2018 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2018 ஃபிஃபா உலகக் கோப்பை
Чемпионат мира по футболу 2018
சின்னம்
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு  உருசியா
நாட்கள் 14 சூன் – 15 சூலை
அணிகள் 32 (எதிர்பார்ப்பு) (5 அல்லது 6 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள் 12 (11 நகரங்களில்)
2014
2022
2018 உலக கோப்பையை நடத்த ஏலம் வென்ற உருசிய அதிகாரிகள் கொண்டாடுதல்.

2018 பீஃபா உலகக் கோப்பை (2018 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் ஓர் பன்னாட்டு காற்பந்தாட்ட போட்டியாகும். 21வது முறையாக நடக்கும் இந்த உலகக்கோப்பை காற்பந்து போட்டி உருசியாவில் சூன் 8, 2018 முதல் சூலை 8, 2018 வரை நடைபெற உள்ளது.[1] இந்தப் போட்டியை உருசியா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

2010 திசம்பர் 2 இல் இப்போட்டிகளை உருசியா நடத்தும் என அறிவிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெறும் முதலாவது கால்பந்து உலகக்கோப்பை இதுவாகும். கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறும் முதல் உலகக்கோப்பை இதுவாகும். இறுதிப் போட்டிகள் ஒரு போட்டி தவிர ஏனையவை உருசியாவின் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் நடைபெறுகின்றன.[2][3][4]

இறுதிச் சுற்றில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இவற்றில் 31 அணிகள் தகுதிநிலைப் போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டன. உருசியா போட்டிகளை நடத்தும் நாடாக தகுதி பெற்றது. 32 அணிகளில், ஐசுலாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன் முதலாக உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. உருசியாவின் 11 நகரங்களில் 12 அரங்குகளில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இறுதிப் போட்டி 2018 சூலை 15 இல் மாஸ்கோவின் லூசினிக்கி அரங்கில் நடைபெறும்.[5][6][7]

உலகக்கோப்பையில் வெற்றி பெறும் அணி 2021 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெறும்.

நடைபெறும் நாட்டைத் தேர்வு செய்தல்[தொகு]

2018 பீபாவை நடையேற்றும் நாட்டைத் தேர்வு செய்தல் (அதிகம் 12 வாக்குகள்)
நாடுகள் வாக்குகள்
சுற்று 1 சுற்று 2
உருசியா 9 13
போர்த்துக்கல் / ஸ்பெயின் 7 7
பெல்ஜியம் / நெதர்லாந்து 4 2
இங்கிலாந்து 2 -

மேற்சான்றுகள்[தொகு]

  1. FIFA.com(19-12-2014). "Ethics: Executive Committee unanimously supports recommendation to publish report on 2018/2022 FIFA World Cup™ bidding process". செய்திக் குறிப்பு.
  2. "Russia united for 2018 FIFA World Cup Host Cities announcement". FIFA.com. பார்த்த நாள் 13-11-2013.
  3. "FIFA Picks Cities for World Cup 2018". En.rsport.ru (29 September 2012). பார்த்த நாள் 13-11-2013.
  4. "Russia budget for 2018 Fifa World Cup nearly doubles". BBC News (30 September 2012). பார்த்த நாள் 13-11-2013.
  5. "Russia united for 2018 FIFA World Cup Host Cities announcement". FIFA.com. பார்த்த நாள் 13-11-2013.
  6. "FIFA Picks Cities for World Cup 2018". En.rsport.ru (29 September 2012). மூல முகவரியிலிருந்து 13-11-2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13-11-2013.
  7. "Russia budget for 2018 Fifa World Cup nearly doubles". BBC News (30-0902012). பார்த்த நாள் 13-11-2013.