கலினின்கிராத்

ஆள்கூறுகள்: 54°42′1″N 20°27′11″E / 54.70028°N 20.45306°E / 54.70028; 20.45306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலினின்கிராத்
Калининград

திருக்குடும்பக் கோவில்; கோனிசுபர் பேராலயம்; "மீனவர்களின் கிராமம்"; பிரான்டன்பர்க் வாயில்; அரசரின் வாயில்; பிரிகோலியா ஆறு
கலினின்கிராத் is located in உருசியா
கலினின்கிராத்
கலினின்கிராத்
இரசியாவில் கலினின்கிராத் இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 54°42′1″N 20°27′11″E / 54.70028°N 20.45306°E / 54.70028; 20.45306

சின்னம்

தேசியப்பாடல்எதுவுமில்லை[1]
City நாள்சூலை மாதத்தில் முதல் சனிக்கிழமை
நிருவாக அமைப்பு (நவம்பர் 2011)
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு கலினின்கிராத் மாகாணம்[2]
'மாநகரத் தரம் (as of சூலை 2009)
Urban okrugகலினின்கிராத் நகர வட்டம்[3]
Administrative center ofகலினின்கிராத் நகர வட்டம்[3]
பிரதிநிதித்துவ அமைப்புநகரசபை உறுப்பினர்கள்[4]
Statistics
பரப்பளவு223.03 ச.கி.மீ (86.1 ச.மை)[5]
Population (சனவரி 2014)4,48,548 inhabitants[6]
'September 1, 1255[5]
Previous namesகோனிக்சுபர்க் (until 1946)[7]
Postal code(s)236001, 236003–236011, 236013–236017, 236019–236024, 236028, 236029, 236034–236036, 236038–236041, 236043, 236044, 236700, 236880, 236885, 236890, 236899, 236931, 236950, 236960–236962, 236967, 236970, 236980–236983, 236985, 236989, 236999[மேற்கோள் தேவை]
Dialing code(s)+7 4012
Official websitehttp://www.klgd.ru

கலினின்கிராத் (Kaliningrad, உருசியம்: Калининград; முன்னாள்r செருமானியப் பெயர்: கோனிசுபர்க்; இத்திய மொழி: קעניגסבערג, கினிக்சுபர்க்) என்பது உருசியாவின் கலினின்கிராத் மாகாணத்தின் நிருவாக மையம் ஆகும். கலினின்கிராத் மாகாணம் பால்டிக் கடல் பகுதியில் போலந்து, லித்துவேனியா ஆகிய நாடுகளிடையே அமைந்துள்ள ஒரு உருசியப் புறநில ஆட்சிப் பகுதியாகும்.

ஐரோப்பிய நடுக்காலப் பகுதியில், இது துவாங்ஸ்தி என்ற பண்டைய புருசியக் குடியிருப்பாக இருந்தது. 1255 இல், வடக்கு சிலுவைப் போர்க் காலத்தில் புதிய கோட்டை கட்டப்பட்டது. இந்நகரம் புருசியாவின் குறுநிலம், மற்றும் கிழக்குப் புருசியா (இன்றைய செருமனி) ஆகியவற்றின் தலைநகராக விளங்கியது. இரண்டாம் உலகப் போரில் இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது. இது உருசிய நகரமான போது, இதன் குடிமக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 431,902 ஆகும்.2010Census

வரலாறு[தொகு]

ஐரோப்பிய நடுக்காலப் பகுதியில், இது துவாங்ஸ்தி என்ற பண்டைய புருசியக் குடியிருப்பாக இருந்தது. 1255 இல், வடக்கு சிலுவைப் போர்க் காலத்தில் புதிய கோட்டை கட்டப்பட்டது. இந்நகரம் புருசியாவின் குறுநிலம், மற்றும் கிழக்குப் புருசியா (இன்றைய செருமனி) ஆகியவற்றின் தலைநகராக விளங்கியது. இங்கு பெரும்பான்மையாக செருமனியினரும், சிறுபான்மையினராக போலந்து லித்துவேலிய நாட்டவரும் வாழ்ந்து வந்தனர். இரண்டாம் உலகப் போரில் 1994 ஆம் ஆண்டில் இந்நகரம் பிரித்தானியரின் குண்டுவீச்சுக்கு இலக்காகியும், 1945 ஆரம்பத்தில் சோவியத்தின் ஆக்கிரமிப்பாலும் பெரும் அழிவுக்குள்ளானது. போரின் முடிவில், அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீ ஆகியோரின் ஒப்புதலுடன், இது சோவியத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.[8] இது சோவியத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்ட போது, இதன் குடிமக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

1946 இல் கோனிசுபர்க் என்ற நகரின் பெயர் போல்செவிக்கின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான மிக்கைல் கலினின் என்பவரின் நினைவாக கலினின்கிராத் என மாற்றப்பட்டது. எஞ்சியிருந்த செருமானியர்கள் அங்கிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, சோவியத் மக்கள் குடியேற்றப்பட்டனர். அதிகாரபூர்வ மொழியாக இருந்த இடாய்ச்சு மொழி அகற்றப்பட்டு உருசிய மொழி அதிகாரபூர்வமாக்கப்பட்டது.

பனிப்போர்க் காலத்தில் இம்மாகாணம் இப்பிராந்தியத்தில் முக்கியத்துவம் பெற்றது. 1950களில் சோவியத் பால்ட்டிக் கடற்படையினரின் தலைமையகம் இங்கு இருந்தது. பனிப்போர்க் காலத்தில் வெளிநாட்டவர் இங்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Article 6 of the Charter of Kaliningrad
  2. Resolution #640
  3. 3.0 3.1 Law #397
  4. Charter of Kaliningrad, Article 25
  5. 5.0 5.1 Official website of Kaliningrad. Passport of Kaliningrad Urban Okrug. (உருசிய மொழியில்)
  6. Kaliningrad Oblast Territorial Branch of the Federal State Statistics Service. Оценка численности населения Калининградской области по состоянию на 1 января 2014 года பரணிடப்பட்டது 2016-10-18 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  7. Decree of July 4, 1946
  8. "THE POTSDAM DECLARATION". ibiblio.org. பார்க்கப்பட்ட நாள் 2014-12-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலினின்கிராத்&oldid=3238781" இலிருந்து மீள்விக்கப்பட்டது