ஜேக்கப் படலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேக்கப் படலோன்
Jacob Batalon by Gage Skidmore.jpg
பிறப்புஅக்டோபர் 9, 1996 (1996-10-09) (அகவை 26)[1]
ஹொனலுலு, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2016–இன்று வரை

ஜேக்கப் படலோன் (Jacob Batalon, பிறப்பு:அக்டோபர் 9, 1996) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'நெட் லீட்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[2][3][4]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

படலோன் 9 அக்டோபர் 1996 ஆம் ஆண்டு ஹொனலுலு, ஹவாய்யில் பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு மகனாக பிறந்தார்.[5] இவர் தனியார் கத்தோலிக்க பள்ளி செயின்ட் அந்தோனி பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் டேமியன் மெமோரியல் பள்ளிக்குச் சென்றார், பின்னர் படலோன் கபியோலானி சமுதாயக் கல்லூரியில் இசைக் கோட்பாட்டைப் படித்தார், ஆனால் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அவர் நாடகக் கலைகளுக்கான நியூயார்க் கன்சர்வேட்டரியில் நடிப்பு சார்ந்த இரண்டு ஆண்டுக்கான படிப்பை படித்தார்.[6]

நடிப்புத்துறை[தொகு]

இவர் 2016 ஆம் ஆண்டில் 'நார்த் வுட்ஸ்' என்ற திரைப்படத்தில் தோன்றியதன் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங் என்ற திரைப்படத்தில் பீட்டர் பார்க்கின் நண்பனான 'நெட் லீட்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[7] பின்னர் அதன் தொடர்ச்சியான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களில் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[8] 2018 ஆம் ஆண்டில் வயது வந்தோருக்கான 'எவெரி டே' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[9]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

படலோனுக்கு ஏழு அரை உடன்பிறப்புகள் உள்ளனர். அவரது தாய்வழியில் இருந்து ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி மற்றும் அவரது தந்தை வழியில் இருந்து மூன்று சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். 2020 ஆம் ஆண்டில் பெயரிடப்படாத ஸ்பைடர் திரைப்படத்தொடருக்காக இவரின் கதாபாத்திரத்திற்காக 120 கிலோ உடல் எடையிலிருந்து 54 கிலோ குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Jimmy Kimmel & Jacob Batalon Surprise FaceTime with Tom Holland". Jimmy Kimmel Live!. July 13, 2007. June 6, 2008 அன்று பார்க்கப்பட்டது – YouTube வழியாக.
 2. Collura, Scott (April 3, 2017). "17 Things We Learned on the Set of Spider-Man: Homecoming". IGN. January 3, 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 3, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 3. Strom, Marc (July 23, 2016). "SDCC 2016: 'Spider-Man: Homecoming' Introduces Its Villain". Marvel.com. June 12, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 12, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 4. Leadbeater, Alex (November 15, 2016). "Spider-Man: Homecoming's Jacob Batalon is Playing Ned Leeds". Screen Rant. https://screenrant.com/spider-man-homecoming-ned-leeds-actor/. 
 5. Fuster, Jeremy (July 7, 2017). "Jacob Batalon Ready for Big Time With 'Spider-Man: Homecoming' Debut". TheWrap. May 17, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. Levine, Daniel S. (March 28, 2017). "Jacob Batalon: 5 Fast Facts You Need to Know". Heavy.com. May 17, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 7. Erbland, Kate (July 7, 2017). "How 'Spider-Man: Homecoming' Star Jacob Batalon Went From College Dropout to Blockbuster Star". IndieWire. July 9, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 8. Dumaraog, Ana (July 15, 2018). "Peter's Classmates Return in Spider-Man: Far From Home Set Photo". Screen Rant. July 15, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 9. N'Duka, Amanda (July 7, 2017). "Maria Bello, Debby Ryan, 'Spider-Man: Homecoming's Jacob Batalon & More Join 'Every Day' From MGM". Deadline Hollywood. July 9, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 10. Hickson, Colin (October 30, 2020). "Spider-Man 3's Jacob Batalon Shares His (and Ned's) Incredible Weight Loss". Comic Book Resources. October 30, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 11. Slater, Georgia (October 31, 2020). "Spider-Man Star Jacob Batalon Shows Off Weight Loss and Reveals New Look for Third Movie". People.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேக்கப்_படலோன்&oldid=3205151" இருந்து மீள்விக்கப்பட்டது