கொசுமசு அரங்கு

ஆள்கூறுகள்: 53°16′40″N 50°14′14″E / 53.27778°N 50.23722°E / 53.27778; 50.23722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொசுமசு அரங்கு

யூஈஎஃப்ஏ 4/4 stars

இடம் சமாரா, உருசியா
அமைவு 53°16′40″N 50°14′14″E / 53.27778°N 50.23722°E / 53.27778; 50.23722
எழும்பச்செயல் ஆரம்பம் 2014
எழும்புச்செயல் முடிவு 2018
திறவு 28 ஏப்ரல் 2018
உரிமையாளர் சமாரா ஒப்லாத்து அரசு
ஆளுனர் கிரைலியா சோவெடோவ் சமாரா காற்பந்துக் கழகம்
தரை புற்றரை
கட்டிட விலை $320 மில்லியன்
குத்தகை அணி(கள்) கிரைலியா சோவெடோவ் சமாரா காற்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 44,918

கொசுமசு அரங்கு (Cosmos Arena, உருசியம்: «Космос Арена») உருசியாவின் சமாரா நகரில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம் ஆகும். 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டி நடக்கவிருக்கும் அரங்குகளில் இந்த விளையாட்டரங்கமும் ஒன்றாகும். இது உலகக் கோப்பையின்போது சமாரா அரங்கு எனக் குறிப்பிடப்படும்.[1] உருசிய காற்பந்து தேசிய கூட்டிணைவில் பங்கேற்கும் கிரைலியா சோவெடோவ் சமாரா காற்பந்துக் கழகத்தின் தாய் அரங்கமாகவும் விளங்குகின்றது. இந்த அரங்கில் 44,918 பார்வையாளர்கள் போட்டியாட்டங்களைக் காணவியலும்.[2] உலகக் கோப்பைக்காக இந்த அரங்கைப் புதுப்பிக்க $320 மில்லியன் செலவில் 2012இல் வடிவமைப்பு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. [3]

விவரணம்[தொகு]

பொதுப் பண்புகள்

  • அரங்கப் பரப்பு: 27 எக்டேர்
  • மொத்தக் கொள்ளளவு: 44,918 பார்வையாளர்கள்
  • விஐபி பெட்டி கொள்ளளவு: 1,125 பார்வையாளர்கள்
  • முன்னுரிமை இருக்கைகள்: 75
  • மொத்தப் பரப்பு: 160,498.10 மீ2
  • மொத்த கட்டமைப்பு கன அளவு: 503,480 மீ3
  • உயரம்: 60 மீ
  • அரங்க கட்டிடம்: 2 அடுக்கு திறந்த தாங்கிகள், 2 அடுக்கு வான்பெட்டிகள்
  • கட்டமைப்புச் செலவு: 18.9 (20.7) பில்லியன் ரூபிள்கள்
  • உருவாக்குநர்: இசுபோர்ட்-இஞ்சினியரிங்கு
  • பொது வடிவமைப்பாளர்: TerrNIIgrazhdanproekt
  • வடிவமைப்பு ஒப்பந்ததாரர்கள்: அரீனா டிசைன் இன்சுட்டியூட், சோடோசு இலாப், போன்றன.
  • பொது ஒப்பந்ததாரர்: கசன் புரொடக்சன் அன்டு கன்சுட்ரக்சன் அசோசியேசன்

2018 பீபா உலகக் கோப்பை[தொகு]

நாள் நேரம் [கு 1] அணி #1 Res. அணி #2 சுற்று வருகைப் பதிவு
17 சூன் 2018 16:00  கோஸ்ட்டா ரிக்கா  செர்பியா குழு ஈ
21 சூன் 2018 16:00  டென்மார்க்  ஆத்திரேலியா குழு சி
25 சூன் 2018 18:00  உருகுவை  உருசியா குழு ஏ
28 சூன் 2018 18:00  செனிகல்  கொலம்பியா குழு எச்
2 சூலை 2018 18:00 வாகையாளர் குழு ஈ இரண்டாமிட அணி குழு எஃப் பதின்மர் சுற்று
7 சூலை 2018 18:00 வாகையாளர் போட்டி 55 வாகையாளர் போட்டி 56 கால்-இறுதி
  1. அனைத்து நேரங்களும் சமாரா நேரங்கள் (UTC+04:00)

மேற்கோள்கள்[தொகு]

  1. Stadium names for the 2018 FIFA World Cup Russia™ confirmed பரணிடப்பட்டது 2017-11-11 at the வந்தவழி இயந்திரம். பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு.
  2. "Russia 2018 Fifa World Cup: artist's impressions of stadiums". 7 December 2010 – via www.telegraph.co.uk.
  3. "Russia: Samara looks for designers, stadium to cost $320 million – StadiumDB.com". stadiumdb.com.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cosmos Arena
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசுமசு_அரங்கு&oldid=3265543" இலிருந்து மீள்விக்கப்பட்டது