சாசானியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாசானியப் பேரரசு
இரான்ஷர் [1][2]
224–651
கொடி of பாரசீகம்
சாசானியக் கொடி
சாசானிய அரச சின்னம் of பாரசீகம்
சாசானிய அரச சின்னம்
இரண்டாம் கொஸ்ரோவ் காலத்தில் சாசானியப் பேரரசு
  •   சாசானியப் பேரரசு
  •   602-608 இல் தற்காலிக விரிவாக்கம்
தலைநகரம்
  • இஸ்தகர் (224–226)[3]
  • டெஸ்சிபான் (226–637)
பேசப்படும் மொழிகள்
சமயம்
சரத்துஸ்திர சமயம்
பாபிலோனிய சமயம்
நெஸ்டோரியன் கிறித்தவம்
மானி சமயம்
யூத சமயம்
இந்து
பேகனிசம்
பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி[7]
பேரரசர் 
• 224–241
முதலாம் அர்தசிர்(first)
• 632–651
மூன்றாம் யெஸ்டெகெடர்டு (last)
வரலாற்று சகாப்தம்பிந்தைய தொல்பழமைக் காலம்
• ஹோர்மொஸ்டுகான் போர்
28 ஏப்ரல் 224
• பைசாந்திய - சசானியப் போர் 602–628
602–628
• உள்நாட்டுப் போர்[8]
628-632
• பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு
633–651
• சசானியப் பேரரசின் வீழ்ச்சி
651
பரப்பு
6216,600,000 km2 (2,500,000 sq mi)
முந்தையது
பின்னையது
பார்த்தியப் பேரரசு
இந்தோ சிதியன் பேரரசு
ஐபீரிய மூவலந்தீவு
குசான் பேரரசு
ஆர்மீனியா
லக்மிட்ஸ் சிற்றரசு
குவாரின்வந்து வம்சம்
சர்மிரிட்ஸ்டுகள்
ராசிதீன் கலீபாக்கள்
தபுயித் வம்சம்
தாமவந்தின் மஸ்குகான்கள்
பவந்து வம்சம்
தற்போதைய பகுதிகள்
சசானிய அரச குலப் பெண்னின் உருவம் பதித்த கிண்ணம், காலம்; கி மு 3-4-ஆம் நாற்றாண்டு
632-இல் அரேபியர்கள் சசானியப் பேரரசை கைப்பற்றும் பொழுது சசானியப் பேரரசு

சாசானியப் பேரரசு அல்லது சாசானிய மரபு (Sassanid Empire or Sassanian Dynasty) [10] கி.பி. 224 முதல் 651 முடிய தெற்காசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளை நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட பாரசீக நாட்டவர்கள் ஆவர்.[2][11] சாசானியப் பேரரசின் தலைநகரங்களாக இஸ்தகர், டெஸ்சிபான் [12] நகரங்கள் விளங்கின.

பார்த்தியப் பேரரசின் இறுதி மன்னர் நான்காம் அர்தபனாஸை வென்ற சாசானிய மன்னர் முதலாம் அர்தசிர் கி பி 224 இல் சாசானியப் பேரரசை நிறுவியவர் ஆவார்.

சாசானியப் பேரரசை விரிவு படுத்தும் நோக்கில் சாசானியர்கள் ரோமப் பேரரசுடனும், அதற்கு பிந்திய பைசாந்திப் பேரரசுடனும் தொடர்ந்து போரிட்டனர்.

சாசானியப் பேரரசர் மூன்றாம் யஸ்தஜிர்து (632–651), அரபு நாட்டின் முதல் ராசிதீன் கலீபாக்களுடன் நடத்திய 14 ஆண்டு கால நீண்ட போருக்குப் பின்னர் சாசானியப் பேரரசு கி பி 651-இல் முடிவுற்றது.

சாசானிய பேரரசின் பகுதிகள்

சாசானியப் பேரரசில் மேற்காசியா, நடு ஆசியா, வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் உள்ள தற்கால பாகிஸ்தான், ஆப்கானித்தான், இரான், ஈராக் ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான், கசக்ஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான், பஹ்ரைன், குவைத், எகிப்து, லிபியா, பாலஸ்தீனம், இசுரேல், சிரியா, லெபனான், யோர்தான், ஓமான், யெமன், கத்தார் போன்ற நாடுகளை முழுமையாகவும் துருக்கியின் பெரும் பகுதிகளையும் உருசியா, இந்தியாவின் சில பகுதிகளையும் கொண்டிருந்தது. [13]

சமயம்

சசானியப் பேரரசில் பெரும்பாலான மக்கள் சரத்துஸ்திர சமயம், யூத சமயம், நெஸ்டோரியக் கிறித்தவம், மானி சமயங்கங்ளைப் பின்பற்றினர். சிறிதளவு மக்கள் இந்து சமயம், அஞ்ஞானம், பௌத்தம் பாபிலோனிய சமயங்களைப் பின்பற்றினர். அரபு முஸ்லிம்களின் தொடர் படையெடுப்புகளால் சாசானியப் பேரரசு வீழ்ந்த பின்பு பெரும்பாலான சாசானியப் பேரரசின் பாரசீக மக்கள் 652 ஆம் ஆண்டிற்கு பின்னர் இசுலாமிய சமயத்தை தழுவினர்.

மொழிகள்

சசானியப் பேரரசில் அலுவல் மொழியாக மத்திய கால பாரசீக மொழியும், அரமேயம், பார்த்திய மொழி, கிரோக்க மொழி என்பனவும் வட்டார மொழிகளும் பேசப்பட்டன.

நாகரிகமும் பண்பாடும்

சசானிய பேரரசின் காலம், ஈரானிய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. பாரசீகத்தின் சசானிய பேரரசு காலத்தில் இரானின் நாகரீகம் மற்றும் பண்பாடு உயர்ந்த இடத்தில் இருந்தது. சசானியப் பேரரசின் ஆட்சிக் காலம் பாரசீகத்தின் பொற்காலமாக விளங்கியது. சசானியப் பேரரசின் காலத்தில், பாரசீகர்களிடம் ரோமானியர்களின் கலாசார, நாகரீகத்தின் தாக்கம் ஏற்பட்டது. [14]p109 உரோமைப் பேரரசு, சசானியப் பேரரசை தனக்கு நிகராக கொண்டாடியது. இரு பேரரசுகளுக்கிடையே தொடர்ந்த கடிதத் தொடர்பும் இருந்தது. [15] Africa,[16]

ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் மத்திய கால கலை வளர்ச்சிக்கு சீனா மற்றும் இந்திய நாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. [17]

சசானிய பேரரசின் வரலாற்றுக் கோடுகள்

224-271: முதலாம் அர்தசிர் ஆட்சிக் காலம்;

  • 224–226-இல் பார்த்தியப் பேரரசை முதலாம் அர்தசிர் வென்று சசானியப் பேரரசை நிறுவதல்
  • 229–232: ரோமப் பேரரசுடன் போர்

241–271: முதலாம் ஷபூரின் ஆட்சிக் காலம்;

  • 252–261:ரோமர்களுடனான போரில் ரோமைக் கைப்பற்றல்
  • 215–271: பாரசீகத்தில் தீர்க்கதரிசி மானி , மானி சமயத்தை நிறுவி பரப்புதல்

271–301: பேரரசின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சண்டைகள்

283: ரோமர்களுடனான போரில், சசாசனிய பேரரசின் தலைநகர் டெஸ்சிபானை ரோமானியர்கள் சூறையாடல்.

296-298: ரோமர்களுடனான போரில் தோற்ற சசானியர்கள், டைகிரீஸ் ஆற்றிக்கு கிழக்கின் ஐந்து மாகாணங்களை ரோமானியர்களுக்கு வழங்கினர்.

309–379: இரண்டாம் மகா ஷாப்பூரின் ஆட்சிக் காலம்:

  • 337–350: உரோமானியர்களுடனான முதல் போரில் சசானியர்கள் சிறிது வெற்று அடைதல்.
  • 359–363: இரண்டாம் போரில், ரோமானியர்களிடம் இழந்த டைகிரீஸ் ஆற்றின் கிழக்குப் பகுதிகளை சசானியர்கள் திரும்பப் பெறுதல்.
  • 387: ஆர்மினியாவை ரோமானியர்களும் பாரசீகர்களும் பிரித்துக் கொள்தல்.

399–420: முதலாம் யாஸ்தெகெர்ட் (Yazdegerd) ஆட்சிக் காலம்;

  • 409: கிறித்துவர்கள் பொது இடங்களில் தேவாலயங்களை எழுப்பவும், சமய வழிபாடுகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.
  • 416–420: கிறித்துவர்களைத் துன்புறுத்தும் முந்தையச் சட்டங்களை திரும்பப் பெறப்பட்டது.

420–438: ஐந்தாம் பக்ரம் ஆட்சிக் காலம்;

  • 420–422: ரோமானியர்களுடம் போர்
  • 428: பாரசீகத்தின் ஆர்மினியா மண்டலம், சசானியப் பேரரசுடன் இணைத்தல்.

438–457: இரண்டாம் யாஸ்தெகெர்ட் (Yazdegerd) ஆட்சிக் காலம்;

  • 441: ரோமானியர்களுடம் போர்
  • 449-451: ஆர்மீனியர்களின் கிளர்ச்சி

482-483: ஆரிமீனியர்கள் மற்றும் ஐபீரியர்களின் கிளர்ச்சி

483: பாரசீகர்கள், கிறித்துவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதற்கான அரசாணை வெளியிடல்.

484:சசானிய மன்னர் முதலாம் பெரோஸ் (Peroz I) ஹெப்தலைட்டுகளால் (Hephthalites) வெல்லப்பட்டு பின் கொல்லப்படல்.

491:ஆர்மீனியாவில் கிளர்ச்சி;

502-506: பைசாந்தியர்களுடன் போர்

526-532: மீண்டும் பைசாந்தியர்களுடன் போர்

531–579: முதலாம் கொஸ்ரோவ் மன்னரின் ஆட்சி;

540–562: பைசாந்தியர்களுடன் போர்

572-591: பைசாந்தியர்களுடன் நடந்த போரில் ஆர்மீனியாவை சசானியர்கள் இழந்தனர்.

590–628: இரண்டாம் கொஸ்ரோவ் மன்னரின் ஆட்சி;

603–628: பைசாந்தியர்களுடன் நடந்த போரில், சசானியர்கள் மெசொப்பொத்தேமியா, சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் காக்கேசியா ஆகிய நாடுகளை கைப்பற்றுதல்.

610: திக்காரில் நடைபெற்ற கலீபாவின் அரபு நாட்டுப் படைகள் சசானியப் படைகளை வெல்தல்.

626: போரில் பைசாந்தியம் சசானியர்களால் எளிதில் கைப்பற்ற இயலவில்லை.

627: பைசாந்தியப் பேரரசர் ஹெராகிலீஸ் அசிரியா மற்றும் மெசொப்பொத்தேமியாவை வெற்றி கொண்டதுடன், நினிவே நகரத்தில் நடந்த போரில் சசானியப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

628–632: குழப்பமான காலத்தில் பல மன்னர்கள் ஆண்டனர்.

632–642: மன்னர் மூன்றாம் யெஸ்டெகெர்ட் (Yazdegerd III) ஆட்சிக் காலம்;

636: அரபு இசுலாமியப் படைகள் சசானியப் பேரரசை தோற்கடித்தல்.

642: நஹாவந்துப் போரில் அரபு இசுலாமியர்கள் இறுதியாக பாரசீகப் படைகளை வெற்றிக் கொள்ளுதல்.

651: இறுதி சசானியப் பேரரசர் மூன்றாம் யெஸ்டெகெர்ட் , தற்கால துருக்மெனிஸ்தானில் வைத்து கொலை செய்யப்படல். சசானியப் பேரரசு முடிவுக்கு வருதல். பேரரசரின் மகன் பிரோஸ் மற்றும் பிறரும் சீனாவிற்கு நாடு கடத்தப்படல்.

அடிக்குறிப்புகள்

  1. Book Pahlavi spelling: (ʾylʾnštr')
    Inscriptional Pahlavi spelling: 𐭠𐭩𐭥𐭠𐭭𐭱𐭲𐭥𐭩 (ʾyrʾnštry), 𐭠𐭩𐭫𐭠𐭭𐭱𐭲𐭥𐭩 (ʾylʾnštry)
    Modern Persian: ایرانشهر
  2. 2.0 2.1 Wiesehofer, Joseph 1996. Ancient Persia. New York: I.B. Taurus
  3. "CTESIPHON – Encyclopaedia Iranica". Iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2013-12-16.
  4. 4.0 4.1 4.2 Daryaee 2008, ப. 99-100.
  5. Encyclopedia of the Peoples of Africa and the Middle East, Vol.1, Ed. Jamie Stokes, (Infobase Publishing, 2009), 601.
  6. Chyet, Michael L. (1997). Afsaruddin, Asma; Krotkoff, Georg; Zahniser, A. H. Mathias (eds.). Humanism, Culture, and Language in the Near East: Studies in Honor of Georg Krotkoff. Eisenbrauns. p. 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57506-020-0. In the Middle Persian period (Parthian and Sasanian Empires), Aramaic was the medium of everyday writing, and it provided scripts for writing Middle Persian, Parthian, Sogdian, and Khwarezmian.
  7. https://books.google.dk/books?id=sP_hVmik-QYC&pg=PA179
  8. Parvaneh Pourshariati, Decline and Fall of the Sasanian Empire: The Sasanian-Parthian Confederacy and the Arab Conquest of Iran, I.B. Tauris, 2008. (p. 4)
  9. Security and Territoriality in the Persian Gulf: A Maritime Political Geography by Pirouz Mojtahed-Zadeh, page 119
  10. பாரசீக மொழி: ساسانیان‎ [sɒsɒnijɒn]
  11. "A brief history". Culture of Iran. Archived from the original on October 11, 2007. பார்க்கப்பட்ட நாள் 11 September 2009.
  12. http://www.iranicaonline.org/articles/ctesiphon
  13. Khaleghi-Motlagh, Derafš-e Kāvīān
  14. Bury J.B. 1923. History of the later Roman Empire. Macmillan, London.
  15. Durant, Will The story of civilization, 4: The Age of faith. New York: Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0671219888
  16. Transoxiana 04: Sasanians in Africa
  17. Iransaga: The art of Sassanians

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sassanid Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாசானியப்_பேரரசு&oldid=2758004" இலிருந்து மீள்விக்கப்பட்டது