சொன் எயுங்-மின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சொன் எயுங்-மின்
Team Korea Russia WorldCup 02.png
2018இல் சொன்
சுய விவரம்
முழுப்பெயர்சொன் எயுங்-மின்[1]
பிறந்த தேதி8 சூலை 1992 (1992-07-08) (அகவை 26)[2]
பிறந்த இடம்சுஞ்சியோன், தென் கொரியா
உயரம்1.83 மீ[3]
ஆடும் நிலைபக்கவாட்டாளர் / முன்கள வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்தோட்டன்காம் ஆட்சுபர்
எண்7
இளநிலை வாழ்வழி
2008சியோல்
2008–2010ஆம்பர்கர்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2010ஆம்பர்கர்6(1)
2010–2013ஆம்பர்கர்73(20)
2013–2015பேயர் லீவர்குசன்62(21)
2015–தோட்டன்காம் ஆட்சுபர்99(30)
தேசிய அணி
2008–2009தென்கொரியா 17கீழ்18(7)
2016தென்கொரியா 23கீழ்4(2)
2010–தென்கொரியா70(23)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 21:28, 13 மே 2018 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 27 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

சொன் எயுங்-மின் (Son Heung-min, அங்குல் எழுத்துமுறை: ; அஞ்சா: ; பிறப்பு 8 சூலை 1992) தென் கொரிய தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகமான தோட்டன்காம் ஆட்சுபர் அணியிலும் தென் கொரிய தேசிய காற்பந்து அணியிலும் p ஒருபக்க விளையாட்டாளராக அல்லது முன்கள வீரராக விளையாடி வருகின்றார்.

சொன் தமது பயிற்சியை ஆம்பர்கு கழகத்தில் மேற்கொண்டார். இவ்வணியில் 2010ஆம் ஆண்டு செருமானிய புன்டசுலீகாவில் அறிமுகமானார். 2013இல் €10 மில்லியன் ஒப்பந்தத்தொகைக்கு பேயர் லீவர்குசன் அணிக்கு மாறினார். இந்தக் கழகத்தில் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு மற்றும் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டிகளில் பங்கேற்றார். இரண்டாண்டுகள் கழித்து £22 மில்லியன் தொகைக்கு தோட்டன்காம் ஆட்சுபர் கழகத்திற்கு மாறினார். ஓர் ஆசிய விளையாட்டாளர் இவ்வளவு கூடுதல் தொகைக்கு எடுக்கப்படுவது முதலாவதாகும்.[4] தோட்டன்காமில் ஆடுகையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகக் க்கூடுதலான கோல்கள் எடுத்த ஆசியராக சாதனை புரிந்தார்.[5]

2010இலிருந்து பன்னாட்டுப் போட்டிகளில் தென்கொரியாவிற்காக ஆடி வருகிறார். 2014, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் தென்கொரிய அணியில் பங்கேற்றுள்ளார். உலகக்கோப்பை போட்டிகளில் தென்கொரியாவின் மிக உயர்ந்த கோல்கள் எடுத்த மூவரில் இவரும் ஒருவர். மற்ற இருவர் பார்க் ஜி-சுங், ஆன் யுங் ஃவான் ஆவர். இம்மூவரும் தலா மூன்று கோல்கள் எடுத்துள்ளனர். 2011இலும் 2015 இலும் ஆசியக் கோப்பை போட்டிகளில் ஆடியுள்ளார்; 2015இல் தென்கொரியா இரண்டாமிடத்தை எட்ட உதவி புரிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Squads for 2016/17 Premier League confirmed". Premier League (1 September 2016). பார்த்த நாள் 15 September 2016.
  2. "Son Heung-Min". AFS Enterprises. பார்த்த நாள் 4 January 2018.
  3. "Son Heung-Min: Overview". Premier League. பார்த்த நாள் 14 March 2018.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AsianTransferRecord என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; top scorer என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொன்_எயுங்-மின்&oldid=2713496" இருந்து மீள்விக்கப்பட்டது