ரசேநியாய் சண்டை
ரசேநியாய் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஜெர்மனி | சோவியத் ஒன்றியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜெனரல் எரிக் ஹோயப்னெர்] | கர்னல் ஜெனரல். ஃபியோடர் குசுநெட்சேவ் | ||||||
பலம் | |||||||
245 டாங்குகள்[1][2][I] | 749 டாங்குகள்[3] | ||||||
இழப்புகள் | |||||||
மிகக் குறைவு | 704 டாங்குகள்[3] |
ரசேநியாய் சண்டை (Battle of Raseiniai) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியம், நாசி ஜெர்மனி இடையே நடைபெற்ற ஒரு கவசபடை மோதல். ஜூன் 23-27, 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இது பர்பரோசா நடவடிக்கையின் தொடக்ககட்ட சண்டைகளில் ஒன்றாகும்.
ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றில் ஆர்மி குரூப் வடக்கு, பால்டிக் நாடுகளைத் தாக்கியது. அவற்றைப் பாதுகாக்க சோவியத் தளபதிகள் பால்டிக் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் பகுதியாக சோவியத் வடமேற்கு முனைப் படைப்பிரிவின் ஒரு பகுதியான 12வது விசையூர்தி கோர் ஜெர்மானிய 4வது பான்சர் ஆர்மியினை எதிர்த்தது. நெமான் ஆற்றைக் கடந்திருந்த ஜெர்மானியப் படைகளை சுற்றி வளைத்து அழிப்பது சோவியத் தளபதிகளின் திட்டம். இவ்விரு படைப்பிரிவுகளும் லித்துவேனியாவில் உள்ள ரசேநினாய் என்னும் இடத்தில் மோதின. நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த டாங்கு மோதலில் சோவியத் படைப்பிரிவு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனால் சோவியத் வடமேற்கு முனைப் படைப்பிரிவின் கவச ஊர்திகள் அனைத்தும் அழிந்தன. வெற்றிபெற்ற ஜெர்மானியப் படைகள் டகாவா ஆற்றை நொக்கி முன்னேறின.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chris Bishop, German Wehrmacht Panzer Divisions 1939-1945, 2005, p66
- ↑ Brian Taylor, Barbarossa to Berlin - A Chronology of the Campaigns on the Eastern Front 1941-1945, 2003, p14
- ↑ 3.0 3.1 David Glantz, The Battle for Leningrad 1941-1944, 2002, p32