பேச்சு:சாசானியப் பேரரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சசானிய என்பது பிழை. சாசானிய என்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 10:10, 9 மே 2016 (UTC)[பதிலளி]

பிராந்திய மொழிகளில் இது ஸாஸானீ என்றே அழைக்கப்படுகிறது. உருது மொழியில் ஸாஸானீ ஸுல்தனத் என்றும், பாரசீக மொழியில் ஷாஹின்ஷாஹீ ஸாஸானீ என்றும், அறபு மொழியில் ஸாஸானிய்யூன் என்றும், எகிப்திய அறபில் ஸாஸானிய்யீன் என்றும், துருக்கி மொழியில் ஸாஸானீலிர் என்றும், மத்திய குர்தி மொழியில் இம்ப்றாதூறிய்யதே ஸாஸானீ என்றும் கூறப்படுகிறது. தமிழ் இஸ்லாமிய நூல்களிலும் சாசானியப் பேரரசு என்றே பயன்படுத்தப்படுகிறது. எனவே, சசானி என்றெழுதுவது பிழை.--பாஹிம் (பேச்சு) 10:19, 9 மே 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனாலும், ஆங்கில விக்கியில் தரப்பட்டுள்ள குறியீடுகளின் படி /səˈsɑːnɪən/ சசானியன் அல்லது /səˈsnɪən/ சசேனியன் என்று தான் உள்ளது.--Kanags \உரையாடுக 10:25, 9 மே 2016 (UTC)[பதிலளி]

இது பாரசீகத்தில் நிலை கொண்டிருந்த பேரரசு. அங்கு ஆங்கிலம் கிடையாது. அவ்வாறே பண்டைய தமிழ் இஸ்லாமிய நூல்களிலும் சாசானியப் பேரரசு என்ற சொல் ஏற்கனவே வழக்கிலுள்ளது. அவ்வாறிருக்கையில் ஆங்கிலம் எதற்கு?--பாஹிம் (பேச்சு) 10:57, 9 மே 2016 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தை முற்படுத்துவதாயின், ஆங்கிலத்தில் செசெய்னியன் என்ற சொல்லே ஆளப்பட்டுள்ளது. அங்கு சசானிய என்றெதுவுங் கிடையாது.--பாஹிம் (பேச்சு) 10:59, 9 மே 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாசானியப்_பேரரசு&oldid=2062053" இலிருந்து மீள்விக்கப்பட்டது