ரொமேலு லுக்காக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொமுலு லுக்காக்கு
Romelu Lukaku

மான்செஸ்டர் யுனைடெட்டிற்காக 2017இல் விளையாடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்ரொமுலு மெனாமா லுக்காக்கு பொலிங்கோலி [1]
பிறந்த நாள்13 மே 1993 (1993-05-13) (அகவை 30)[2]
பிறந்த இடம்ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
உயரம்1.90 மீ[3]
ஆடும் நிலை(கள்)அடிப்பாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
மான்செஸ்டர் யுனைடெட்
எண்9
இளநிலை வாழ்வழி
1999–2003ரூபெல் பூம்
2003–2004கேஎப்சி விந்தாம்
2004–2006லியர்செ
2006–2009அன்டர்லெக்ட
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2009–2011அன்டர்லெக்ட்73(33)
2011–2014செல்சீ10(0)
2012–2013→ வெஸ்ட் பிரோம்விச் அல்பியான் (கடன்)35(17)
2013–2014→ எவர்டன் (கடன்)31(15)
2014–2017எவர்டன்110(53)
2017–மான்செஸ்டர் யுனைடெட்34(16)
பன்னாட்டு வாழ்வழி
2008பெல்ஜியம் U154(1)
2011பெல்ஜியம் U181(0)
2009பெல்ஜியம் U215(1)
2010–பெல்ஜியம்70(38)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 17:45, 29 ஏப்ரல் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 16:56, 18 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

ரொமுலு மெனாமா லுகாக்கு பொலுங்கோலி (Romelu Menama Lukaku Bolingoli, 13 மே 1993) பெல்ஜிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலும் பெல்ஜியம் தேசிய காற்பந்து அணியிலும் அடிப்பாளராக விளையாடுகிறார். தனது 23வது பிறந்தநாளுக்கு முன்பாக பிரீமியர் லீக் போட்டிகளில்50 கோல்களை அடித்த ஐந்து விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்குகின்றார்.[4] இதே போட்டிகளில் 100 கோல்களை அடித்த ஐந்தாவது மிக இளையவராகவும் உள்ளார்.[5] பெல்ஜியம் பன்னாட்டு விளையாட்டாளராக 38 கோல்களை அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.[N1][6]

லுகாக்கு தனது விளையாட்டு வாழ்வை உள்ளூர் ரூபெல் பூம் அணியில் தொடங்கினார். பின்னர் லியர்செ அணியில் ஆடினார். அங்கிருந்து 2006இல் பெல்ஜிய முதல்நிலை லீக் போட்டிகளில் ஆடிய அன்டர்லெக்ட்டிற்கு மாறினார். தனது 16ஆவது அகவையிலேயே தொழில்முறை விளையாட்டாளராக தொடங்கினார். 2009-10ஆம் ஆண்டுகளில் பெல்ஜிய லீக் போட்டிகளில் மிக கூடுதலான கோல்களை அடித்த சாதனை புரிந்தார். 2011இல் பெல்ஜியத்தின் எபனி காலணியை வென்றார். 2011ஆம் ஆண்டில் செல்சீ அணியில் இணைந்தார். 2014இல் எவர்டன் கழகத்திலும் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திலும் இணைந்தார.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொமேலு_லுக்காக்கு&oldid=3569997" இருந்து மீள்விக்கப்பட்டது