தொன்-மீது-ரசுத்தோவ்

ஆள்கூறுகள்: 47°14′N 39°42′E / 47.233°N 39.700°E / 47.233; 39.700
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொன்-மீது-ரசுத்தோவ்
Rostov-on-Don
Ростов-на-Дону
Rostov-on-Don is located in உருசியா
Rostov-on-Don
Rostov-on-Don
இரசியாவில் தொன்-மீது-ரசுத்தோவ் இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 47°14′N 39°42′E / 47.233°N 39.700°E / 47.233; 39.700


தேசியப்பாடல்எதுவுமில்லை[1]
நகரம் நாள்செப்டம்பரின் மூன்றாவது ஞாயிறு[2]
நிருவாக அமைப்பு (நவம்பர் 2014)
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு ரசுத்தோவ் மாகாணம்[3]
'மாநகரத் தரம் (as of நவமப்ர் 2008)
Urban okrugதொன்-மீது-ரஸ்தோவ் நகர வட்டம்[4]
Administrative center ofதொன்-மீது-ரஸ்தோவ் நகர வட்டம்[4]
பிரதிநிதித்துவ அமைப்புநகரசபை[5]
Statistics
பரப்பளவு348.5 ச.கி.மீ (134.6 ச.மை)[6]
Population (சனவரி 2014)11,09,800 inhabitants[7]
'1749[8]
Postal code(s)344000–344002, 344004, 344006, 344007, 344009–344013, 344015, 344016, 344018–344023, 344025, 344029, 344030, 344032–344034, 344037–344039, 344041, 344045, 344048, 344050, 344052, 344055, 344056, 344058, 344064, 344065, 344068, 344069, 344072, 344079, 344082, 344090–344095, 344101, 344103, 344111–344114, 344116, 344700, 344880, 344890, 344899, 344960–344965, 344999, 901078, 995100[மேற்கோள் தேவை]
Dialing code(s)+7 863
Official websitehttp://www.rostov-gorod.ru

தொன்-மீது-ரசுத்தோவ் (Rostov-on-Don, உருசியம்: Росто́в-на-Дону́, ஒ.பெ ரஸ்தோவ்-நா-தனு) என்பது உருசியாவின் ஒரு துறைமுக நகரமும், ரசுத்தோவ் மாகாணம்,, மற்றும் தெற்கு நடுவண் மாவட்டம் ஆகியவற்றின் நிருவாக மையமும் ஆகும். இந்நகரம் கிழக்கு ஐரோப்பிய மலைத்தொடரின் தென்கிழக்குப் பகுதியில், தொன் ஆற்றின் மீது, அசோவ் கடலில் இருந்து 32 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. நகரின் தென்மேற்கு புறநகர்கள் தொன் ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ளன. 2010 கணக்கெடுப்பின் படி, இந்நகரின் மக்கள்தொகை 1,089,261 ஆகும்.

வரலாறு[தொகு]

பண்டைய காலத்தில் இருந்து தொன் ஆற்றின் வாயிற் பகுதியில் அமைந்திருந்த இந்நகர் கலாசார, வணிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. சிதியர்கள், சர்மாத்துகள், சாவ்ரொமாத்துகள் ஆகிய இனக்குழுக்கள் இதன் மூத்த குடிகளாக இருந்துள்ளனர்.

1749 இல், உருசியாவின் முதலாம் பேதுரு பேரரசரின் மகள் பேரரசி எலிசபெத் துருக்கியுடனான வணிகத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தொன் ஆற்றின் கிளை நதியான தெமெர்னிக் ஆற்றில் சுங்கச் சாவடி ஒன்றை அமைத்திருந்தார்.[8] 18-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், உருசிய-துருக்கிப் போர் (1768–74) காலத்தில் உதுமானியர்கள் வசமிருந்த கருங்கடல் பகுதிகள் உருசியப் பேரரசின் கைக்கு மாறியதை அடுத்து, இதன் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.

1796 இல் இக்குடியிருப்பு நகரமயமாக்கப்பட்டது, 1797 இல் நோவசிபீர்சுக் ஆளுநரின் கீழ் ரஸ்தயெவ்கி உயெஸ்த் என அழைக்கப்பட்டது. 1806 ஆம் ஆண்டில் இதன் பெயர் அதிகாரபூர்வமாக ரஸ்தோவ்-தா-தனு என மாற்றப்பட்டது.[8] 19-ஆம் நூற்றாண்டில், உருசியாவின் உட்பகுதியுடனான ஆற்று இணைப்பின் முக்கியத்துவம் காரணமாக, இந்நகரம் முக்கிய வணிக மையமாக மாற்றப்பட்டது. 1870 இல் கார்கீவ் உடனான தொடருந்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 1871 இல் வரோன்பெசுடனும், 1875 இல் விளாதிகவ்காசுடனும் இணைக்கப்பட்டது. 1779 இல் கிரிமியாவில் இருந்து ஆர்மீனிய அகதிகள் இங்கு குடியேறினர்.

leftபுரட்சிப் பூங்கா

உருசிய உள்நாட்டுப் போரின் போது, தெற்கு உருசியாவில் மிகப் பெரிய தொழில்வள நகரங்களில் ஒன்றாக இருந்த இந்நகரைக் கைபபற்ற வெள்ளை இயக்கத்தினரும், செஞ்சேனையினரும் இந்நகரத்தைக் கைப்பற்றப் போராடினர்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ரசுத்தோவ் சண்டையின் போது செருமனியப் படையினர் இந்நகரை 1941 நவம்பர் 21 முதல் ஏழு நாட்களுக்குக் கைப்பற்றி வைத்திருந்தனர். பின்னர் 1942 சூலை 24 முதல் 1943 பெப்ரவரி 14 வரை ஏழு மாதங்களுக்கு செருமனியின் பிடியில் இந்நகர் இருந்தது. போர்க்கால அழிவில் இருந்து இந்நகரை பழைய நிலைக்கு மீட்க பத்து ஆண்டுகள் வரை பிடித்தது.

1942 ஆகத்து 11, 12 ஆம் நாட்களில் இந்நகரத்தின் 27,000 யூத, மற்றும் உருசியர்கள் நாட்சி செருமனியர்களால் சிமியேவ்ஸ்கயா பால்கா என்னும் இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.[9]

2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் நான்கு குழு நிலை ஆட்டங்களும், ஒரு 16-ம் சுற்று ஆட்டமும் இங்குள்ள ரஸ்தோவ் அரங்கில் நடைபெறவிருக்கின்றன.

நகரத்தின் பிரபலமான நபர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The official symbols of Rostov-on-Don enumerated in Decision #267 do not include the anthem.
  2. Charter of Rostov-on-Don, Article 4
  3. Law #340-ZS
  4. 4.0 4.1 Law #238-ZS
  5. Charter of Rostov-on-Don, Article 35.1
  6. "About the City" (in ru). Official website of Rostov-on-Don இம் மூலத்தில் இருந்து August 13, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6IqLJYWWp?url=http://www.rostov-gorod.ru/?ID=6540. 
  7. Rostov Oblast Territorial Branch of the Federal State Statistics Service. Cities with Populations of 100,000 and Over பரணிடப்பட்டது 2017-07-02 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  8. 8.0 8.1 8.2 Энциклопедия Города России. Moscow: Большая Российская Энциклопедия. 2003. பக். 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:5-7107-7399-9. 
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-07-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120719165332/http://www.rememberingrostov.com/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்-மீது-ரசுத்தோவ்&oldid=3818518" இருந்து மீள்விக்கப்பட்டது