நெய்மார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெய்மார்

2018
சுய தகவல்கள்
முழுப் பெயர்நெய்மார் டா சில்வா சான்டோசு இளையவர்[1]
பிறந்த நாள்5 பெப்ரவரி 1992 (1992-02-05) (அகவை 32)[1]
பிறந்த இடம்மோகி தாசு குருசெசு, பிரேசில்[1]
உயரம்1.75 m (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்)[2]
ஆடும் நிலை(கள்)முன்னணி வீரர் (பார்வர்டு), நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பாரிஸ்
எண்10
இளநிலை வாழ்வழி
1999–2003போர்த்துகேச சான்டிசுட்டா
2003–2009சான்டோசு
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2009–2013சான்டோசு103(54)
2013–பார்சிலோனா26(9)
பன்னாட்டு வாழ்வழி
2009பிரேசில் U173(1)
2011பிரேசில் U207(9)
2012பிரேசில் U237(4)
2010–பிரேசில்49(31)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 22:36, 17 மே 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 19:22, 6 சூன் 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

நெய்மார் டா சில்வா சான்டோசு ஜூனியர் (Neymar da Silva Santos Júnior, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [nejˈmaʁ dɐ ˈsiwvɐ ˈsɐ̃tus ˈʒũɲoʁ]; பிறப்பு:பெப்ரவரி 5, 1992), பொதுவாக நெய்மார், பிரேசிலைச் சார்ந்த காற்பந்து விளையாட்டாளர் ஆவார். இவர் பிரேசிலியத் தேசியக் காற்பந்து அணியில் முன்னணி வீரராகவும் நடுக்கள வீரராகவும் விளையாடுகிறார். பிரெஞ்சு நாட்டின் லீக் 1 போட்டிகளில் பாரிஸ் செயின்ட் காற்பந்துக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

தென்னமெரிக்காவில் ஆண்டின் சிறந்த காற்பந்தாட்ட வீரர் என்ற வரிசையில் 2010இல் மூன்றாவதாக இடம் பிடித்த நெய்மார் 2011இல் தமது 19வது அகவையிலேயே முதலிடத்தைப் பிடித்தார்.[3] மீண்டும் 2012இலும் இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 2011ஆம் ஆண்டுக்கான தங்கப் பந்து (பிஃபா) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நெய்மார் பத்தாவது இடத்தில் வந்தார். அந்த ஆண்டின் சிறந்த கோலுக்கு வழங்கப்படும் ஃபிஃபா புசுகாசு விருதினைப் பெற்றார்.[4] மிக விரைவான ஆட்டத்திற்கும் வேகமெடுக்கும் திறனுக்கும் காற்பந்தை கையாளும் (காலாளும்) விதத்திற்கும் இரண்டு கால்களையும் பயன்படுத்தக்கூடிய திறமைக்காகவும் எடுத்துச் சென்ற பந்தை முடிக்கும் திறமைக்காகவும் அறியப்படுகிறார். இவரது இரசிகர்கள் இவரது திறமையை பிரேசிலின் புகழ்பெற்ற காற்பந்தாளர் பெலேயுடன் ஒப்பிடுகின்றனர். இவரை "ஒரு சிறந்த விளையாட்டாளர்" என பெலேவும் "உலகின் மிகச்சிறந்த வீராராக வருவார்" என ரொனால்டினோவும் கூறியுள்ளனர்.[5][6][7]

விளையாட்டு வாழ்க்கை[தொகு]

சான்டோசு[தொகு]

நெய்மார் 2003இல் சான்டோசு காற்பந்துக் கழகத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய நெய்மார் 2009இல் முதல்நிலை அணிக்காக அறிமுகமானார். அந்த ஆண்டிலேயே மிகச் சிறந்த இளம் விளையாட்டாளர் என்ற விருதினை வென்றார். 2010இல் சான்டோசு அணி கூட்டிணைவுப் போட்டிகளில் வெற்றிபெற மிக கூடுதலான கோல்களை (11) அடித்த நெய்மாருக்கு சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதும் கிடைத்தது. 2010 பருவத்தில் 60 ஆட்டங்களில் 42 கோல்கள் அடித்தார்.இவரது முயற்சியால் இவரது கழகம் காற்பந்தில் இரட்டை கோப்பைகளை வெல்ல காரணமாயிற்று. 2011இலும் இவரது சிறந்த ஆட்டத்தினால் சான்டோசு அணி இரட்டை (கால்பந்து)#கண்டத்து இரட்டை பெற்றது. 2011ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா கழக உலகக்கோப்பையில் வெங்கலபந்து வென்றார். இந்தப் போட்டிகளில் இறுதியாட்டம் வரை முன்னேறிய இவரது சான்டோசு கழகம் இறுதியாட்டத்தில் பார்சிலோனாவிடம் தோற்றது.[8][9]

பிரேசிலியத் தேசிய அணித் தேர்வு[தொகு]

நெய்மார் பிரேசிலின் 17 அகவைக்குக் கீழான அணி, 20 அகவைக்கு கீழானவர்களின் U-20 அணிகளில் ஆடியுள்ளார். மூத்தவர்களின் அணியில் 2010இல் தமது முதல் அறிமுக ஆட்டத்தைத் துவங்கினார். ஐக்கிய அமெரிக்காவுடனான நடபுப் போட்டியொன்றில் கலந்து கொண்ட நெய்மார் 28வது நிமிடத்தில் தலையினால் முட்டி கோலடித்தார்; இது பிரேசில் 2-0 என்ற கணக்கில் வெல்லத் துணை புரிந்தது. 2011இல் இசுக்காட்லாந்துடன் எமிரேட்சு விளையாட்டரங்கில் நடந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து தமது அணி 2-0 என்ற கணக்கில் வெல்லத் துணை புரிந்தார்.

2013ஆம் ஆண்டுக்கான பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளில் பிரேசில் தேசிய அணியில் விளையாட 10 எண் சட்டை தரப்பட்டது. சூன் 30 அன்று பிரேசிலின் இரண்டாவது கோலை அடித்து இறுதியாட்டத்தில் எசுப்பானியாவை வெல்லத் துணை நின்றார். இவரது ஆட்டத்திறனால் இவருக்கு இந்தப் போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக தங்கபந்து விருது வழங்கப்பட்டது.[10] 48 ஆட்டங்களில் 31 கோல்கள் இட்டுள்ள இவர் தமது தேசிய அணிக்கு பிரேசில் தேசிய காற்பந்து அணி#பதினோராவது மிகவுயர்ந்த எண்ணிக்கை கோல் அடித்தவராக விளங்குகிறார்.[11]

பார்சிலோனா காற்பந்துக் கழகம்[தொகு]

2013இல் எசுப்பானிய காற்பந்துக் கழகம் பார்சிலோனா கால்பந்துக் கழகம் 57 மில்லியன் ஜூரோக்களுக்கு வாங்கியுள்ளது.

காயம்[தொகு]

2014ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பிரேசிலில் நடந்த உலக கால்பந்து கிண்ணப்போட்டியில் கொலொம்பியா வீரர் ஒருவர் காலால் உதைத்ததால் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது, எனினும் சுகமடைந்த நெய்மார் தனது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்.[12][13]

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Neymar". ESPN.
 2. "Neymar Jr. Profile". FC Barcelona.com. Retrieved 9 May 2014
 3. "Santos' Neymar named South American Player of the Year". Goal.com. 31 December 2011. http://www.goal.com/en/news/584/brazil/2011/12/31/2825160/santos-neymar-named-south-american-player-of-the-year. பார்த்த நாள்: 31 December 2011. 
 4. "Neymar beat Rooney". FIFA இம் மூலத்தில் இருந்து 2014-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140310192610/http://www.fifa.com/ballondor/puskasaward/index.html. 
 5. "Neymar should reject Premier League and stay at Santos, says Pelé". The Times (London). 3 August 2011. http://www.guardian.co.uk/football/2011/aug/03/pele-neymar-premier-league-santos. பார்த்த நாள்: 3 August 2011. 
 6. "Messi, better than me? No chance, he's not even as good as Neymar, says Pele". Daily Mail
 7. "Ronaldinho: Neymar will be the best in the world" Goal.com
 8. "Magic Messi helps Barca conquer the world". ESPN Soccernet. 18 December 2011. பார்க்கப்பட்ட நாள் 21 December 2011.
 9. "Barcelona 4 Santos 0". Daily Telegraph (London). 18 December 2011 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105161841/http://www.telegraph.co.uk/sport/football/competitions/premier-league/8964048/Barcelona-4-Santos-0-match-report.html. பார்த்த நாள்: 21 December 2011. 
 10. "Neymar wins best player, and yes, Torres picks up another award". NBC. 30 June 2013. http://prosoccertalk.nbcsports.com/2013/06/30/confederations-cup-awards-neymar-fernando-torres-brazil-spain-golden-ball-shoe-boot/. 
 11. "Goalscoring for Brazil National Team". RSSSF. Retrieved 17 May 2014
 12. "டபிள்யு.பி.டிவி ஜூலை 5, 2014". Archived from the original on 2014-07-10. பார்க்கப்பட்ட நாள் 2014-07-08.
 13. கனவு முடிந்துவிடவில்லை: உடைந்துபோன நெய்மார் உருக்கம்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நெய்மார்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்மார்&oldid=3561098" இலிருந்து மீள்விக்கப்பட்டது