மியூன்ச்சென் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Operation München
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி
நாள் ஜூலை 2-24, 1941
இடம் பெசரேபியா, வடக்கு புக்கோவினா
அச்சு நாட்டு வெற்றி
பிரிவினர்
 Soviet Union ருமேனியா
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
இவான் டியூல்னேவ்
பி. ஜி. போண்டெலின்
யாக்கோவ் செரிவென்சென்கோ
நிக்கோலே சியூபெர்க்கா
பெட்ரே டுமீட்ரெஸ்கு
யூகென் ரிட்டர் வோன் ஷோபெர்ட்

மியூன்ச்சென் நடவடிக்கை (Operation München) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளுக்கும் நாசி ஜெர்மனி, ருமேனியா ஆகிய அச்சு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு படைமோதல். இது சோவியத் ஒன்றியத்தின் ஜெர்மானிய படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகும். ஜூலை 2-24, 1941 காலகட்டத்தில் நடைபெற்றது. ஒராண்டுக்கு முன்னால் ருமேனியா சோவியத் ஒன்றியத்திடம் ஒப்படைத்திருந்த பெசரேபியா பகுதியைக் கைப்பற்றுவதற்காக இது மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று வார கால சண்டைக்குப் பின்னர் பெசரேபியா பகுதியை ருமேனியப் படைகள் கைப்பற்றின.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியூன்ச்சென்_நடவடிக்கை&oldid=1368436" இலிருந்து மீள்விக்கப்பட்டது