உள்ளடக்கத்துக்குச் செல்

படை அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆர்மி (படைப்பிரிவு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தற்காலத்தில் பெரும்பாலான நாடுகளின் படை அமைப்பு ஒரு சீராகவே உள்ளது. உலகின் பல நாடுகளின் படைகள் அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ படைகளின் படைப்பிரிவுகள் அமைப்பையும், தர வரிசையையும் பயன்படுத்துகின்றன. சில நாடுகளில் சில வேறுபாடுகள் இருந்தாலும் கீழ்காணும் பட்டியலில் உள்ளவை பொதுவாக பெரும்பாலான நாடுகளுக்குப் பொருந்தும்.

தரைப்படைப் பிரிவுகள்

[தொகு]

நேட்டோ படைகளில் ரெஜிமண்ட் இருப்பதில்லை. பட்டாலியனுக்கு அடுத்து பிரிகேடு தான். ஆர்மி, ஆர்மி குரூப், களம் போன்ற பெரிய படைப்பிரிவுகள் மிகப்பெரிய ராணுவங்களில் மட்டுமே உள்ளன.

கடற்படைப் பிரிவுகள்

[தொகு]

கடற்படைப் பிரிவுகளின் அமைப்புகள் தரைப்படைப் பிரிவுகளைப் போல உலகெங்கும் சீராக பின்பற்றப்படுவதில்லை. ஏனெனில் கடற்படைப் பிரிவுகள் இலக்கைப் பொறுத்தே உருவாக்கப்படுகின்றன. தரைப்படைகளைப் போல அவை நிரந்தரமானவையல்ல. ஃப்ளோடில்லா வுக்கு மேலுள்ள பிரிவுகள் பெரிய கடற்படைகளில் மட்டுமே காணப்படுகின்றன.

துணைக் கப்பல்கள் (Auxiliary ships) கேபட்ன் தரத்துக்கு கீழிலுள்ள அதிகாரிகளின் பொறுப்பில் தான் ஒப்படைக்கப்படுகின்றன. கோர்வெட்டுகள், துப்பாக்கிப் படகுகள், நீர் கண்ணி நீக்கும் கப்பல்கள், ரோந்துப் படகுகள், ஆற்றுப் படகுகள், நீர்மூழ்கிக் குண்டு படகுகள் போன்றவை துணைக்கப்பல்கள் பகுப்பில் சேரும். இவை தவிர டெஸ்டிராயர்களில் அளவில் சிறியவையும் பிரிகேட்டுகளும் துணைக்கப்பல்களாகக் கருதப்படுகின்றன.

வான்படைப் பிரிவுகள்

[தொகு]

தரைப்படை, கடற்படைகளைப் போலலாமல் வான்படைப் பிரிவுகள் நாட்டுக்கு நாடு வெகுவாக மாறுபடுகின்றன. ஏனைய படைத்துறை விஷயங்களில் சீராக அமைந்திருக்கும் அமெரிக்க, பிரித்தானிய வான்படைகளின் அமைப்புகள் கூட வெகுவாக மாறுபடுவதால், அனைத்து வான்படைகளுக்கும் பொதுவான அமைப்புப் பட்டியல் வகுக்க இயலாது.

மேற்கோள்கள்

[தொகு]