ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்
Spider-Man: Homecoming
Theatrical release poster
இயக்கம்ஜோன் வாட்ஸ்
தயாரிப்பு
மூலக்கதை
சிலந்தி மனிதன்
படைத்தவர்
 • ஸ்டேன் லீ
 • ஸ்டீவ் டிட்கோ
திரைக்கதை
 • ஜோனதன் கோல்ட்ஸ்டைன்
 • ஜான் பிரான்சிஸ் டேலி
 • ஜோன் வாட்ஸ்
 • கிறிஸ்டோபர் ஃபோர்டு
 • கிறிஸ் மெக்கன்னா
 • எரிக் சோமர்ஸ்
இசைமைக்கேல் ஜெய்சினோ
நடிப்பு
 • டாம் ஹாலண்ட்
 • மைக்கேல் கீட்டன்
 • ஜான் ஃபேவரூ
 • ஸெண்டாயா
 • டொனால்டு க்ளோவர்
 • டைன் டேலி
 • மாரீமா டோமி
 • ராபர்ட் டவுனி ஜூனியர்
ஒளிப்பதிவுசால்வடோர் டொட்டினோ
படத்தொகுப்பு
 • டான் லெபண்டல்
 • டெப்பி பெர்மன்
விநியோகம்சோனி பிக்சர்ஸ்[1]
வெளியீடுசூன் 28, 2017 (2017-06-28)(டிஎல்சி சீன தியேட்டர் )
சூலை 7, 2017 (United States)
ஓட்டம்133 நிமிடம்[2]
நாடுஅமேரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$175 மில்லியன்[3]
மொத்த வருவாய்$880.2 மில்லியன்[3]

ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (Spider-Man: Homecoming) என்பது 2017 ஆண்டைய அமெரிக்க உச்சநாயக திரைப்படம் ஆகும். இது மார்வல் காமிக்சின் பாத்திரமான சிலந்தி மனிதனை அடிப்படையாகக் கொண்டது. கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்து, சோனி பிக்சர்சால் விநியோகம் செய்யப்பட்டது. இது ஸ்பைடர் மேன் திரைப்பட மறுதொடக்கத்தில் இரண்டாவது மற்றும் மாவல் திரைப் பிரபஞ்சத்தின் பதினாறாம் படம் ஆகும். இப்படத்தின் திரைக்கதையானது ஜொனாதன் கோல்ட்ஸ்டைன், ஜான் பிரான்சிஸ் டாலே, வாட்ஸ், கிறிஸ்டோபர் ஃபோர்டு, கிறிஸ் மெக்கென்னா, எரிக்க் சொம்மர் ஆகியோர் அடங்கிய குழுவால் எழுதப்பட்டது. இந்தத் திரைப்படம் ஜான் வாட்சால் இயக்கப்பட்டது. படத்தில் டாம் ஹாலண்ட் , மைக்கேல் கீடன், ஜான் ஃபேவரூ, ஜென்டாயா, டொனால்ட் க்ளோவர், டைன் டேலி, மரிசா டோமீய் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் படத்தில் பீட்டர் பார்கர் ஸ்பைடர் மேன் என்ற நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையை என இரண்டையும் நிலைப்படுத்த முயற்சிக்கிறார்.

2015 பெப்ரவரியில், மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் சோனி ஆகியவை ஸ்பைடர் மேன் பாத்திர உரிமைகளை பகிர்ந்து கொள்ளும் விதாமன ஒரு ஒப்பந்தத்தை எட்டின. அடுத்த சூன் மாதம், படத்தில் ஹோலண்ட் முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடிக்கவும், வாட்ஸ் இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதைத்தோடர்ந்து விரைவில் டேலி மற்றும் கோல்ட்ஸ்டைன் ஆகியோரை ஒப்பந்தம் செய்தனர். 2016 ஏப்ரலில், டவுனி தனது MCU பாத்திரங்களான டோனி ஸ்டார்க் / ஐயன் மேன் என்ற பாத்திரங்கள் உள்ளிட்ட கூடுதல் நடிகர்களைச் சேர்க்க, இந்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. படத்தின் முதன்மை படப்பிடிப்பு 2016 சூன் அன்று ஜோர்ஜியாவின் ஃபயௌட் கவுண்டியில் உள்ள பைன்வுட் அட்லாண்டா ஸ்டுடியோவில் தொடங்கி, அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் தொடர்ந்து நடந்தது. முந்தைய ஸ்பைடர்-மேன் படங்களில் இருந்து இந்த திரைப்படத்தை வேறுபடுத்திக் காட்ட தயாரிப்பு குழு முயற்சி செய்தது.

ஸ்பைடர் மேன்: ஹோம்கம்மிங் 2017 சூன் 28 அன்று ஹாலிவுட்டில் திரையிடப்பட்டது, மேலும் 2017 சூலை 7 இல் அமெரிக்காவில் 3D, IMAX மற்றும் IMAX 3D இல் வெளியிடப்பட்டது. இப்படம் உலகளவில் 880 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. மிக வெற்றிகரமான இரண்டாவது ஸ்பைடர் மேன் திரைப்படம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் மிக அதிக அளவில் வசூல் செய்த படம் ஆகும். மேலும் இது விமர்சகர்களிடன் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியானது 2019 சூலை 5 அன்று வெளியிடப்பட உள்ளது.

கதை[தொகு]

2015 ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் ஸ்பைடர் மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோசுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார். அந்த படத்தின் தொடர்ச்சியாகவே `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' உருவாகியிருக்கிறது.

அந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை காவல்துறையிடம் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார். இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு விநியோகிப்பது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் விநியோகம் செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார்.

அப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.

ஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு ஆடையை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது அவஞ்சர்ஸ் குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.

பிறகு ஒரு சொதப்பலான ஒரு ஸ்பைடர் மேன் ஆடையை அணிந்தபடியே, பல சாகசங்களைச் செய்து வில்லனைக் காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்து அயர்ன் மேனின் பாராட்டைப் பெறுகிறான் பீட்டர் பார்க்கர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Film Review: ‘Spider-Man: Homecoming’". செய்தி. variety.com (2017 சூன் 29). பார்த்த நாள் 27 ஏப்ரல் 2018.
 2. "SPIDER-MAN: HOMECOMING (2017)". bbfc.co.uk. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2018.
 3. 3.0 3.1 "Spider-Man: Homecoming (2017)". பாக்சு ஆபிசு மோசோ. மூல முகவரியிலிருந்து September 11, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 26, 2017.