ஜான் பிரான்சிசு டேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் பிரான்சிசு டேலி
John Francis Daley in March 2012.jpg
பிறப்புசூலை 20, 1985 (1985-07-20) (அகவை 37)
வீலிங், இல்லினாய்ஸ், ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1998–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கொரின் கிங்ஸ்பரி (தி. 2016)
பிள்ளைகள்1

ஜான் பிரான்சிசு டேலி (ஆங்கில மொழி: John Francis Daley) (பிறப்பு: 20 சூலை 1985) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர், இசைக்கலைஞர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'புரீக்ஸ் அண்ட் கீக்சு' (1999-2000) என்ற நகைச்சுவை நாடகத்தில் உயர்நிலைப் பள்ளி புதிய மாணவராக சாம் வீர் என்ற கதாபாத்திரத்திலும், 'போனசு' (2014-2017) என்ற புலன் விசாரணை குற்றவியல் தொடரில் விவரிப்பாளர் டாக்டர். லான்ஸ் ஸ்வீட்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் அறியப்படுகிறார். இதற்காக இவர் 2014 ப்ரிஸ்ம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[1] அத்துடன் இவர் டேபிளேயர் என்ற இசைக்குழுவுவில் கீபோர்டு வாசிப்பார் மற்றும் பாடகராகவும் உள்ளார்.[2]

இவர் திரைப்படத்துறையில் ஜொனாதன் கோல்ட்ஸ்டைனுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டதற்காக அறியப்படுகிறார். இந்த ஜோடி பல்வேறு திட்டங்களில் ஒன்றாக வேலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஜோன் வாட்ஸ், கிறிஸ்டோபர் போர்டு, கிறிஸ் மெக்கேனா மற்றும் எரிக் சோமர்ஸ் ஆகியோருடன் இணைந்து இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[3][4] (2017) என்ற படத்துக்காக இணை கதை எழுத்தாளர்களாக பணிபுரிந்துள்ளார், மேலும் இவர்கள் 2018 நகைச்சுவை 'கேம் நைட்' என்ற படத்தை இணைந்து இயக்கியுள்ளனர்.[5]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

டேலி 20 சூலை 1985 சிகாகோவில் உள்ள புறநகர்ப் பகுதியான வீலிங், இல்லினாய்ஸில் நடிகரான ஆர்.எஃப். டேலி என்பவருக்கும், ஒரு பியானோ ஆசிரியரான நான்சி டேலி என்பவருக்கும் மகனாக பிறந்தார். இவரது தந்தை ஐரிய கத்தோலிக்க பின்னணியை சேர்ந்தவர் மற்றும் தாயார் யூதர் ஆவார்.[6][7][8][9] இவர் நியூயார்க்கில் உள்ள நயாக்கில் வளர்ந்தார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "John Francis Daley as Lance Sweets". TV.com. மே 26, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 20, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Dayplayer", My space.
  3. "Back To Walley World: The Griswolds Go On 'Vacation' Again". NPR. July 25, 2015. July 28, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 26, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Fleming, Mike Jr. (June 2, 2015). "'Spider-Man' Director Short List Topped By Ted Melfi & Jonathan Levine". Deadline Hollywood. June 2, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 2, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. Lee, Chris (21 June 2018). "How Game Night Broke Modern Comedy's Rules to Win at the Box Office". Vulture.com. https://www.vulture.com/2018/06/how-game-night-broke-modern-comedys-rules.html. 
  6. "Interfaith Celebrities: a Former Geek, the Equestrian Author, and an Aboriginal Jewish Doctor". InterfaithFamily.com. July 5, 2011. மே 12, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 15, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. "John Francis Daley". Twitter – @JohnFDaley. February 23, 2012. March 15, 2012 அன்று பார்க்கப்பட்டது. For Ash Wednesday, I have my Irish Catholic dad put the ash on my forehead, then I have my Jewish mother lick her thumb and wipe it off.
  8. "John Francis Daley on co-writing tonight's episode of 'Bones' and sharing a scene with his dad for the first time. (Awww.)". Entertainment Weekly. April 14, 2011. June 4, 2013 அன்று பார்க்கப்பட்டது. I have sympathy nerves for everyone. I think it's the half-Jew in me.
  9. "The Talented Mr Daley". meinmyplace.com. September 2012. March 15, 2012 அன்று பார்க்கப்பட்டது. Um my mom's Jewish and my dad's Irish. I am in fact the same mix as Harrison Ford, which I like to point out as often as possible when I go on dates.
  10. Sklar, Ronald. "John Francis Daley: Cult Star Confidential". Pop Entertainment. 12 July 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பிரான்சிசு_டேலி&oldid=3538877" இருந்து மீள்விக்கப்பட்டது