இஸ்லாம் தேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இஸ்லாம் தேசத்தின் கொடி
இன்று இஸ்லாம் தேசம் தலைவர் லூயிஸ் ஃபரக்கான்

இஸ்லாம் தேசம் (Nation of Islam) என்பது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். இவ்வமைப்பை உருவாக்கியவர் டிட்ராயிட், மிச்சிகனில் 1930ல் பிறந்த வாலஸ் ஃபரத் முகமது என்பவராவார். ஃபரத் முகமது 1934ல் காணாமல் போய் இவரின் முதலாம் பக்தர்களின் ஒருவர், எலைஜா முகமது, இந்த சமயத்தை வளர்த்தெடுத்தார். புகழ்பெற்ற பேச்சாளர் மால்கம் எக்ஸ் இச்சமயத்தை சேர்ந்ததில் 1950கள், 1960களில் அமெரிக்காவின் சமூக உரிமை இயக்கத்தில் இச்சமயத்துக்கு செல்வாக்கு வந்தது. ஆனால் மால்கம் எக்ஸின் 1965 கொலைக்குப் பின்பு இஸ்லாம் தேசம் பிரிய ஆரம்பித்தது. 1975 இல் எலைஜா முகமது காலமானார். இவரின் மகன், இமாம் வாரித் தீன் முகமது இஸ்லாம் தேசத்தை சுணி இஸ்லாமுக்கு மாற்ற முனைந்தார். இதனால் 1978 இல் இஸ்லாம் தேசம் இரண்டாக பிரிந்தது. வாரித் தீன் முகமது ஒரு பிரிவில் தலைவராக இருந்து பெயரை "முஸ்லிம் அமெரிக்க சங்கம்" என்று மாற்றினார். இரண்டாம் பிரிவில் லூயிஸ் ஃபரக்கான் தலைவராக் இருந்து இஸ்லாம் தேசம் என்று கூறி இன்று வரை இந்த இரண்டு பிரிவுகள் உள்ளன. இன்று சிக்காகோவில் அமைந்த மார்யம் மசூதியில் ஃபரக்கானின் இஸ்லாம் தேசத்தின் அடித்தளம் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாம்_தேசம்&oldid=1827701" இருந்து மீள்விக்கப்பட்டது