பீட்டர் டிங்க்லேஜ்
பீட்டர் டிங்க்லேஜ் | |
---|---|
2013 இல் பீட்டர் டிங்க்லேஜ் | |
பிறப்பு | பீட்டர் ஹைடன் டிங்க்லேஜ் சூன் 11, 1969 மோரிஸ் நகரம், நியூ ஜெர்சி, ஐக்கிய மாகாணங்கள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பெனிங்டன் கல்லூரி |
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995– தற்போது |
உயரம் | 4 அடி 5 அங் (135 cm)[1][2] |
வாழ்க்கைத் துணை | எரிகா ஷ்மிட் (தி. 2005) |
பிள்ளைகள் | 2 |
பீட்டர் ஹைடன் டிங்க்லேஜ் (பிறப்பு: ஜூன் 11, 1969) என்பவர் அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
டின்கிலேஜ் பெனிங்டன் கல்லூரியில் நடிப்பதைப் பற்றி படித்துள்ளார். அங்கு பல மேடை நாடகங்களை தயாரித்துள்ளார். திரைப்படத்துறையில் லிவிங் இன் ஆப்லீயன் (1995) என்ற படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகம் ஆனார்.
தி ஸ்டேஷன் ஏஜெண்ட் (2003) என்ற நகைச்சுவைத் திரைப்படத்திற்குப் பிறகு புகழ் பெற்ற நடிகரானார். அதன் பின் எண்ணற்ற படங்களிலும், அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
எல்ஃப் (2003), பைன்ட் மி கில்லிடி (2006), அண்டர்டாக் (2007), பெனெலோப் (2008), டெத் அட் எ பர்னல் (2007), த குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா: பிரின்ஸ் காஸ்பியன் (2008), எக்ஸ்-மென்: டேஸ் ஆப் பியூச்சர் பாஸ்ட் (2014) மற்றும் மூன்று பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி (2017) போன்ற திரைப்படங்களில் குறிப்பிடத் தக்க கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது பெற்றார்.
2009 லிருந்து எச்பிஓ தொலைக்காட்சியில் வெளியான கேம் ஆப் திரோன்ஸ் தொடரில் தெரியன் லேன்சிஸ்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக பிரைம்டைம் எம்மி விருதுக்கு தொடர்ச்சியாக ஏழு முறை பரிந்து செய்யப்பட்டு, மூன்று முறை பிரைம்டைம் எம்மி விருதினை வென்றுள்ளார். 2012 ல் தொலைக்காட்சி தொடருக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றார்.[3]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Edward Guthmann (October 12, 2003). "'Station' actor draws big attention / Peter Dinklage a Sundance hit in first-ever lead role for a dwarf". SF Gate. Archived from the original on August 13, 2014. பார்க்கப்பட்ட நாள் April 26, 2018.
- ↑ Tom Dawson (October 28, 2014). "BBC - Films - Peter Dinklage". BBC. பார்க்கப்பட்ட நாள் January 19, 2019.
- ↑ https://www.goldenglobes.com/person/peter-dinklage
வெளி இணைப்புகள்
[தொகு]பொது
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பீட்டர் டிங்க்லேஜ்
- Dinklage&middle= பீட்டர் டிங்க்லேஜ் at the Internet Off-Broadway Database
- எம்மிசை.காமில் பீட்டர் டின்கில்ஜ்
- Dan Kois (March 29, 2012). "Peter Dinklage Was Smart to Say No". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2012/04/01/magazine/peter-dinklage-was-smart-to-say-no.html.
நேர்காணல்கள்