யூரி ஒகனேசியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூரி ஒகனேசியான்
Yuri Oganessian
Yuri Oganesyan.png
யூரி ஒகனேசியான்
பிறப்பு ஏப்ரல் 14, 1933 (1933-04-14) (அகவை 86)
ரசுத்தோவ், சோவியத் ஒன்றியம்
குடியுரிமை உருசியர்
தேசியம் ஆர்மீனியர்
துறை அணுக்கருவியல்
பணியிடங்கள் பிளெரோவ் ஆய்வுகூடம்
கல்வி கற்ற இடங்கள் மாசுக்கோ பொறியியல் இயற்பியல் கல்விக்கழகம்
அறியப்படுவது தனிம அட்டவணையில் உள்ள கன உலோகங்களின் இணைக் கண்டுபிடிப்பாளர்

யூரி த்சொலொக்கோவிச் ஒகனேசியான் (Yuri Tsolakovich Oganessian, உருசியம்: Юрий Цолакович Оганесян, பிறப்பு: 14 ஏப்ரல் 1933) என்பவர் ஆர்மீனிய வம்சாவழியைச் சேர்ந்த உருசிய அணுக்கரு இயற்பியலாளர் ஆவார். இவரும், இவரது அணியைச் சேர்ந்தவர்களும் இணைந்து தனிம அட்டவணையில் உள்ள மிகக்கனமான உலோகங்களைக் கண்டறிந்தனர்.[1][2]

ஓகனேசியான் உருசியாவின் ரசுத்தோவ் நகரில் பிறந்தவர். தூப்னா நகரில் உள்ள பிளெரோவ் அணுக்கருத்தாக்க ஆய்வுகூடத்தில் அறிவியல் தலைவராகப் பணியாற்றினார்.[3]

அமெரிக்க அறிவியலாளர்கள் ஒகனேசியான் குழுவினரின் கண்டுபிடிப்பான பிளெரோவியத்தை அது கண்டுபிடிக்கப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டில் அங்கீகரித்தனர்.[4] மேலும், புதிய தனிமங்களைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்யும் மாபெரும் அறிவியலாளராக இவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Yuri Oganessian biography

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரி_ஒகனேசியான்&oldid=2207493" இருந்து மீள்விக்கப்பட்டது