ஜஸ்டின் தெரூக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்புஜஸ்டின் பால் தெரூக்சு
ஆகத்து 10, 1971 (1971-08-10) (அகவை 52)
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
துணைவர்ஹெய்டி பிவன்ஸ் (1997–2011)
வாழ்க்கைத்
துணை

ஜஸ்டின் பால் தெரூக்சு (ஆங்கில மொழி: Justin Paul Theroux) (பிறப்பு: ஆகத்து 10, 1971)[1][2] என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு மர்மத்திரைப்படமான 'முல்ஹோலண்ட் டிரைவ்' மற்றும் திரில்லர் திரைப்படமான 'இன்லாண்ட் எம்பயர்' (2006) போன்ற படங்களில் இயக்குனர் டேவிட் லிஞ்ச் என்பவருடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அறியப்படும் நபர் ஆனார்.

இவர் 'அமெரிக்கன் சைக்கோ' (2000), 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் த்ரோட்டில்' (2003), 'ஸ்ட்ரேஞ்சர்ஸ் வித் கேண்டி' (2005), 'வாண்டர்லஸ்ட்' (2012), 'தி கேர்ள் ஆன் தி ரயில்' ( 2016), 'தி ஸ்பை ஹூ டம்ப்ட் மீ' (2018) மற்றும் 'ஆன் தி பேஸிஸ் செஸ்' (2018) போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துளளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு வெளியான மீநாயகன் திரைப்படமான அயன் மேன் 2 என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் ஆகத்து 10, 1971 இல் ஐக்கிய அமெரிக்காவில் வாசிங்டன், டி. சி.,[3][4] என்ற நகரில் பிறந்தார். இவரது தாயார் ஃபிலிஸ் கிரிசிம் தெரூக்ஸ் ஒரு கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார், மற்றும் அவரது தந்தை யூஜின் ஆல்பர்ட் தெரூக்ஸ் ஒரு வழக்கறிஞர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டின்_தெரூக்சு&oldid=3482400" இருந்து மீள்விக்கப்பட்டது