உள்ளடக்கத்துக்குச் செல்

சமாரா

ஆள்கூறுகள்: 53°12′10″N 50°08′27″E / 53.20278°N 50.14083°E / 53.20278; 50.14083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமாரா
Самара
நகரம்[1]
சமாரா-இன் கொடி
கொடி
சமாரா-இன் சின்னம்
சின்னம்
சமாரா-இன் அமைவிடம்
Map
சமாரா is located in உருசியா
சமாரா
சமாரா
சமாரா-இன் அமைவிடம்
சமாரா is located in உருசியா
சமாரா
சமாரா
சமாரா (உருசியா)
ஆள்கூறுகள்: 53°12′10″N 50°08′27″E / 53.20278°N 50.14083°E / 53.20278; 50.14083
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்சமாரா மாகாணம்[2]
நிறுவிய ஆண்டு1586[3]
நகரம் status since1688[4]
அரசு
 • நிர்வாகம்சமாரா நகரசபை[5]
 • முதல்வர்[6]எலேனா லப்பூச்கினா[6]
பரப்பளவு
 • மொத்தம்541.382 km2 (209.029 sq mi)
ஏற்றம்
100 m (300 ft)
மக்கள்தொகை
 (2010 கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்11,64,685
 • மதிப்பீடு 
(2018)[9]
11,63,399 (−0.1%)
 • தரவரிசை2010 இல் 6வது
 • அடர்த்தி2,200/km2 (5,600/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைcity of oblast significance of Samara[2]
 • Capital ofசமாரா மாகாணம்,[2] வோல்சுக்கி மாவட்டம்[1]
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்சமாரா நகர வட்டம்[10]
 • Capital ofசமாரா நகர வட்டம்,[10] வோல்ஸ்கி மாநகர மாவட்டம்[11]
நேர வலயம்ஒசநே+4 ([12])
அஞ்சல் குறியீடு(கள்)[13]
443XXX
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 846[14]
OKTMO குறியீடு36701000001
இணையதளம்city.samara.ru

சமாரா (Samara, உருசியம்: Сама́ра), 1935 முதல் 1991 வரை குய்பீசெவ், Куйбышев), என்பது உருசியாவின் ஒரு நகரமும், சமாரா மாகாணத்தின் நிருவாக மையமும் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில் இது உருசியாவின் ஆறாவது பெரிய நகரம் ஆகும்.[8] இது ஐரோப்பிய உருசியாவின் தென்கிழக்கே வோல்கா மற்றும் சமாரா ஆறுகளின் சந்தியில் அமைந்துள்ளது. இந்நகரின் மேற்கு எல்லையாக வோல்கா ஆறு உள்ளது. ஆற்றின் அடுத்த கரையில் சிகூலி மலைகள் உள்ளன. வடக்கு எல்லையில் சோக்கோலி மலைகளும், தெற்கு மற்றும் கிழக்கே தெப்புவெளிகளும் காணப்படுகின்றன. நகரின் நிலப்பரப்பு 46,597 எக்டேர்கள் ஆகும். மக்கள்தொகை: 1,164,685 (2010).

சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியில் சமாரா ஒரு மூடிய நகராக இருந்தது. தற்போது இது ஐரோப்பிய உருசியாவின் ஒரு முக்கிய அரசியல், வணிக, தொழிற்துறை, கலாசார மையமாக உள்ளது. 2007 மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய—உருசிய உச்சி மாநாடு இங்கு நடைபெற்றது. இந்நகரம் கோடை காலத்தில் மிகவும் வெப்பமாகவும், குளிர் காலத்தில் மிகவும் குளிரான காலநிலையும் நிலவுகின்றன.

சமாரா 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்த்தத் தெரிவான உருசியாவின் 11 நகரங்களில் ஒன்றாகும். இங்கு நான்கு குழுநிலை ஆட்டங்களும், ஒரு 16-சுற்று ஆட்டமும், ஒரு காலிறுதி ஆட்டமும் நடைபெறவிருக்கின்றன. அனைத்து ஆட்டங்களும் இங்கு புதிதாக அமைக்கப்பட்ட கொசுமசு அரங்கில் நடைபெறும்.

சோவியத் காலம்

[தொகு]

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1941 இல் சமாரா (அன்றைய பெயர் குய்பீசெவ்) சோவியத் ஒன்றியத்தின் தற்காலிக தலைநகராக இருந்தது. உருசியாவை முற்றுகையிட்ட செருமனி மாஸ்கோவைக் கைப்பற்றும் பட்சத்தில், இந்நகரம் மாஸ்கோவிற்கு மாற்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1943 ஆம் ஆண்டில் தலைநகர் மீண்டும் மாஸ்கோவிகு மாற்றப்பட்டது.[15]

போரின் ஆரம்ப காலம் முதல் இங்கு போருக்குத் தேவையான இராணுவ வானூர்திகள், சுடுகலன்கள், படைத்தளவாடங்கள் இங்கு தயாரிக்கப்பட்டன. சமராவின் குடிமக்கள் பலரும் போரில் பங்கு கொண்டனர்.

போருக்குப் பின்னர் பாதுகாப்புத் தொழிற்துறை இங்கு வளர்த்தெடுக்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இதனால் இது ஒரு மூடிய நகராக ஆக்கப்பட்டது. 1960 இல், நாட்டின் ஏவுகணை பாதுகாப்பு மையமாக ஆக்கப்பட்டிருந்தது. உலகின் முதலாவது மனிதரை விண்ணுக்குக் கொண்டு சென்ற விண்கலத்தை ஏவிய வஸ்தோக் என்ற ஏவுகலம் இங்கேயே தயாரிக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 12 இல் விண்ணுக்குச் சென்ற முதலாவது மனிதர் யூரி ககாரின் பூமிக்குத் திரும்பிய போது இங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; OKATO என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 2.2 Charter of Samara Oblast
  3. Molly O'Neal (20 August 2015). Democracy, Civic Culture and Small Business in Russia's Regions: Social Processes in Comparative Historical Perspective. Routledge. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-43509-9.
  4. Russia. Ministerstvo puteĭ soobshchenīi︠a︡; John Marshall (1900). Guide to the Great Siberian Railway. Ministry of Ways of Communication. pp. 86–.
  5. "Дума городского округа Самара | Официальный сайт | Самарская городская Дума". www.gordumasamara.ru. Samara City Council. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
  6. 6.0 6.1 "Глава Самары Елена Лапушкина проголосовала на выборах Президента России". samadm.ru (in ரஷியன்). City of Samara. Archived from the original on 20 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Пояснительная записка к Генеральному плану г.о. Самара. Приложение 1. Основные технико-экономические показатели பரணிடப்பட்டது 2020-11-13 at the வந்தவழி இயந்திரம் с.21
  8. 8.0 8.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  10. 10.0 10.1 Law #23-GD
  11. Law #189-GD
  12. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  13. Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
  14. "Samara city, Russia travel guide". russiatrek.org. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
  15. Andrew Nagorski: The Greatest Battle, 2007, pp. 165–166

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரா&oldid=3426158" இலிருந்து மீள்விக்கப்பட்டது