அமி பாஸ்கல்
அமி பாஸ்கல் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 25, 1958 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
பணி | தொழில் நிர்வாகி, திரைப்படத் தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | பெர்னார்ட் வெய்ன்ராப் (தி. 1997) |
பிள்ளைகள் | 1 |
அமி பாஸ்கல் (ஆங்கில மொழி: Amy Pascal) (பிறப்பு:மார்ச்சு 25, 1958) என்பவர் தொழில் நிர்வாகி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2006 முதல் 2015 வரை இணைத் தலைவராக மோனி பிக்சர்ஸ் குழுமத்தின் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். இவர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் மேற்பார்வையாளராகவும் மேலும் 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சோனி பிக்சர்ஸ் ஹேக்கின் இணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இவரது பாஸ்கல் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் கோஸ்ட்பஸ்டர்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.[1] ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017),[2] தி போஸ்ட் (2017), மோலி'ஸ் கேம் (2017)[3] போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். தி போஸ்ட் மற்றும் லிட்டில் வுமன்[4] என்ற திரைப்படத்தை தயாரித்ததற்காக சிறந்த படத்திற்கான இரண்டு அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amy Pascal Ends 30-Year Sony Run With Universal First Look Deal". Deadline Hollywood. 2019-05-01.
- ↑ "Spider-Man: Far from Home (2019)". Box Office Mojo. ஐ. எம். டி. பி இணையத்தளம்.
- ↑ "Molly's Game (2017)". Box Office Mojo. ஐ. எம். டி. பி இணையத்தளம்.
- ↑ Donnelly, Matt (November 26, 2019). "Saoirse Ronan Knows 'Little Women' Is the Performance of Her Career". Variety. பார்க்கப்பட்ட நாள் November 26, 2019.