முகம்மது அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகம்மது அலி
Muhammad Ali
Muhammad Ali NYWTS.jpg
1967 இல் அலி
புள்ளிவிபரம்
செல்லப்பெயர் தி கிரேடேஸ்ட்,
தி சாம்ப்,
தி லூயிவிள்ளே லிப்
பிரிவு மிகுஎடை
உயரம் 6 அடி 3 அங் (191 செமீ)[1]
நீட்ட தூரம் 78 அங் (198 செமீ)
தேசியம் அமெரிக்கர்
பிறப்பு ஜனவரி 17, 1942(1942-01-17)
பிறந்த இடம் லூயிவில் (கென்டக்கி), ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஜூன் 3, 2016 (அகவை 74)
இறப்பு இடம் பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
நிலை Orthodox
குத்துச்சண்டைத் தரவுகள்
மொத்த சண்டைகள் 61
வெற்றிகள் 56
வீழ்த்தல் வெற்றிகள் 37
தோல்விகள் 5
பதக்க சாதனைகள்
ஆண்களுக்கான குத்துச்சண்டை
 அமெரிக்கா போட்டியாளர்
தங்கம் 1960 ரோம் மெல்லிய மிகு எடை

முகம்மது அலி (Muhammad Ali, இயற்பெயர்: காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr.; சனவரி 17, 1942 - சூன் 3, 2016),[2] ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மற்றும் மூன்று முறை மிகுஎடை உலக வெற்றி வீரர். உலகிலயே தலைசிறந்த மிகுஎடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படுபவர். ஆரம்ப காலங்களில், ரோமில் 1960-ஆம் ஆண்டு நடைபெற்ற 1960 ஒலிம்பிக்கு மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் தொடர் மிகுஎடை வெற்றிகள் மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.

1964-ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975-ஆம் ஆண்டு சன்னி முசுலிமாக மாறினார். 1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தார். வியட்நாம் போரிற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் 2016ஆம் ஆண்டு சூன் 3ஆம் தேதி இயற்கை எய்தினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cassius Clay". sports-reference.com. Sports Reference LLC. பார்த்த நாள் சனவரி 17, 2014.
  2. Schuppe, Jon (சூன் 3, 2016). "Muhammad Ali, "The Greatest" of all time, dead at 74". NBC News. http://www.nbcnews.com/news/sports/muhammad-ali-greatest-all-time-dead-74-n584776. பார்த்த நாள்: சூன் 3, 2016. 
  3. "குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு". தி இந்து. பார்த்த நாள் 4 சூன் 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அலி&oldid=2072525" இருந்து மீள்விக்கப்பட்டது