உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெப்ரி போர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெப்ரி போர்ட்
பிறப்புபெப்ரவரி 16, 1968 (1968-02-16) (அகவை 56)
நோவாடோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை

ஜெப்ரி போர்ட் (பெப்ரவரி 16, 1968) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் சிறந்த திரைப்படத் தொகுப்பாளருக்கான ஏ.சி.இ எடி விருதுக்கு 'தி பேமிலி ஸ்டோன்' என்ற திரைப்படத்திற்கும், 'ஒன் அவர் போட்டோ' என்ற படத்துக்காக கோல்டன் சேட்டிலைட் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.[1] இவருக்கு தான் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் கூறிய "மற்றும் நான் ... அயர்ன் மேன்!"[2] என்ற வசனம் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படத்தில் இருந்து சேர்க்கும் யோசனை வந்தது[3]

இவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தி அவெஞ்சர்ஸ் (2012), அயன் மேன் 3 (2013), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jeffrey Ford - Awards
  2. Quotes from "Avengers: Endgame", 2019-07-28
  3. Endgame Writers, Russo Bros & Anthony Mackie Reveal Deleted Scene, Surprises & Decapitated Cap Idea, July 22, 2019, பார்க்கப்பட்ட நாள் July 28, 2019

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்ரி_போர்ட்&oldid=3086887" இலிருந்து மீள்விக்கப்பட்டது