ரோஸ்தோவ் சண்டை (1941)
ரோஸ்தோவ் சண்டை (1941) | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி | |||||||
![]() ஜூன்-செப் , 1941 காலகட்டத்தில் ஜெர்மானிய படை முன்னேற்ற வரைபடம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() ![]() | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() ![]() ![]() | ![]() ![]() ![]() ![]() |
||||||
பலம் | |||||||
முதலாம் பான்சர் ஆர்மி | தெற்கு களம் | ||||||
இழப்புகள் | |||||||
20,000 (கணிப்பு) | 33,000[1] |
ரோஸ்தோவ் சண்டை (Battle of Rostov) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியம், நாசி ஜெர்மனி இடையே நடைபெற்ற ஒரு படை மோதல். நவம்பர் 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இச்சண்டை பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகும். இம்மோதலில் சோவியத் படைகள் வென்றன.
கீவ் சண்டையில் கிட்டிய பெருவெற்றியைத் தொடர்ந்து தெற்கு உருசியாவில் டான் ஆற்றங்கரையோரமாக அமைந்திருந்த ரோஸ்தோவ் நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கைப்பற்ற ஜெர்மானிய ஆர்மி குரூப் தெற்கு முயன்றது. இம்மோதலில் அச்சுக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ருமேனியாவின் படைகளும் பங்கேற்றன. இப்பகுதியில் இருந்த சோவியத் படைகள் மூன்று மாதங்கள் (செப்டம்பர்-நவம்பர் 1941) ஜெர்மானிய படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தின. பின் எதிர்த் தாக்குதல் நடத்தி ஜெர்மானியப் படைகளைப் பின்வாங்கச் செய்தன. பர்பரோசா நடவடிக்கையில் ஜெர்மானியப் படைகள் பெருமளவில் தோல்வியை சந்தித்து பின்வாங்க நேரிட்டது இதுவே முதல் முறையாகும்.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Haupt, Werner, Army Group South: The Wehrmacht in Russia 1941-1945, Schiffer Military History, Atglen, 1998