பிஸ்த் ஒலிம்பிக் அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபிஸ்த் ஒலிம்பிக் அரங்கு
Fisht Stadium in January 2018.jpg
ஃபிஸ்த் ஒலிம்பிக் அரங்கம் - சனவரி 2018.
இடம் சோச்சி, கிராஸ்னதார் பிரதேசம், உருசியா
அமைவு 43°24′08″N 39°57′22″E / 43.4022667°N 39.9561111°E / 43.4022667; 39.9561111ஆள்கூறுகள்: 43°24′08″N 39°57′22″E / 43.4022667°N 39.9561111°E / 43.4022667; 39.9561111
திறவு 2013[1]
உரிமையாளர் உருசிய அரசு (ஒலிம்ப்சுட்ராய்)
தரை புல் தரை
கட்டிட விலை அமெரிக்க $779 மில்லியன்
கட்டிடக்கலைஞர் பாப்புலசு,[2] புரோ அப்போல்டு
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 41,220 (பீபா உலகக் கோப்பை)
40,000 ( பீபா உலகக் கோப்பைக்குப் பிறகு)
பரப்பளவு 105 x 68 மீ

ஃபிஸ்த் ஒலிம்பிக் அரங்கு (Fisht Olympic Stadium, உருசியம்: Олимпийский стадион «Фишт», ஒ.பெ Olimpiyskiy stadion "Fisht", பஒஅ[ɐlʲɪmˈpʲijskʲɪj stədʲɪˈon ˈfʲiʂt]) உருசியாவின் சோச்சியில் அமைந்துள்ள புறவெளி விளையாட்டரங்கம். சோச்சி ஒலிம்பிக் பூங்காவில் உள்ள இந்த விளையாட்டரங்கம் மேற்கு காக்கசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள ஃபிஸ்த் சிகரத்தை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது. இதன் பார்வையாளர் கொள்ளளவு 40,000 ஆகும். இது 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2014 குளிர்கால இணை ஒலிம்பிக் போட்டிகளுக்காக கட்டப்பட்டது. அவற்றின் துவக்க விழாவின்போதும் நிறைவு விழாவின்போதும் பயன்படுத்தப்பட்டது.

இந்த விளையாட்டரங்கம் முதலில் மூடிய உள்ளரங்கமாகவே கட்டப்பட்டது; 2016இல் இது மீளமைக்கப்பட்டு திறந்தவெளி கால்பந்து விளையாட்டரங்கமாக மாற்றப்பட்டது. இது 2017இல் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளுக்காகவும் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்காகவும் பயன்பட்டது.

போட்டிகளும் முடிவுகளும்[தொகு]

2017 பீபா கூட்டமைப்புக்களின் கோப்பை[தொகு]

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப் பதிவு
19 சூன் 2017 18:00  ஆத்திரேலியா 2–3  செருமனி குழு பி 28,605[3]
21 சூன் 2017 21:00  மெக்சிக்கோ 2–1  நியூசிலாந்து குழு ஏ 25,133[4]
25 சூன் 2017 18:00  செருமனி 3–1  கமரூன் குழு பி 30,230[5]
29 சூன் 2017 21:00  செருமனி 4–1  மெக்சிக்கோ அரை-இறுதி 37,923[6]

2018 பீபா உலகக்கோப்பை[தொகு]

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
15 சூன் 2018 21:00  போர்த்துகல்  எசுப்பானியா குழு பி
18 சூன் 2018 18:00  பெல்ஜியம்  பனாமா குழு ஜி
23 சூன் 2018 21:00  செருமனி  சுவீடன் குழு எஃப்
26 சூன் 2018 17:00  ஆத்திரேலியா  பெரு குழு சி
30 சூன் 2018 21:00 வாகையாளர் குழு ஏ இரண்டாமவர் குழு பி பதின்மர் சுற்று
7 சூலை 2018 21:00 வாகையாளர் ஆட்டம் 51 வாகையாளர் ஆட்டம் 52 கால்-இறுதி
அரங்கின் உட்பகுதியின் அகலப் பரப்புக் காட்சி .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fisht Olympic Stadium". Sochi2014.com. 26 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sochi 2014 Main Stadium". portfolio.populous.com. 2010-02-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-08 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Match report – குழு B – Australia - Germany" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 19 சூன் 2017. 2017-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Match report – குழு A – Mexico - New Zealand" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 21 சூன் 2017. 2017-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Match report – குழு B – Germany - Cameroon" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 25 சூன் 2017. 2017-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Match report – Semi-final – Germany - Mexico" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 29 சூன் 2017. 2017-07-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 29 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]