ஒடெசா முற்றுகை (1941)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடெசா முற்றுகை
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி

முற்றுகையின் போது ஒரு சோவியத் பீரங்கிக் குழுவினர்
நாள் 8 ஆகஸ்ட் – 16 அக்டோபர், 1941
இடம் ஒடெசா, உக்ரைனிய சோசலிசக் குடியரசு, சோவியத் ஒன்றியம்
அச்சு தரப்பு வெற்றி
பிரிவினர்
உருமேனியா ருமேனியா
 ஜெர்மனி
 சோவியத் ஒன்றியம்
தளபதிகள், தலைவர்கள்
உருமேனியா அலெக்சாந்த்ரு ஐயோனிடியு†
உருமேனியா நிக்கோலே சியுபெர்க்கா
உருமேனியா ஐயோசிஃப் ஐயோபிக்கி
நாட்சி ஜெர்மனி எரிக் வான் மான்ஸ்டீன்
சோவியத் ஒன்றியம் கிரேகோரி சோஃப்ரனோவ்
சோவியத் ஒன்றியம் இவான் பெட்ரோவ் (பிந்தைய பகுதியில்)
பலம்
340,223 பேர் துவக்கத்தில் 34,500 பேர்[1]
240 பீரங்கிகள்
இழப்புகள்
மொத்தம்: 92,545
மாண்டவர்: 17,729
காயமடைந்தவர்: 63,345
காணாமல் போனவர்: 11,471
டாங்குகள்: 19
பீரங்கிகள்: 90
வானூர்திகள்: 20[2]
41,268[1] - 60,000 வரை[3]

ஒடெசா முற்றுகை (Siege of Odessa) 1941 இல் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. உக்ரைனிய துறைமுக நகர் ஒடெசாவை நாசி ஜெர்மனி தலைமையிலான அச்சு படைகள் முற்றுகையிட்டு சோவியத் ஒன்றியத்தின் படைகளிடமிருந்து கைப்பற்றின. இம்முற்றுகை பர்பரோசா நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

நாசி ஜெர்மனி தலைமையிலான அச்சுக் கூட்டணியில் ருமேனிய இராச்சியமும் இடம் பெற்றிருந்தது. ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்த போது உக்ரெய்னின் ஒடெசா பகுதியைக் கைப்பற்றுவதில் ருமேனியாவின் உதவியை இட்லர் நாடினார். அதற்கு பதிலாக டினீஸ்டர் மற்றும் பக் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆளும் உரிமையை ருமேனியர்களுக்கு வழங்கினார். ஒடெசா கருங்கடல் ஓரத்தில் அமைந்திருந்த ஒரு துறைமுகம். சோவியத் ஒன்றியத்தின் வலிமை வாய்ந்த கருங்கடல் கப்பற்படைப்பிரிவு அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் ஒடெசா நகரமும் அதன் சுற்றுப்புறப்பகுதியும் வெகுவாக பலப்படுத்தப்பட்டிருந்தன. ஆகஸ்ட் 1941 இல் ருமேனிய 4வது ஆர்மி இப்பகுதியைத் தாக்கியது. கடற்பகுதியிலும் இரு தரப்பு கடற்படைகளும் மோதின. மூன்று வார கால சண்டைக்குப்பின்னும் ருமேனியர்களால் சோவியத் அரண்நிலைகளை ஊடுருவ இயலவில்லை. இரு தரப்பிலும் கூடுதல் படைகள் களத்துக்கு அனுப்பப்பட்டன. சில நாள் மந்த நிலைக்குப் பின்னர் செப்டம்பர் மூன்றாம் வாரம் மீண்டும் ருமேனியத் தாக்குதல் தொடங்கியது. அக்டோபர் இரண்டாம் வாரம் ஒடெசா நகரைக் காலி செய்து பின்வாங்க சோவியத் போர் தலைமை முடிவு செய்தது. சோவியத் கருங்கடல் படைப்பிரிவு 3,50,000 சோவியத் படைவீரர்களையும் குடிமக்களையும் ஒடெசாவிலிருந்து காலி செய்தது. 73 நாட்கள் முற்றுகையில் நான்கு பெருந்தாக்குதல்களுக்குப் பின்னர் அக்டோபர் 16 அன்று ஒடேசா துறைமுகத்தை அச்சுப்படைகள் கைப்பற்றின.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Glantz (1995), p. 293
  2. http://www.worldwar2.ro/operatii/?article=7
  3. Axworthy,Mark. Third Axis Fourth Ally: Romanian Armed Forces in the European War, 1941-1945. p. 58.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடெசா_முற்றுகை_(1941)&oldid=2696371" இலிருந்து மீள்விக்கப்பட்டது