, 1998) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், ராப் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் நடிகர் வில் சிமித்வின் மகன் ஆவார். இவர் 2002ம் ஆண்டு வில் சிமித் நடித்த மென் இன் ப்ளாக் II என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு தனது தந்தை வில் சிமித் வுடன் சேர்ந்து த பர்சூட் ஒப் ஹப்பிநேச்ஸ் மற்றும் ஆஃப்டர் ஏர்த் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சிமித் கமாலிபு, கலிபோர்னியா, அமெரிக்காவில் பிறந்தார். இவர் பிரபல நடிகர் வில் சிமித் மற்றும் நடிகை ஜேதா பின்கட் சிமித் ஆகியோரின் மகன் ஆவார். இவருக்கு வில்லோ சிமித் என்ற ஒரு தங்கை உள்ளார். சிமித்துக்கு டிரே சிமித் என்ற ஒரு மூத்த அரை சகோதரர் உண்டு.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

இவர் 2002ம் ஆண்டு வில் சிமித் நடித்த மென் இன் ப்ளாக் II என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு தனது தந்தை வில் சிமித் வுடன் சேர்ந்து த பர்சூட் ஒப் ஹப்பிநேச்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக 2007 எம்டிவி திரைப்பட விருது வென்றார். அதை தொடர்ந்து 2008ம் ஆண்டு த டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில் என்ற திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படம் 1951ம் ஆண்டு வெளியான த டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில் என்ற திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும்.

2010ம் ஆண்டு நடிகர் ஜாக்கி சான் உடன் சேர்ந்து த கராத்தே கிட் என்ற திரைப்படத்தில் நடித்தார். மே 2013ம் ஆண்டு இவர் தனது வில் சிமித் வுடன் சேர்ந்து ஆஃப்டர் ஏர்த் என்ற திரைபடத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை எம். நைட் ஷியாமளன் இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

  • 2003-2004: ஆல் ஒப் Us
  • 2008: த சூட் லைஃப் ஆப் ஜேக் & கோடி

இசை வீடியோக்கள்[தொகு]

  • 2008: அலீசியா கீசு - சூப்பர் பெண்
  • 2010: வில்லோ ஸ்மித்
  • 2013: மேலோடிக் சோடிக்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேடன்_சிமித்&oldid=2216167" இருந்து மீள்விக்கப்பட்டது