யூதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யூத சமயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யூதம் அல்லது யூத மதம் (Judaism, "יהודה", யெகூடா,) யாவே என்ற ஒரே கடவுளை வணங்கும் சமயமாகும். யூத மதத்தின் சமய நூல் டனாக் ஆகும். யூத மதத்தை பின்பற்றுபவர்கள் யூத மக்கள் அல்லது யூதர் என தமிழில் அழைக்கப்படுகின்றனர்.[1] இயேசு கிறிஸ்துவும் பிறப்பால் ஒரு யூதராவார். மேலும் கிறிஸ்தவ விவிலியம் எபிரேய விவிலியத்தையும் உள்ளடக்கியதாகும். ஆகையால் யூதம் கிறிஸ்தவத்தின் மூலமாகவும் நோக்கப்படுவதுண்டு.

யூதர் ஒரு இனமதக் குழுவாகும்.[2] இது யூதராக பிறந்தவரையும் யூத மதத்திற்கு மாறியவர்களையும் குறிக்கும். 2010 இல் உலக யூதர்களின் மக்கள் தொகை 13.4 மில்லியன் அல்லது உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர்கள் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.[3]

உசாத்துணை[தொகு]

  1. Jacobs, Louis (2007). "Judaism". Encyclopaedia Judaica (2d) 11. Ed. Fred Skolnik. Farmington Hills, Mich.: Thomson Gale. ISBN 978-0-02-865928-2. “Judaism, the religion, philosophy, and way of life of the Jews.” 
  2. See, for example, Deborah Dash Moore, American Jewish Identity Politics, University of Michigan Press, 2008, p. 303; Ewa Morawska, Insecure Prosperity: Small-Town Jews in Industrial America, 1890-1940, Princeton University Press, 1999. p. 217; Peter Y. Medding, Values, interests and identity: Jews and politics in a changing world, Volume 11 of Studies in contemporary Jewry, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1995, p. 64; Ezra Mendelsohn, People of the city: Jews and the urban challenge, Volume 15 of Studies in contemporary Jewry, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1999, p. 55; Louis Sandy Maisel, Ira N. Forman, Donald Altschiller, Charles Walker Bassett, Jews in American politics: essays, Rowman & Littlefield, 2004, p. 158; Seymour Martin Lipset, American Exceptionalism: A Double-Edged Sword, W. W. Norton & Company, 1997, p. 169.
  3. World Jewish Population, 2010. Sergio Della Pergola, எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதம்&oldid=1870273" இருந்து மீள்விக்கப்பட்டது