மோர்தோவியா அரங்கு

ஆள்கூறுகள்: 54°10′58″N 45°12′05″E / 54.18278°N 45.20139°E / 54.18278; 45.20139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோர்தோவியா அரங்கு
இடம் சரான்சுக், மொர்தோவியா, உருசியா
அமைவு 54°10′58″N 45°12′05″E / 54.18278°N 45.20139°E / 54.18278; 45.20139
எழும்பச்செயல் ஆரம்பம் 2010
எழும்புச்செயல் முடிவு 2010-2018
திறவு
உரிமையாளர்
ஆளுனர் மோர்தோவியா சாரன்சுக்கி காற்பந்துக் கழகம்
தரை புல்தரை
கட்டிட விலை $300 மில்லியன்
குத்தகை அணி(கள்) மோர்தோவியா சாரன்சுக்கி காற்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 44,442
(2018 பிபா உலகக்கோப்பை)
30,000 (உலகக்கோப்பைக்குப் பிறகு)

மோர்தோவியா அரங்கு (Mordovia Arena, உருசியம்: «Мордовия Арена») உருசியக் கூட்டமைப்பில் தன்னாட்சி பெற்ற மொர்தோவியா குடியரசின் தலைநகராகிய சரான்சுக்கில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம். இது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் சில ஆட்டங்களுக்காக சீரமைக்கப்பட்டுள்ளது. தவிரவும் மோர்தோவியா சாரன்சுக்கி கால்பந்துக் கழகத்தின் தாயகமாகவும் உள்ளது. இதன் கொள்ளளவு 44,442 பார்வையாளர்களாகும். இந்த அரங்கின் மொத்தப் பரப்பு 122,700 சதுர மீட்டராகும்.

இந்த அரங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது; நகரின் முதன்மையான கட்டமைப்புகளிலிருந்து நடக்கும் தொலைவிலேயே உள்ளது. இதன் வடிவமைப்பு சூரியனின் படிமத்தை ஒத்துள்ளது. இது மோர்தோவிய மக்களின் தொன்மை மரபுகளையும் கதைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.[1] பிபா உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு சாரான்சுக் மற்றும் மோர்தோவியாவின் மிகப்பெரும் விளையாட்டரங்காகவும் மனமகிழ் மையமாகவும் விளங்கும்.[2]

2018 பிபா உலகக் கோப்பை[தொகு]

இந்த விளையாட்டரங்கில் 2018 பிபா உலகக் கோப்பைப் போட்டிகளின் நான்கு குழு நிலை ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 21, 2018 அன்று சோதனை ஆட்டம் ஒன்று நடத்தப்பட்டது.[3]

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
16 சூன் 2018 19:00  பெரு  டென்மார்க் குழு சி
19 சூன் 2018 15:00  கொலம்பியா  சப்பான் குழு எச்
25 சூன் 2018 21:00  ஈரான்  போர்த்துகல் குழு பி
28 சூன் 2018 21:00  பனாமா  தூனிசியா குழு ஜி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Стадион ЧМ-2018 "Мордовия-Арена" получил разрешение на ввод в эксплуатацию". worldcup2018.tass.ru. பார்க்கப்பட்ட நாள் 5 June 2018.
  2. "Russia 2018 Fifa World Cup: artist's impressions of stadiums" (in en-GB). 7 December 2010. https://www.telegraph.co.uk/sport/football/picturegalleries/8187285/Russia-2018-Fifa-World-Cup-artists-impressions-of-stadiums.html?image=11. 
  3. "Mordovia Arena set to host first test match in April ahead of 2018 FIFA World Cup". TASS. 29 September 2017. http://tass.com/sport/968140. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mordovia Arena
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்தோவியா_அரங்கு&oldid=3502008" இலிருந்து மீள்விக்கப்பட்டது