2018 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2018 உலகக்கோப்பை கால்பந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
2018 பிஃபா உலகக் கோப்பை
Чемпионат мира по футболу 2018
சின்னம்
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு  உருசியா
நாட்கள் 14 சூன் – 15 சூலை
அணிகள் 32 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள் 12 (11 நகரங்களில்)
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள் 14
எடுக்கப்பட்ட கோல்கள் 32 (2.29 /ஆட்டம்)
பார்வையாளர்கள் 6,57,720 (46,980/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) போர்த்துகலின் கொடி ரொனால்டோ (3 கோல்கள்)
2014
2022

2018 பீஃபா உலகக் கோப்பை (2018 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் ஓர் பன்னாட்டு காற்பந்தாட்ட போட்டியாகும். 21 வது முறையாக நடக்கும் இந்த உலகக்கோப்பை காற்பந்து போட்டி உருசியாவில் சூன் 14, 2018 முதல் சூலை 15, 2018 வரை நடைபெறுகிறது.[1] இந்தப் போட்டியை உருசியா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

2010 திசம்பர் 2 இல் இப்போட்டிகளை உருசியா நடத்தும் என அறிவிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெறும் முதலாவது கால்பந்து உலகக்கோப்பை இதுவாகும். கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறும் முதல் உலகக்கோப்பை இதுவாகும். இறுதிப் போட்டிகள் ஒரு போட்டி தவிர ஏனையவை உருசியாவின் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் நடைபெறுகின்றன.[2][3][4]

இறுதிச் சுற்றில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இவற்றில் 31 அணிகள் தகுதிநிலைப் போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டன. உருசியா போட்டிகளை நடத்தும் நாடாக தகுதி பெற்றது. 32 அணிகளில், ஐசுலாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன் முதலாக உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. உருசியாவின் 11 நகரங்களில் 12 அரங்குகளில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இறுதிப் போட்டி 2018 சூலை 15 இல் மாஸ்கோவின் லூசினிக்கி அரங்கில் நடைபெறும்.[5][6][7]

உலகக்கோப்பையில் வெற்றி பெறும் அணி 2021 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெறும்.

போட்டி நடத்தும் நாடு தேர்வு[தொகு]

2018 உலக கோப்பையை நடத்த ஏலம் வென்ற உருசிய அதிகாரிகள் கொண்டாடுதல்.
காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணத்துடன் உருசிய அதிபர் விளாதிமிர் பூட்டின் மாஸ்கோவில் இடம்பெற்ற முன் போட்டி விழாவில் காணப்படுகிறார். செப்டம்பர் 2017
2018 உலகக்கோப்பை காற்பந்தை சிறப்பிக்கும் முகமாக வெளியிடப்பட்ட 100-ரூபிள் நாணயத்தாள்.

2018, 2022 உலகக் கோப்பைகளை நடத்துவதற்கான நாடுகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் 2009 சனவரியில் ஆரம்பமாயின. இதற்கான விண்ணப்பங்கள் 2009 பெப்ரவரி 2 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[8] ஆரம்பத்தில் ஒன்பது நாடுகள் விண்ணப்பித்திருந்தன, ஆனால் மெக்சிக்கோ பின்னர் விலகிக் கொண்டது.[9] இந்தோனேசியாவின் விண்ணப்பம் அந்நாட்டு அரசின் ஆதரவுக் கடிதம் கிடைக்காததால் 2010 பெப்ரவரியில் நிராகரிக்கப்பட்டது.[10] ஐரோப்பிய நாடுகளல்லாத ஆத்திரேலியா, சப்பான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பின்னர் படிப்படியாக விலகிக் கொண்டன. இதனால் 2022 ஆம் ஆண்டுக்கான தெரிவுகளில் ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இறுதியில் 2018 ஆம் ஆண்டுக்கான போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து, உருசியா, நெதர்லாந்து/பெல்ஜியம், போர்த்துகல்/எசுப்பானியா ஆகிய நாடுகள் எஞ்சியிருந்தன.

2010 திசம்பர் 2 இல் சூரிக்கு நகரில் 22-உறுப்பினர் கொண்ட பீஃபா பேரவை வாக்களிக்கக் கூடியது.[11] இரண்டாவது கட்ட வாக்களிப்பில் உருசியா 2018 போட்டிகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[12]

வாக்களிப்பு முடிவுகள் வருமாறு:[13]

2018 பீபாவை நடையேற்றும் நாட்டைத் தேர்வு செய்தல் (அதிகம் 12 வாக்குகள்)
நாடுகள் வாக்குகள்
சுற்று 1 சுற்று 2
உருசியா 9 13
போர்த்துக்கல் / ஸ்பெயின் 7 7
பெல்ஜியம் / நெதர்லாந்து 4 2
இங்கிலாந்து 2 -

அணிகள்[தொகு]

தகுதிநிலை[தொகு]

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் தடவையாக அனைத்துத் தகுதியுள்ள நாடுகளும் – 209 உறுப்பு நாடுகள் தகுதிநிலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏற்று நடத்தும் நாடாக, உருசியா தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.[14] சிம்பாப்வே, இந்தோனேசியா ஆகியன தமது முதல் தகுதிகாண் போட்டிகளை விளையாடுவதற்கு முன்னரே தகுதியிழந்தன.[15][16] ஆனால், 2016 மே 13 இல் ஃபீஃபா அமைப்பில் இணைந்த ஜிப்ரால்ட்டர், கொசோவோ ஆகியன தகுதிகாண் சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்பட்டன.[17][18][19] முதலாவது தகுதிகாண் போட்டி கிழக்குத் திமோர், டிலி நகரில் 2015 மார்ச் 12 இல் நடந்தது.[20] இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெறும் நாடுகளை அறிவிக்கும் முக்கிய நிகழ்வு சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் 2015 சூலை 25 இல் நடைபெற்றது.[21][22][23][1]

2018 இறுதிப் போட்டிகளில் பங்குபற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நாடுகளில், 20 நாடுகள் 2014 போட்டியில் பங்குபற்றியிருந்தன. ஐசுலாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதல் தடவையாகப் போட்டியிடுகின்றன.[24] எகிப்து 28 ஆண்டுகளுக்குப் பின்னரும், பெரு 36 ஆண்டுகளுக்குப் பின்னரும் பங்குபற்றுகின்றன. முதல் தடவையாக மூன்று நோர்டிக் நாடுகள் (தென்மார்க்கு, ஐசுலாந்து, சுவீடன்), நான்கு அரபு நாடுகள் (எகிப்து, மொரோக்கோ, சவுட்வூதி அரேபியா, துனீசியா) உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன.[25]

நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற இத்தாலி (1958 இற்குப் பின்னர் முதல் தடவையாக), மூன்று முறை இரண்டாம் இடத்தை வென்ற நெதர்லாந்து ஆகியன தேர்ந்தெடுக்கப்படாத முக்கிய அணிகள் ஆகும். 2017 ஆப்பிரிக்கக் கோப்பை வெற்றியாளரான கமரூம், இரண்டு தடவை கோப்பா அமெரிக்காவை வென்ற சிலி, மற்றும் நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளும் தகுதி பெறவில்லை.

ஆசி.காகூ (5)
ஆப்.காகூ (5)
வமஅககாகூ (3)
தெஅகாகூ (5)
ஓகாகூ (0)
 • தகுதி பெறவில்லை
ஐகாசகூ (14)
  உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற நாடுகள்
  உலகக் கோப்பைக்குத் தகுதி பெறாத நாடுகள்
  சுற்றில் இருந்து விலக்கப்பட்ட நாடுகள்
  பீஃபா அமைப்பில் இல்லாத நாடுகள்

இறுதிக் குலுக்கல்[தொகு]

இறுதிக் குலுக்கல் 2017 திசம்பர் 1 இல் மாஸ்கோவில் அரச கிரெம்லின் மாளிகையில் இடம்பெற்றது.[26][27] 32 அணிகள் நான்கு அணிகளாக எட்டுக் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இறுதிக் குலுக்கலின் போது, 2017 அக்டோபர் ஃபிஃபா உலகத் தரவரிசையின் படி அணிகள் நான்கு தொட்டிகளில் இடப்பட்டன. முதலாவது தொட்டியில் உருசியா (போட்டியை நடத்தும் நாடு) ஏ1 நிலைக்கும், சிறந்த ஏழு அணிகள் இடம்பெற்றன.. இரண்டாம் தொட்டியில் அடுத்த சிறந்த எட்டு அணிகளும், இவ்வாறு 3-ஆம், 4-ஆம் தொட்டிகளும் நிரப்பப்பட்டன.[28] இக்குலுக்கல் முன்னைய போட்டிகளில் இடம்பெற்ற குலுக்கல் முறையை விட வேறுபட்டது.

தொட்டி 1 தொட்டி 2 தொட்டி 3 தொட்டி 4

 உருசியா (65) (நடத்தும் நாடு)
 செருமனி (1)
 பிரேசில் (2)
 போர்த்துகல் (3)
 அர்கெந்தீனா (4)
 பெல்ஜியம் (5)
 போலந்து (6)
 பிரான்ஸ் (7)

 எசுப்பானியா (8)
 பெரு (10)
 சுவிட்சர்லாந்து (11)
 இங்கிலாந்து (12)
 கொலம்பியா (13)
 மெக்சிக்கோ (16)
 உருகுவை (17)
 குரோவாசியா (18)

 டென்மார்க் (19)
 ஐசுலாந்து (21)
 கோஸ்ட்டா ரிக்கா (22)
 சுவீடன் (25)
 துனீசியா (28)
 எகிப்து (30)
 செனிகல் (32)
 ஈரான் (34)

 செர்பியா (38)
 நைஜீரியா (41)
 ஆத்திரேலியா (43)
 சப்பான் (44)
 மொரோக்கோ (48)
 பனாமா (49)
 தென் கொரியா (62)
 சவூதி அரேபியா (63)

அரங்குகள்[தொகு]

உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்தும் நகரங்களினதும் அரங்குளினதும் இறுதித் தேர்வு 2012 செப்டம்பர் 29 இல் இடம்பெற்றன. 12 அரங்குகள் தெரிவாகின. இவற்றுள் லூசினிக்கி, எக்கத்தரீன்பூர்க், சோச்சி ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் புனரமைக்கப்பட்டன. ஏனைய 9 அரங்குகளும் புதிதாக அமைக்கப்பட்டன. $11.8 பில்லியன் இதற்காக செலவழிக்கப்பட்டது.[29]

12 அரங்குகளில், உருசியாவின் மிகப் பெரிய இரண்டு அரங்குகள் (லூசினிக்கி, சென் பீட்டர்சுபர்க் அரங்கு ஆகியன) ஒவ்வொன்றிலும் 7 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. சோச்சி, கசான், நீசுனி நோவ்கோரத், சமாரா ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் (ஒரு காலிறுதி ஆட்டம் உட்பட) ஆறு ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. மாஸ்கோவின் அத்கிறீத்தியே அரங்கு, ரசுதோவ்-நா-தனு ஆகியன ஒவ்வொன்றிலும் (ஒரு 16-ஆம் சுற்று ஆட்டம் உட்பட) 5 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. வோல்கோகிராத், கலினின்கிராத், எக்கத்தரீன்பூர்க், சரான்சுக் ஆகியன ஒவ்வொன்றிலும் 4 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

மாஸ்கோ சென் பீட்டர்ஸ்பேர்க் சோச்சி
லூசினிக்கி அரங்கு அத்கிறீத்தியே அரங்கு
(ஸ்பர்த்தாக் அரங்கு)
கிரெத்தோவ்சுக்கி அரங்கு
(சென் பீட்டர்சுபர்கு அரங்கு)
பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு
(பிஸ்த் அரங்கு)
கொள்ளளவு: 81,000 கொள்ளளவு: 45,360 கொள்ளளவு: 68,134 கொள்ளளவு: 47,659
Вид на стадион Лужники.jpg Stadium Spartak in Moscow.jpg Spb 06-2017 img40 Krestovsky Stadium.jpg Fisht Stadium in January 2018.jpg
சமாரா கசான்
கொசுமசு அரங்கு
(சமாரா அரங்கு)
கசான் அரங்கு
கொள்ளளவு: 44,918 கொள்ளளவு: 45,379
Krylya Fakel test 1.jpg Kazan Arena 08-2016.jpg
ரஸ்தோவ்-நா-தனு வோல்கோகிராட்
ரஸ்தோவ் அரங்கு வோல்கோகிராட் அரங்கு
கொள்ளளவு: 45,000 கொள்ளளவு: 45,568
Rostov-Arens (april 2018) 01.jpg Construction of Volgograd Arena inside 04.jpg
நீசுனி நோவ்கோரத் சரான்சுக் எக்கத்தரீன்பூர்க் கலினின்கிராத்
நீசுனி நோவ்கோரத் அரங்கு மோர்தோவியா அரங்கு மத்திய அரங்கு
(எக்கத்தரீன்பூர்க் அரங்கு)
கலினின்கிராத் அரங்கு
கொள்ளளவு: 44,899 கொள்ளளவு: 44,442 கொள்ளளவு: 35,696 கொள்ளளவு: 35,212
Nizhny Novgorod Stadium (March 2018).jpg Стадион Mordovia arena.jpg Estadio Central (Ekaterinburg-arena).jpg Kaliningrad stadium - 2018-04-07.jpg

கால அட்டவணை[தொகு]

முழுமையான கால அட்டவணை 2015 சூலை 24 இல் அறிவிக்கப்பட்டது.[30][31] உருசியா குழு நிலையில் ஏ1 நிலைக்கு வைக்கப்பட்டது. சுற்றின் முதலாவது போட்டியில் உருசியா சவூதி அரேபியாவுடன் சூன் 14 இல் மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் விளையாடவுள்ளது.[32] லூசினிக்கி அரங்கில் சூலை 11 இல் இரண்டாவது அரையிறுதி ஆட்டமும், சூலை 15 இல் இறுதி ஆட்டமும் இடம்பெறுகின்றன. சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் கிரெஸ்தோவ்சுக்கி அரங்கில் சூலை 10 இல் முதலாவது அரையிறுதி ஆட்டமும், சூலை 14 இல் மூன்றாம் இடத்துக்கான போட்டியும் இடம்பெறும்.[18]

ஆரம்ப விழா[தொகு]

மாஸ்கோ லூசினிக்கியில் இடம்பெற்ற ஆரம்ப விழாக் காட்சி

ஆரம்ப விழா 2018 சூன் 14 வியாழக்கிழமை மாஸ்கோவில் லூசினிக்கி அரங்கில் இடம்பெற்றது. தொடர்ந்து உருசிய அணிக்கும் சவூதி அரேபிய அணிக்கும் இடையில் முதல் போட்டி இடம்பெற்றது[33][34]

பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ சிறுவன் ஒருவனுடன் "உருசியா 2018" மேலாடை அணிந்து அரங்கினுள் நுழைந்தார். அதன் பின்னர் ஆங்கிலேயப் பாப் பாடகர் ரொபி விக்ல்லியம்சு, உருசியாவின் ஐடா கரிஃபுலீனாவுடன் இணைந்து ஒரு பாடலையும், தனித்து இரண்டு பாடல்களையும் பாடினார். இவர்களுடன் மேலும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட 32 அணிகளின் தேசியக் கொடிகளையும் பெயர்களையும் தாங்கியவண்ணம் பெண்களும் ஆண்களுமாக அரங்கினுள் வந்தனர்.[35]

2018 உலக்கோப்பையின் அதிகாரபூர்வமான கால்பந்துடன் ரொனால்டோ வந்தார். இப்பந்து அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு 2018 மார்ச் மாதத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, பூமிக்கு சூன் ஆரம்பத்தில் திரும்பியிருந்தது.[35]

குழு நிலை ஆட்டம்[தொகு]

  வெற்றியாளர்
  இரண்டாமிடம்
  மூன்றாமிடம்
  நான்காமிடம்
  கால் இறுதி
  16 சுற்று
  குழு நிலை

குழு நிலையில் முன்னிலைக்கு வரும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு (சுற்று 16) முன்னேறும்.

அனைத்து நேரங்களும் உள்ளூர் நேரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.[36]

சமநிலையை முறி கட்டளை விதி

குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறுதி செய்யப்படும்:

 1. எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
 2. எல்லாக் குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
 3. எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
 4. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
 5. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
 6. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
 7. பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு அட்டவணையில் முக்கிய நிறம்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறாத அணிகள்

குழு ஏ[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 உருசியா (ந) 1 1 0 0 5 0 +5 3
 உருகுவை 1 1 0 0 1 0 +1 3
 எகிப்து 1 0 0 1 0 1 −1 0
 சவூதி அரேபியா 1 0 0 1 0 5 −5 0

முதல் ஆட்டம் 2018 சூன் 14 இல் நடைபெறும். மூலம்: FIFA

(ந) நடத்தும் நாடு.

சூன் 14, 2018 (2018-06-14)
18:00 (ஒசநே+3)
உருசியா  5–0  சவூதி அரேபியா
கசீன்சுக்கி Goal 12'

செருசேவ் Goal 43'90+1'
திசியூபா Goal 71'
கலோவின் Goal 90+4'

அறிக்கை
லூசினிக்கி அரங்கு, மாஸ்கோ
பார்வையாளர்கள்: 78,011[37]
நடுவர்: நேசுதர் பித்தானா (அர்கெந்தீனா)

சூன் 15, 2018 (2018-06-15)
17:00 (ஒசநே+5)
எகிப்து  0–1  உருகுவை
அறிக்கை கிமேனெஸ் Goal 90'
மத்திய அரங்கு, எக்கத்தரீன்பூர்க்
பார்வையாளர்கள்: 27,015[38]
நடுவர்: யோர்ன் குயிப்பர்சு (நெதர்லாந்து)


குழு பி[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 ஈரான் 1 1 0 0 1 0 +1 3
 போர்த்துகல் 1 0 1 0 3 3 0 1
 எசுப்பானியா 1 0 1 0 3 3 0 1
 மொரோக்கோ 1 0 0 1 0 1 −1 0

முதல் ஆட்டம் 2018 சூன் 15 இல் நடைபெறும். மூலம்: FIFA

சூன் 15, 2018 (2018-06-15)
18:00 ஒசநே+3)
மொரோக்கோ  0–1  ஈரான்
அறிக்கை புகாதூசு Goal 90+5' (சுய கோல்)
கிரெத்தோவ்சுக்கி அரங்கு, சென் பீட்டர்ஸ்பேர்க்
பார்வையாளர்கள்: 62,548[39]
நடுவர்: கூநெயித் சாகிர் (துருக்கி)

சூன் 15, 2018 (2018-06-15)
21:00 (ஒசநே+3)
போர்த்துகல்  3–3  எசுப்பானியா
ரொனால்டோ Goal 4' (தண்ட உதை)44'88' அறிக்கை கொஸ்டா Goal 24'55'
நேச்சோ Goal 58'
பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு, சோச்சி
பார்வையாளர்கள்: 43,866[40]
நடுவர்: கியான்லூக்கா ரோச்சி (இத்தாலி)


குழு சி[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பிரான்ஸ் 1 1 0 0 2 1 +1 3
 டென்மார்க் 1 1 0 0 1 0 +1 3
 ஆத்திரேலியா 1 0 0 1 1 2 −1 0
 பெரு 1 0 0 1 0 1 −1 0

முதல் ஆட்டம் 2018 சூன் 16 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா

சூன் 16, 2018 (2018-06-16)
13:00 ஒசநே+3)
பிரான்ஸ்  2–1  ஆத்திரேலியா
கிரீசுமேன் Goal 58' (தண்ட உதை)
பெகிச் Goal 81' (சுய கோல்)
அறிக்கை எடினாக் Goal 62' (தண்ட உதை)
கசான் அரங்கு, கசான்
பார்வையாளர்கள்: 41,279[41]
நடுவர்: அந்திரேசு கூனியா (உருகுவை)

சூன் 16, 2018 (2018-06-16)
19:00 ஒசநே+3)
பெரு  0–1  டென்மார்க்
அறிக்கை பவுல்சென் Goal 59'
மோர்தோவியா அரங்கு, சரான்சுக்
பார்வையாளர்கள்: 40,502[42]
நடுவர்: பக்காரி கசாமா (காம்பியா)


குழு டி[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 குரோவாசியா 1 1 0 0 2 0 +2 3
 அர்கெந்தீனா 1 0 1 0 1 1 0 1
 ஐசுலாந்து 1 0 1 0 1 1 0 1
 நைஜீரியா 1 0 0 1 0 2 −2 0

முதல் ஆட்டம் 2018 சூன் 16 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா

சூன் 16, 2018 (2018-06-16)
16:00 (ஒசநே+3)
அர்கெந்தீனா  1–1  ஐசுலாந்து
அகுவேரோ Goal 19' அறிக்கை பின்போகசன் Goal 23'
அத்கிறீத்தியே அரங்கு, மாஸ்கோ
பார்வையாளர்கள்: 44,190[43]
நடுவர்: சைமன் மர்சினியாக் (போலந்து)

சூன் 16, 2018 (2018-06-16)
21:00 (ஒசநே +2)
குரோவாசியா  2–0  நைஜீரியா
எத்தெபோ Goal 32' (சுய கோல்)
மோத்ரிச் Goal 71' (தண்ட உதை)
அறிக்கை
கலினின்கிராத் அரங்கு, கலினின்கிராத்
பார்வையாளர்கள்: 31,136[44]
நடுவர்: சான்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

சூன் 21, 2018 (2018-06-21)
21:00 (ஒசநே+3)
அர்கெந்தீனா   குரோவாசியா
அறிக்கை
நீசுனி நோவ்கோரத் அரங்கு, நீசுனி நோவ்கோரத்

சூன் 22, 2018 (2018-06-22)
18:00 (ஒசநே+3)
நைஜீரியா   ஐசுலாந்து
அறிக்கை
வோல்கோகிராத் அரங்கு, வோல்கோகிராட்

சூன் 26, 2018 (2018-06-26)
21:00 (ஒசநே+3)
நைஜீரியா   அர்கெந்தீனா
அறிக்கை
கிறெஸ்தோவ்சுக்கி அரங்கு, சென் பீட்டர்ஸ்பேர்க்

சூன் 26, 2018 (2018-06-26)
21:00 (ஒசநே+3)
ஐசுலாந்து   குரோவாசியா
அறிக்கை
ரஸ்தோவ் அரங்கு, ரஸ்தோவ்-நா-தனு

குழு ஈ[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 செர்பியா 1 1 0 0 1 0 +1 3
 பிரேசில் 1 0 1 0 1 1 0 1
 சுவிட்சர்லாந்து 1 0 1 0 1 1 0 1
 கோஸ்ட்டா ரிக்கா 1 0 0 1 0 1 −1 0

முதல் ஆட்டம் 2018 சூன் 17 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா

சூன் 17, 2018 (2018-06-17)
16:00 (ஒசநே+4)
கோஸ்ட்டா ரிக்கா  0–1  செர்பியா
அறிக்கை கொலரோவ் Goal 56'
கொசுமசு அரங்கு, சமாரா
பார்வையாளர்கள்: 41,432[45]
நடுவர்: மலாங்க் டீடியூ (செனிகல்)

சூன் 17, 2018 (2018-06-17)
21:00 (ஒசநே+3)
பிரேசில்  1–1  சுவிட்சர்லாந்து
கூட்டின்யோ Goal 20' அறிக்கை சூபர் Goal 50'
ரஸ்தோவ் அரங்கு, தொன்-மீது-ரசுத்தோவ்
பார்வையாளர்கள்: 43,109[46]
நடுவர்: சேசார் ரமோசு (மெக்சிக்கோ)

சூன் 22, 2018 (2018-06-22)
15:00 (ஒசநே+3)
பிரேசில்   கோஸ்ட்டா ரிக்கா
அறிக்கை
கிறெஸ்தோவ்சுக்கி அரங்கு, சென் பீட்டர்ஸ்பேர்க்

சூன் 22, 2018 (2018-06-22)
20:00 (ஒசநே+2)
செர்பியா   சுவிட்சர்லாந்து
அறிக்கை
கலினின்கிராத் அரங்கு, கலினின்கிராத்

சூன் 27, 2018 (2018-06-27)
21:00 (ஒசநே+3)
செர்பியா   பிரேசில்
அறிக்கை
அத்கிறீத்தியே அரங்கு, மாஸ்கோ

குழு எஃப்[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 மெக்சிக்கோ 1 1 0 0 1 0 +1 3
 சுவீடன் 1 1 0 0 1 0 +1 3
 செருமனி 1 0 0 1 0 1 −1 0
 தென் கொரியா 1 0 0 1 0 1 −1 0

முதல் ஆட்டம் 2018 சூன் 17 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா

சூன் 17, 2018 (2018-06-17)
18:00 (ஒசநே+3)
செருமனி  0–1  மெக்சிக்கோ
அறிக்கை லொசானோ Goal 35'
லூசினிக்கி அரங்கு, மாஸ்கோ
பார்வையாளர்கள்: 78,011[47]
நடுவர்: அலிரேசா பகானி (ஈரான்)

சூன் 18, 2018 (2018-06-18)
15:00 (ஒசநே+3)
சுவீடன்  1–0  தென் கொரியா
கிராங்க்விஸ்த் Goal 65' (தண்ட உதை) அறிக்கை
நீசுனி நோவ்கோரத் அரங்கு, நீசுனி நோவ்கோரத்
பார்வையாளர்கள்: 42,300[48]
நடுவர்: ஜொயெல் அகிலார் (எல் சால்வடோர்)

சூன் 23, 2018 (2018-06-23)
21:00 (ஒசநே+3)
செருமனி   சுவீடன்
அறிக்கை
பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு, சோச்சி

சூன் 27, 2018 (2018-06-27)
17:00 (ஒசநே+3)
தென் கொரியா   செருமனி
அறிக்கை
கசான் அரங்கு, கசான்

குழு ஜி[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 பெல்ஜியம் 1 1 0 0 3 0 +3 3
 இங்கிலாந்து 1 1 0 0 2 1 +1 3
 துனீசியா 1 0 0 1 1 2 −1 0
 பனாமா 1 0 0 1 0 3 −3 0

முதல் ஆட்டம் 2018 சூன் 18 இல் நடைபெற்றது. மூலம்: பீஃபா

சூன் 18, 2018 (2018-06-18)
18:00 (ஒசநே+3)
பெல்ஜியம்  3–0  பனாமா
மெர்ட்டென்சு Goal 47'
லுக்காக்கு Goal 69'75'
அறிக்கை
பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு, சோச்சி
பார்வையாளர்கள்: 43,257[49]
நடுவர்: ஜன்னி சிக்காசுவே (சாம்பியா)

சூன் 18, 2018 (2018-06-18)
21:00 (ஒசநே+3)
துனீசியா  1–2  இங்கிலாந்து
சசி Goal 35' (தண்ட உதை) அறிக்கை கேன் Goal 11'90+1'
வோல்கோகிராட் அரங்கு, வோல்கோகிராட்
பார்வையாளர்கள்: 41,064[50]
நடுவர்: வில்மார் ரோல்டான் (கொலம்பியா)

சூன் 23, 2018 (2018-06-23)
15:00 (ஒசநே+3)
பெல்ஜியம்   துனீசியா
அறிக்கை
அத்கிறீத்தியே அரங்கு, மாஸ்கோ

சூன் 24, 2018 (2018-06-24)
15:00 (ஒசநே+3)
இங்கிலாந்து   பனாமா
அறிக்கை
நீசுனி நோவ்கோரத் அரங்கு, நீசுனி நோவ்கோரத்

சூன் 28, 2018 (2018-06-28)
20:00 (ஒசநே+2)
இங்கிலாந்து   பெல்ஜியம்
அறிக்கை
கலினின்கிராத் அரங்கு, கலினின்கிராத்

சூன் 28, 2018 (2018-06-28)
21:00 (ஒசநே+3)
பனாமா   துனீசியா
அறிக்கை
மொர்தோவியா அரங்கு, சரான்ஸ்க்

குழு எச்[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 சப்பான் 1 1 0 0 2 1 +1 3
 போலந்து 0 0 0 0 0 0 0 0
 செனிகல் 0 0 0 0 0 0 0 0
 கொலம்பியா 1 0 0 1 1 2 −1 0

முதல் ஆட்டம் 2018 சூன் 19 இல் நடைபெறும். மூலம்: FIFA

சூன் 19, 2018 (2018-06-19)
15:00 (ஒசநே+3)
கொலம்பியா  1-2  சப்பான்
குவிண்டேரோ Goal 39' அறிக்கை ககாவா Goal 6' (தண்ட உதை)
ஒசாக்கோ Goal 73'
மொர்தோவியா அரங்கு, சரான்ஸ்க்
பார்வையாளர்கள்: 40,842
நடுவர்: தமீர் ஸ்கொமினா (சுலோவீனியா)

சூன் 19, 2018 (2018-06-19)
18:00 (ஒசநே+3)
போலந்து   செனிகல்
அறிக்கை
அத்கிறீத்தியே அரங்கு, மாஸ்கோ

சூன் 24, 2018 (2018-06-24)
20:00 (ஒசநே+5)
சப்பான்   செனிகல்
அறிக்கை
மத்திய அரங்கு, எக்கத்தரீன்பூர்க்

சூன் 24, 2018 (2018-06-24)
21:00 (ஒசநே+3)
போலந்து   கொலம்பியா
அறிக்கை
கசான் அரங்கு, கசான்

சூன் 28, 2018 (2018-06-28)
17:00 (ஒசநே+3)
சப்பான்   போலந்து
அறிக்கை
வோல்கோகிராத் அரங்கு, வோல்கோகிராட்

சூன் 28, 2018 (2018-06-28)
18:00 (ஒசநே+4)
செனிகல்   கொலம்பியா
அறிக்கை
கொசுமசு அரங்கு, சமாரா

ஆட்டமிழக்கும் நிலை[தொகு]

ஆட்டமிழக்கும் நிலைகளில், வழமையான நேரத்தில் ஆட்டம் சமநிலையில் முடியுமானால், 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் (ஒவ்வொன்றும் 15 நிமிடங்களாக இரண்டு பகுதிகள்) ஒதுக்கப்படும். தேவைப்படின், சமன்நீக்கி மோதல் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்.[51]

ஆட்டம் இன்றுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கபடின், ஒவ்வோர் அணிக்கும் நான்காவது மாற்றீடு செய்ய அனுமதிக்கப்படும். உலகக்கோப்பை போட்டி ஒன்றில் முதல் தடவையாக இவ்வாறு விளையாட அனுமதிக்கப்படுகிறது.[52]

 
சுற்று 16 கால் இறுதிகள் அரை இறுதிகள் இறுதி
 
                           
 
30 சூன் – சோச்சி
 
 
வெற்றியாளர் குழு ஏ
 
6 சூலை – நீசுனி நோவ்கோரத்
 
2 ஆம் இட குழு பி
 
வெற்றியாளர் போட்டி 49
 
30 சூன் – கசான்
 
வெற்றியாளர் போட்டி 50
 
வெற்றியாளர் குழு சி
 
10 சூலை – சென் பீட்டர்ஸ்பேர்க்
 
2 ஆம் இட குழு டி
 
வெற்றியாளர் போட்டி 57
 
2 சூலை – சமாரா
 
வெற்றியாளர் போட்டி 58
 
வெற்றியாளர் குழு ஈ
 
6 சூலை – கசான்
 
2 ஆம் இட குழு எப்
 
வெற்றியாளர் போட்டி 53
 
2 சூலை – ரஸ்தோவ்-நா-தனு
 
வெற்றியாளர் போட்டி 54
 
வெற்றியாளர் குழு ஜி
 
15 சூலை – லூசினிக்கி
 
2 ஆம் இட குழு எச்
 
வெற்றியாளர் போட்டி 61
 
1 சூலை – லூசினிக்கி
 
வெற்றியாளர் போட்டி 62
 
வெற்றியாளர் குழு பி
 
7 சூலை – சோச்சி
 
2 ஆம் இட குழு ஏ
 
வெற்றியாளர் போட்டி 51
 
1 சூலை – நீசுனி நோவ்கோரத்
 
வெற்றியாளர் போட்டி 52
 
வெற்றியாளர் குழு டி
 
11 சூலை – லூசினிக்கி
 
2 ஆம் இட குழு சி
 
வெற்றியாளர் போட்டி 59
 
3 சூலை – சென் பீட்டர்ஸ்பேர்க்
 
வெற்றியாளர் போட்டி 60 மூன்றாமிடப் போட்டி
 
வெற்றியாளர் குழு எப்
 
7 சூலை – சமாரா 14 சூலை – சென் பீட்டர்ஸ்பேர்க்
 
2 ஆம் இட குழு ஈ
 
வெற்றியாளர் போட்டி 55 தோல்வியாளர் போட்டி 61
 
3 சூலை – மாஸ்கோ
 
வெற்றியாளர் போட்டி 56 தோல்வியாளர் போட்டி 62
 
வெற்றியாளர் குழு எச்
 
 
2 ஆம் இட குழு ஜி
 

சுற்று 16[தொகு]

சூன் 30, 2018 (2018-06-30)
17:00 (ஒசநே+3)
வெற்றியாளர் குழு சி போட்டி 50 2 ஆம் இட குழு டி
அறிக்கை
கசான் அரங்கு, கசான்

சூன் 30, 2018 (2018-06-30)
21:00 (ஒசநே+3)
வெற்றியாளர் குழு ஏ போட்டி 49 2 ஆம் இட குழு பி
அறிக்கை
பிஸ்த் அரங்கு, சோச்சி

சூலை 1, 2018 (2018-07-01)
17:00 (ஒசநே+3)
வெற்றியாளர் குழு பி போட்டி 51 2 ஆம் இட குழு ஏ
அறிக்கை

சூலை 1, 2018 (2018-07-01)
21:00 (ஒசநே+3)
வெற்றியாளர் குழு டி போட்டி 52 2 ஆம் இட குழு சி
அறிக்கை
நீசுனி நோவ்கோரத் அரங்கு, நீசுனி நோவ்கோரத்

சூலை 2, 2018 (2018-07-02)
18:00 (ஒசநே+3)
வெற்றியாளர் குழு ஈ போட்டி 53 2 ஆம் இட குழு எப்
அறிக்கை
கொசுமசு அரங்கு, சமாரா

சூலை 2, 2018 (2018-07-02)
21:00 (ஒசநே+3)
வெற்றியாளர் குழு ஜி போட்டி 54 2 ஆம் இட குழு எச்
அறிக்கை
ரஸ்தோவ் அரங்கு, ரஸ்தோவ்--தா-தனு

சூலை 3, 2018 (2018-07-03)
17:00 (ஒசநே+3)
வெற்றியாளர் குழு எப் போட்டி 55 2 ஆம் இட குழு ஈ
அறிக்கை
கிரெத்தோவ்சுக்கி அரங்கு, சென் பீட்டர்ஸ்பேர்க்

சூலை 3, 2018 (2018-07-03)
21:00 (ஒசநே+3)
வெற்றியாளர் குழு எச் போட்டி 56 2 ஆம் இட குழு ஜி
அறிக்கை
அத்கிறீத்தியே அரங்கு, மாஸ்கோ

கால் இறுதிகள்[தொகு]

சூலை 6, 2018 (2018-07-06)
17:00 (ஒசநே+3)
வெற்றியாளர் போட்டி 49 போட்டி 57 வெற்றியாளர் போட்டி 50
அறிக்கை
நீசுனி நோவ்கோரத் அரங்கு, நீசுனி நோவ்கோரத்

சூலை 6, 2018 (2018-07-06)
21:00 (ஒசநே+3)
வெற்றியாளர் போட்டி 53 போட்டி 58 வெற்றியாளர் போட்டி 54
அறிக்கை
கசான் அரங்கு, கசான்

சூலை 7, 2018 (2018-07-07)
18:00 (ஒசநே+3)
வெற்றியாளர் போட்டி 55 போட்டி 60 வெற்றியாளர் போட்டி 56
அறிக்கை
கொசுமசு அரங்கு, சமாரா

சூலை 7, 2018 (2018-07-07)
21:00 (ஒசநே+3)
வெற்றியாளர் போட்டி 51 போட்டி 59 வெற்றியாளர் போட்டி 52
அறிக்கை
பிஸ்த் அரங்கு, சோச்சி

அரை இறுதிகள்[தொகு]

சூலை 10, 2018 (2018-07-10)
21:00 (ஒசநே+3)
வெற்றியாளர் போட்டி 57 போட்டி 61 வெற்றியாளர் போட்டி 58
அறிக்கை
கிரெத்தோவ்சுக்கி அரங்கு, சென் பீட்டர்ஸ்பேர்க்

சூலை 11, 2018 (2018-07-11)
21:00 (ஒசநே+3)
வெற்றியாளர் போட்டி 59 போட்டி 62 வெற்றியாளர் போட்டி 60
அறிக்கை

மூன்றாமிடப் போட்டி[தொகு]

சூலை 14, 2018 (2018-07-14)
17:00 (ஒசநே+3)
தோல்வியாளர் போட்டி 61 போட்டி 63 தோல்வியாளர் போட்டி 62
அறிக்கை
கிரெத்தோவ்சுக்கி அரங்கு, சென் பீட்டர்ஸ்பேர்க்

இறுதி[தொகு]

சூலை 15, 2018 (2018-07-15)
18:00 (ஒசநே+3)
வெற்றியாளர் போட்டி 61 போட்டி 64 வெற்றியாளர் போட்டி 62
அறிக்கை

புள்ளிவிபரம்[தொகு]

கோல் அடித்தவர்கள்[தொகு]

14 ஆட்டங்களில் 32 கோல்கள் எடுக்கப்பட்டன, சராசரியாக ஓர் ஆட்டத்திற்கு 2.29 கோல்கள்.

3 கோல்கள்
2 கோல்கள்
1 கோல்
 • அர்கெந்தீனாவின் கொடி செர்கியோ அகுவேரோ
 • ஆத்திரேலியாவின் கொடி மிலே எடினாக்
 • பெல்ஜியத்தின் கொடி டிரீசு மெர்ட்டென்சு
 • பிரேசிலின் கொடி பிலிப் கூட்டின்யோ
 • குரோவாசியாவின் கொடி லூக்கா மோத்ரிச்
 • டென்மார்க்கின் கொடி யூசுப் போல்சென்
 • பிரான்சின் கொடி அந்துவான் கிரீசுமன்
 • ஐசுலாந்தின் கொடி அல்ஃபிரெயோ பின்போகசன்
 • மெக்சிக்கோவின் கொடி இர்விங் லொசானோ
 • உருசியாவின் கொடி ஆர்த்தெம் த்சூபா
 • உருசியாவின் கொடி யூரி கசீன்ஸ்கி
 • உருசியாவின் கொடி அலெக்சாந்தர் கலோவின்
 • செர்பியாவின் கொடி அலெக்சாந்தர் கொலரோவ்
 • எசுப்பானியாவின் கொடி நேச்சோ
 • சுவீடன் கொடி அந்திரயாசு கிராங்க்விஸ்ட்
 • சுவிஸர்லாந்தின் கொடி ஸ்டீவன் சூபர்
 • துனீசியாவின் கொடி பெர்சானி சசி
 • உருகுவையின் கொடி ஒசே கிமேனெசு
1 சுய கோல்
 • ஆத்திரேலியாவின் கொடி அசீசு பெகிச் (பிரான்சிற்கு எதிராக)
 • மொரோக்கோவின் கொடி அசீசு புகாதூசு (ஈரானுக்கு எதிராக)
 • நைஜீரியாவின் கொடி ஒகெனிக்காரோ எத்தேபோ (குரோவாசியாவுக்கு எதிராக)

மூலம்: பீஃபா

பணப்பரிசு[தொகு]

அக்டோபர் 2017 இல் பணப்பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.[53]

நிலை தொகை (ஐ.அ$ மில்லியன்)
அணிக்கு மொத்தம்
வெற்றியாளர் 38 38
இரண்டாமிடம் 28 28
மூன்றாமிடம் 24 24
நான்காமிடம் 22 22
5 ஆம்–8 ஆம் இடங்கள் 16 64
9 ஆம்–16 ஆம் இடங்கள் 12 96
17 ஆம்–32 ஆம் இடங்கள் 8 128
மொத்தம் 400

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 FIFA.com(19 December 2014). "Ethics: Executive Committee unanimously supports recommendation to publish report on 2018/2022 FIFA World Cup™ bidding process". செய்திக் குறிப்பு.
 2. "Russia united for 2018 FIFA World Cup Host Cities announcement". FIFA.com. பார்த்த நாள் 13-11-2013.
 3. "FIFA Picks Cities for World Cup 2018". En.rsport.ru (29 September 2012). பார்த்த நாள் 13-11-2013.
 4. "Russia budget for 2018 Fifa World Cup nearly doubles". BBC News (30 September 2012). பார்த்த நாள் 13-11-2013.
 5. "Russia united for 2018 FIFA World Cup Host Cities announcement". FIFA.com. பார்த்த நாள் 13-11-2013.
 6. "FIFA Picks Cities for World Cup 2018". En.rsport.ru (29 September 2012). மூல முகவரியிலிருந்து 13-11-2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13-11-2013.
 7. "Russia budget for 2018 Fifa World Cup nearly doubles". BBC News (30-0902012). பார்த்த நாள் 13-11-2013.
 8. Goff, Steve (16 January 2009). "Future World Cups". The Washington Post. Archived from the original on 30 April 2011. http://voices.washingtonpost.com/soccerinsider/2009/01/future_world_cups.html. பார்த்த நாள்: 16 January 2009. 
 9. "Mexico withdraws FIFA World Cup bid". FIFA. 29 September 2009. Archived from the original on 30 April 2011. https://www.fifa.com/newscentre/news/newsid=1109321.html. பார்த்த நாள்: 10 February 2011. 
 10. "Indonesia's bid to host the 2022 World Cup bid ends". BBC Sport. 19 March 2010. Archived from the original on 20 March 2010. http://news.bbc.co.uk/sport2/hi/football/8577452.stm. பார்த்த நாள்: 19 March 2010. 
 11. "Combined bidding confirmed". FIFA. 20 December 2008. Archived from the original on 22 January 2009. https://web.archive.org/web/20090122070321/http://www.fifa.com/aboutfifa/federation/bodies/media/newsid%3D983481.html. பார்த்த நாள்: 20 December 2008. 
 12. "England miss out to Russia in 2018 World Cup Vote". BBC News. 2 December 2010. Archived from the original on 3 December 2010. http://news.bbc.co.uk/sport1/hi/football/9250585.stm. பார்த்த நாள்: 2 December 2010. 
 13. Doyle, Paul; Busfield, Steve (2 December 2010). "World Cup 2018 and 2022 decision day – live!". The Guardian (London). Archived from the original on 26 December 2016. https://www.theguardian.com/football/blog/2010/dec/01/world-cup-2018-2022-zurich. 
 14. "Road to Russia with new milestone". FIFA.com (15 January 2015). மூல முகவரியிலிருந்து 21 March 2015 அன்று பரணிடப்பட்டது.
 15. "Zimbabwe expelled from the preliminary competition of the 2018 FIFA World Cup Russia". FIFA.com (12 March 2015). மூல முகவரியிலிருந்து 16 November 2017 அன்று பரணிடப்பட்டது.
 16. "Impact of Football Association of Indonesia suspension". AFC (3 June 2015). மூல முகவரியிலிருந்து 1 March 2016 அன்று பரணிடப்பட்டது.
 17. "Kosovo & Gibraltar become eligible for 2018 World Cup Qualifying". மூல முகவரியிலிருந்து 9 June 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 January 2017.
 18. 18.0 18.1 "2022 FIFA World Cup to be played in November/December". FIFA.com (20 March 2015). மூல முகவரியிலிருந்து 12 November 2017 அன்று பரணிடப்பட்டது.
 19. "Current allocation of FIFA World Cup™ confederation slots maintained". FIFA.com (30 May 2015). மூல முகவரியிலிருந்து 16 November 2017 அன்று பரணிடப்பட்டது.
 20. "Long road to Russia begins in Dili". FIFA.com (11 March 2015). மூல முகவரியிலிருந்து 16 November 2017 அன்று பரணிடப்பட்டது.
 21. "FIFA World Cup™ Preliminary Draw: 1 week to go". FIFA.com (18 July 2015). மூல முகவரியிலிருந்து 16 November 2017 அன்று பரணிடப்பட்டது.
 22. "Organising Committee for the FIFA World Cup extends its responsibilities to cover 2018 and 2022". FIFA.com (19 March 2013). மூல முகவரியிலிருந்து 18 October 2014 அன்று பரணிடப்பட்டது.
 23. "Konstantinovsky Palace to stage Preliminary Draw of the 2018 FIFA World Cup". FIFA.com (10 October 2014). மூல முகவரியிலிருந்து 31 December 2014 அன்று பரணிடப்பட்டது.
 24. T.A.W. (12 November 2017). "How Iceland (population: 330,000) qualified for the World Cup". தி எக்கனாமிஸ்ட். Archived from the original on 13 November 2017. https://www.economist.com/blogs/gametheory/2017/11/dark-norses. பார்த்த நாள்: 13 November 2017. 
 25. "In first, 4 Arab countries qualify for FIFA World Cup Finals". The Times of Israel. 12 November 2017. Archived from the original on 13 November 2017. https://www.timesofisrael.com/in-first-4-arab-countries-qualify-for-fifa-world-cup-finals/. பார்த்த நாள்: 13 November 2017. 
 26. "Final Draw to take place in State Kremlin Palace". FIFA.com (24 January 2017). மூல முகவரியிலிருந்து 16 November 2017 அன்று பரணிடப்பட்டது.
 27. "Final Draw to take place at 18:00". telegraph.co.uk (24 November 2017). மூல முகவரியிலிருந்து 25 November 2017 அன்று பரணிடப்பட்டது.
 28. "OC for FIFA Competitions approves procedures for the Final Draw of the 2018 FIFA World Cup". FIFA.com (14 September 2017). மூல முகவரியிலிருந்து 10 November 2017 அன்று பரணிடப்பட்டது.
 29. "2018 FIFA World Cup™ to be played in 11 Host Cities". fifa.com (29-09-2012). மூல முகவரியிலிருந்து 8-07-2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29-09-2012.
 30. "Match schedules for FIFA Confederations Cup 2017 and 2018 FIFA World Cup™ unveiled". FIFA.com (24 July 2015). மூல முகவரியிலிருந்து 5 October 2017 அன்று பரணிடப்பட்டது.
 31. "FIFA World Cup Russia 2018 – Match Schedule". FIFA.com. மூல முகவரியிலிருந்து 11 September 2017 அன்று பரணிடப்பட்டது.
 32. "The FIFA/Coca-Cola World Ranking – October 2017". மூல முகவரியிலிருந்து 16 October 2017 அன்று பரணிடப்பட்டது.
 33. "World Cup 2018 Opening Ceremony: What time will it start and when will Robbie Williams feature?". The Telegraph (13-06-2018).
 34. "Robbie Williams show at World Cup opening ceremony is too short to ever be dull". Guardian (14-06-2018).
 35. 35.0 35.1 "World Cup 2018: Ronaldo and Robbie Williams star in opening ceremony". BBC. 14-06-2018. https://www.bbc.co.uk/sport/football/44487420. 
 36. "FIFA World Cup Russia 2018 – Match Schedule". FIFA.com (20 December 2017). மூல முகவரியிலிருந்து 28 December 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 December 2017.
 37. "Match report – Group A – Russia-Saudi Arabia" (PDF). Fédération Internationale de Football Association (14 June 2018).
 38. "Match report – Group A – Egypt-Uruguay" (PDF). Fédération Internationale de Football Association (15 June 2018).
 39. "Match report – Group B – Morocco-Iran" (PDF). Fédération Internationale de Football Association (15 June 2018).
 40. "Match report – Group B – Portugal-Spain" (PDF). Fédération Internationale de Football Association (15 June 2018).
 41. "Match report – Group C – France-Australia" (PDF). Fédération Internationale de Football Association (16 June 2018).
 42. "Match report – Group C – Peru-Denmark" (PDF). Fédération Internationale de Football Association (16-06-2018).
 43. "Match report – Group D – Argentina-Iceland" (PDF). Fédération Internationale de Football Association (16-06-2018).
 44. "Match report – Group D – Croatia-Nigeria" (PDF). Fédération Internationale de Football Association (16-06-2018).
 45. "Match report – Group E – Costa Rica-Serbia" (PDF). Fédération Internationale de Football Association (17-06-2018).
 46. "Match report – Group E – Brazil-Switzerland" (PDF). Fédération Internationale de Football Association (17-06-2018).
 47. "Match report – Group F – Germany-Mexico" (PDF). Fédération Internationale de Football Association (17-06-2018).
 48. "Match report – Group F – Sweden-Korea Republic" (PDF). Fédération Internationale de Football Association (18-06-2018).
 49. "Match report – Group G – Belgium-Panama" (PDF). Fédération Internationale de Football Association (18-06-2018).
 50. "Match report – Group G – Tunisia-England" (PDF). Fédération Internationale de Football Association (18-06-2018).
 51. "Regulations – 2018 FIFA World Cup Russia". FIFA.com. மூல முகவரியிலிருந்து 12-07-2017 அன்று பரணிடப்பட்டது.
 52. "FIFA Council decides on key steps for the future of international competitions". FIFA.com (16 March 2018). மூல முகவரியிலிருந்து 31-03-2018 அன்று பரணிடப்பட்டது.
 53. "FIFA World Cup Prize Money" (pdf). FIFA.com (27 October 2017). மூல முகவரியிலிருந்து 29 October 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 October 2017.

வெளி இணைப்புகள்[தொகு]