டெரன்ஸ் ஹோவர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Terrence Howard - Monte-Carlo.jpg
பிறப்புடெரன்ஸ் டாஷோன் ஹோவர்ட்
மார்ச்சு 11, 1969 (1969-03-11) (அகவை 52)
சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், பாடகர்-பாடலாசிரியர், ராப்பர், பதிவு தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–2020
வாழ்க்கைத்
துணை
 • லோரி மெக்காமஸ்
  (தி. 1994; ம.மு. 2003)

  (m. 2005; div. 2007)
 • மைக்கேல் ஏஜென்ட்
  (தி. 2010; ம.மு. 2013)
 • மீரா பாக்
  (தி. 2013; ம.மு. 2015)
பிள்ளைகள்5
வலைத்தளம்
https://tcotlc.com/

டெரன்ஸ் ஹோவர்ட் (மார்ச்சு 11, 1969) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர்-பாடலாசிரியர், ராப்பர் மற்றும் பதிவு தயாரிப்பாளர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு 'தி ஜாக்சன்ஸ்: அமெரிக்கன் ட்ரீம்' என்ற தொலைக்காட்சி குறுந்தொடர் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். 1995 ஆம் ஆண்டு இவர் நடித்த 'டெட் ப்ரெசிடெண்ட்ஸ்' மற்றும் 'மிஸ்டர். ஹாலண்டின் ஓபஸ்' போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிக பெரிய வெற்றியையும் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதை தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் வெற்றி நடிகராக வளம் வந்தார். 2005 ஆம் ஆண்டு வெளியான 'ஹஸ்டில் & ஃப்ளோ' என்ற திரைப்படத்திற்க்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

இவர் வின்னி மண்டேலா, ரே, லக்கவன்னா ப்ளூஸ், கிராஷ் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படமான அயன் மேன் என்ற திரைப்படத்தில் வார் மெஷின் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1][2] 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 'எம்பயர்' என்ற தொலைக்காட்சி தொடரில் லூசியஸ் லியொன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[3] இவரது முதல் 'ஷைன் த்ரூ இட்' என்ற பாடல் ஒலித்ததட்டு செப்டம்பர் 2008 இல் வெளியிடப்பட்டது.[4][5] இவர் செப்டம்பர் 2019 இல் "நடிப்பதில் சோர்வாக இருப்பதால்" நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரன்ஸ்_ஹோவர்ட்&oldid=3214680" இருந்து மீள்விக்கப்பட்டது