எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
X-Men
தயாரிப்பாளர்லாரன் ஷுலர் டோன்னர்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
நாடுஅமெரிக்கா
ஆக்கச்செலவுTotal (10 films):
$1.358 பில்லியன்
மொத்த வருவாய்Total (10 films):
$4.996 billion

எக்ஸ்-மென் X-Men (film series) என்பது எக்ஸ்-மென் எனும் நகுதிறன் நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மீநாயகன் திரைப்படத் தொடர்கள் ஆகும். ஸ்டேன் லீ மற்றும் ஜேக் கிர்பி ஆகியோர் இந்தக் கதாப்பாத்திரத்தை உருவாக்கினர். இதனை மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் திரைப்படத்திற்கான உரிமையை 1994 ஆம் ஆண்டு பெற்றது.

எக்ஸ்-மென், எக்ஸ்2, எக்ஸ்-மென்:முதல் வகுப்பு, தெ வோல்வரின், எக்ஸ்-மென்:டேய்ஸ் ஆஃப் ஃபியூசர் பாஸ்ட், டெட்போல் மற்றும் லோகன் ஆகிய திரைப்படங்கள் திறனாய்வாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் எக்ஸ்-மென், தி லாஸ்ட் ஸ்டேன்ட் மற்றும் எக்ஸ்-மென்:அபோகலிப்ஸ் ஆகியவை கலவையான விமர்சனங்களைத் தந்தது. எக்ஸ்-மென் தொடக்கம், வோல்வரின் ஆகியவை எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தன.

எக்ஸ் மென் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதனுடைய கிளைக் கதைகளும் உருவாகின. குறிப்பாக அதன் நாயகன் ஓல்வரினுடைய கதைகள். எக்ஸ் மென் தொடக்கம்: ஓல்வரின் (2009), தெ ஓல்வரின் (2013), மற்றும் லோகன் (2017) மேலும் முற்தொடர்ச்சியாக எக்ஸ் மென் :முதல் வகுப்பு 2011 ஆம் ஆண்டும் அதன் பின் தொடர்ச்சி பாகமான எக்ஸ் மென்- டேய்ஸ் ஆஃப் ஃபியூச்சர் பாஸ்ட்(2014) ஆம் ஆண்டு வெளியானது.

இதுவரை மொத்தம் பத்து பாகங்கள் வெளிவந்துள்ளன. இதுவரை வந்த திரைப்படத் தொடர்களிலேயே 7 ஆவது மிக அதிகமாக வசூலைப் பெற்றுத் தந்துள்ளது. (4.9 பில்லியன் உலகம் முழுவதும்) மேலும் டெட்பூல் 2 ஆம் பாகம், எக்ஸ் மென் : டார்க் ஃபீனிக்ஸ் 2018 ஆம் ஆண்டிலும் தெ நியூ மியூட்டன்ட்ஸ் 2019 ஆம் ஆண்டிலும் வெளியாகவிருக்கிறது.

வெளியான திரைப்படங்கள்[தொகு]

திரைப்படம் வெளியான திகதி இயக்குனர்
எக்ஸ்-மென் சூலை 14, 2000 (2000-07-14) பிறையன் சிங்கர்
எக்ஸ்-மென் 2 மே 2, 2003 (2003-05-02)
எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் மே 26, 2006 (2006-05-26) பிரெட் ரட்னர்
எக்ஸ்-மென் தொடக்கம்: வோல்வரின் மே 1, 2009 (2009-05-01) கேவின் ஹூட்
எக்ஸ்-மென் முதல் வகுப்பு சூன் 3, 2011 (2011-06-03) மத்தேவ் வஃஹன்
வோல்வரின்-2 சூலை 26, 2013 (2013-07-26) ஜேம்ஸ் மங்கோல்ட்
எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று மே 23, 2014 (2014-05-23) பிறையன் சிங்கர்
டெட்பூல் பெப்ரவரி 12, 2016 (2016-02-12) டிம் மில்லர்
எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் மே 27, 2016 (2016-05-27) பிறையன் சிங்கர்
லோகன் மார்ச்சு 3, 2017 (2017-03-03) ஜேம்ஸ் மங்கோல்ட்
டெட்பூல் 2 மே 18, 2018 (2018-05-18) டேவிட் லெவிட்ச்

வெளியாக உள்ள திரைப்படங்கள்[தொகு]

எக்ஸ்-மென் (2000)[தொகு]

1994 ஆம் ஆண்டு 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் லாரன் ஷுலர் டோன்னர் எக்ஸ்-மென் கதையை திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றனர்.[1] ஆன்ட்ரூ கெவின் வாக்கர் எழுத்தாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜேம்ஸ் கேமரான் இந்தப்படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்தார்.[2] பிரையன் சிங்கர் இந்தத் திரைப்படத்தை இயக்குவதாக 1996 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஜான் லோகன், ஜோஸ் வெடன், எட் சாலமோன், கிறிஸ்டோபர் , மற்றும் டேவிட் ஹைடர் ஆகியோர் திரைக்கதையை அமைத்தனர்.[1][3] 1999,தொராண்டோ,கனடாவில் தொடங்கப்பட்ட இத் திரைப்படம் மார்ச்,2000 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது.[4] இந்த்திரைப்படம் சூலை 14 ,2000 இல் வெளியானது.[5]

எக்ஸ்-மென் 2 (2003)[தொகு]

இந்த பாகத்தில் கர்னல் வில்லியம் ஸ்டிரைக்கர் சிறையில் உள்ள மேக்னட்டோவை சில கேள்விகள் கேட்டு அவரை குழப்பமடையச் செய்கிறார். மேலும் சேவியரை குழப்பமடையச் செய்து செரப்ரோ இயந்திரத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து விகாரிகளையும் (மியூட்டன்ட்) கொலை செய்ய திட்டம் தீட்டுகிறான். அதனை எக்ஸ்-மென்னும் அவனுடைய சகாக்களும் அதனை முறியடிக்கின்றனர்.

டேவிட் ஹைடர் மற்றும் சக் பென் ஆகியோர் திரைக்கதையை எழுதிய இந்த பாகம் திசெம்பர்,2002 ஆம் ஆண்டு வெளியானது.[6][7] மைக்கேல் தோகர்டி மற்றும் டான் ஹாரிஸ் ஆகியோர் திரைக்கதையில் மற்றம் செய்தனர். 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் வான்கூவரில் தொடங்கப்பட்டு 2002, அக்டோபர் மாதம் முடிவடைந்தது. 2003 ஆம் ஆண்டு மே 2 இல் இந்தத் திரைப்படம் வெளியானது.[6]

வெளியிணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Jensen, Jeff (July 21, 2000). "X-Men — Marvel's mutants leap onto the big screen". Entertainment Weekly. மூல முகவரியிலிருந்து May 5, 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 8, 2007.
  2. Molloy, Tim (March 25, 2012). "Chris Claremont's Dream X-Men Movie: James Cameron, Kathryn Bigelow, and Bob Hoskins as Wolverine". TheWrap.com. Archived from the original on March 9, 2016. http://www.thewrap.com/movies/article/chris-claremonts-dream-x-men-movie-james-cameron-kathryn-bigelow-and-bob-hoskins-wolverine-3/?page=0,0. பார்த்த நாள்: October 11, 2014. 
  3. Seymour, Craig (May 10, 2000). "Buffy creator slams The X-Men movie". Entertainment Weekly. மூல முகவரியிலிருந்து February 3, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 22, 2007.
  4. "Greg's Preview – X-Men". Yahoo!. மூல முகவரியிலிருந்து January 11, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 11, 2007.
  5. "X-Men (2000)". Box Office Mojo. மூல முகவரியிலிருந்து December 16, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 19, 2017.
  6. 6.0 6.1 Schmitz, Greg Dean. "Greg's Preview – X2: X-Men United". Yahoo!. மூல முகவரியிலிருந்து February 19, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 11, 2007.
  7. Peter Sanderson (2003). X-Men: The Ultimate Guide. Dorling Kindersley. பக். 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7513-4617-9.