பவ பியாரா குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவ பியாரா குகைகளின் வரைபடம்
பவ பியாரா குகைகள்,ஜூனாகத், ஜுனாகாத் மாவட்டம், குஜராத்

பவ பியாரா குகைகள் (Bava Pyara caves) (also known as Baba Pyaras cave) செயற்கையாக வடிக்கப்பட்ட பண்டைய குகைகளுக்கு எடுத்துகாட்டாகும். இக்குகைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திற்கு அருகில் உள்ளது. பவ பியாரா குகைகள், ஜுனாகத் குடைவரைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். மற்றவை உபர்கோட் குகைகள் மற்றும் காப்ரா கொடியா குகைகள் ஆகும். இக்குகைகள் சமணம் மற்றும் பௌத்தக் கலை வேலைப்பாடுகளைக் கொண்டது.

குகைகள்[தொகு]

பவ பியாரா குகைகள் மூன்று வரிசைகளில் அமைந்துள்ளது. இரண்டாவது வரிசையில் தட்டையான கூரையுடன் அமைக்கப்பட்ட குகைகள் சைத்தியங்களுடன் உள்ளது.[1]

பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஜேம்ஸ் பர்கூசின் கூற்று படி, மனிதனால் முதலில் அமைக்கப்பட்ட இச்செயற்கை குகைகள் முதலில் பௌத்த பிக்குகள் நிறுவியதாகவும், பிற்காலத்தில் சமணத் துறவிகள் இக்குகைகளை தவம் மற்றும் தியானத்திற்கும் பயன்படுத்திக் கொண்டதாகக் கருதுகிறார். இக்குகைகள் நிறுவப்பட்ட காலம் கணிக்கப்பெறவில்லை எனினும், இக்குகைகளின் கல்வெட்டுக் குறிப்புகள் சமண சமயம் தொடர்புடையதாக உள்ளது. [1][2][3]

மேலும் சுவஸ்திக்கா போன்ற ஐந்து சமணப் புனிதச் சின்னங்கள் இக்குகைகள் கொண்டுள்ளது. சங்காலியா எனும் தொல்லியல் அறிஞரின் கூற்றுப்படி, இக்குகையில் உள்ள சைத்தியம் கிமு 2-ஆம் நூற்றாண்டு காலத்தவை எனக்கருதப்படுகிறது. [1]

பவ பியாரா குகைகளின் காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Hasmukh Dhirajlal Sankalia (1941). The Archaeology of Gujarat: Including Kathiawar. Natwarlal & Company. பக். 47–49. https://books.google.com/books?id=fvAdAAAAMAA. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Aspects of Jaina art and architecture, Umakant Premanand Shah, Madhusudan A. Dhaky Gujarat State Committee for the Celebration of 2500th Anniversary of Bhagavān Mahāvīra Nirvāna : distributors, L.D. Institute of Indology, 1975, page no. 75
  3. Journal of the Oriental Institute, Volume 49, page no. 83

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவ_பியாரா_குகைகள்&oldid=3668046" இலிருந்து மீள்விக்கப்பட்டது