ரொனால்டினோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது ஒரு போர்த்துக்கேய பெயராகும்; இதில் குடும்ப பெயர் டி அசிஸ் நபரின் பெயர் மோரிரா ஆகும்.
Ronaldinho
Personal information
முழு பெயர்Ronaldo de Assis Moreira
பிறந்த நாள்21 மார்ச்சு 1980 (1980-03-21) (அகவை 43)
பிறந்த இடம்Porto Alegre, Brazil
உயரம்1.82 m (6 அடி)[1]
விளையாட்டு நிலைWinger / Attacking midfielder
Club information
தற்போதைய கிளப்Milan
எண்80
Youth career
1997–1998Grêmio
Senior career*
YearsTeamApps(Gls)
1998–2001Grêmio44(21)
2001–2003Paris Saint-Germain55(17)
2003–2008Barcelona145(70)
2008–Milan40(11)
National team
1999–Brazil87(32)
கெளரவங்கள்
* Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 4 November 2009.

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 5 April 2009

ரொனால்டோ டி அசிஸ் மோரிரா (21 மார்ச் 1980 அன்று போர்டோ அல்கிரியில் பிறந்தவர்), ரொனால்டினோ அல்லது ரொனால்டினோ கவுச்சோ என பொதுவாக அறியப்படும் இவர்[2] ஒரு பிரேசில் கால்பந்து வீரர் ஆவார். இவர் இத்தாலியன் சீரி A தரப்பு மிலன் மற்றும் பிரேசில் தேசிய அணிக்காக விளையாடுபவர். அவர் தனது தலைமுறையின் மிகவும் திறன்மிக்க கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

போர்த்துகீஸில் "லிட்டில் ரொனால்டோ" என அழைக்கப்படும் ரொனால்டினோ பிரேசிலில் "கவுச்சோ" என்று அழைக்கப்பட்டார். பிரேசிலில் ரொனால்டோ, "ரொனால்டினோ" என அழைக்கப்பட்டதால் அவரிடம் இருந்து வேறுபடுத்திக் காண்பதற்காக இவர் இவ்வாறு அழைக்கப்பட்டார். ரொனால்டோ ஐரோப்பாவிற்கு சென்ற போது அவரது முதல் பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியதால் ரொனால்டினோ, "கவுச்சா" என்று அழைக்கப்படுவதை விடுத்து ரொனால்டினோ என்றே அழைக்கப்பட்டார்.

இவர் மிலனுக்கு செலவதற்கு முன் 2006 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கில் இவருக்கு முதல் வெற்றியைத் தேடித்தந்த அணியான பேரிஸ் செயிண்ட்-ஜெர்மன் மற்றும் FC பார்சிலோனாஆகிய அணிகளுக்காக விளையாடிக் கொண்டிருந்தார். 2007 ஆம் ஆண்டு ஜனவரியில் இவர் ஸ்பானிஸ் குடிமகனாக மாறினார்.[3]

வாழ்க்கை வரலாறு மற்றும் சொந்த வாழ்க்கை[தொகு]

ரொனால்டினோ பிரேசிலின் தலைநகரான ரியோ கிராண்டி டோ சுல் மாநிலத்தில் உள்ள போர்டோ அல்கிரி நகரத்தில் பிறந்தார். இவரது தாயான டோனா மிக்கிலினா, நர்ஸ் தொழிலுக்குப் படித்து முன்னாள் விற்பனையாளராக இருந்தவர் ஆவார். இவரது தந்தையான ஜோவா, கப்பல் கட்டும் துறையில் பணிபுரிபவர் மற்றும் எஸ்போர்டே கிளப் கிருஜிரோ என்ற உள்ளூர் கிளப்பில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார் (கிருஜிரோ EC உடன் குழம்ப வேண்டாம்).[4] ரொனால்டினோவிற்கு எட்டு வயதிருக்கும் போது வீட்டு நீச்சல் குளத்தில் அவரது அப்பா உயிருக்கு ஆபத்தான மாரடைப்புக்கு உள்ளானார். பிறகு ரொனால்டினோவின் மூத்த சகோதரரான ராபர்டோ, கிரிமியோ விடம் உடன்படிக்கை செய்து கொண்ட பிறகு, ராபர்டோவை கிளப்பில் இருப்பதற்கு திருப்தி அளிக்கும் வகையில் போர்டோ அல்கிரியின் மிகவும் வசதிபடைத்த கவுருஜா பகுதியில் ஒரு வீட்டை அன்பளிப்பாக வழங்கியது. அங்கு அவரது குடும்பம் குடியேறியது. ஆனால் ராபர்டோவிற்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவரது தொழில் வாழ்க்கை விரைவிலேயே முடிவடைந்தது.

ரொனால்டினோவின் கால்பந்து திறமைகள் அவரது இளவயதிலேயே மலரத் தொடங்கியது. மேலும் அவர் முதலில் அவரது அடைப்பெயரான ரொனால்டினோ என்ற பெயரையே கிளப்பிற்கு கொடுத்திருந்தார் ஏனெனில் அவர் யூத் கிளப் போட்டிகளில் விளையாடுபவர்களில் மிகவும் இளமையாகவும் சிறிய விளையாட்டு வீரராகவும் இருந்தார்.[5] புட்சல் மற்றும் கடற்கரை கால்பந்தில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அதுவே பின்னர் அவர் கால்பந்து விளையாட வழிவகுத்தது. இவரது அணி உள்ளூர் அணியிடம் இருந்து 23-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்ற போது இவர் 23 கோல்களையும் அணிக்காக சேர்த்திருந்தார். இதனால் இவரது பதிமூன்றாவது வயதில் ஊடகத்தின் பார்வைக்கு வந்தார்.[6] ஈஜிப்ட்டில் நடந்த 1997 U-17 உலகக் கோப்பையில் பெனாலிட்டி கிக்களில் இவர் இரண்டு கோல்களை அளித்த போது ரொனால்டினோ ஒளிரும் நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டார்.[7][8]

தற்போது ரொனால்டினோவின் மேலாளராக ராபர்டோ பணிபுரிகிறார். மேலும் அவரது சகோதரி டெய்சி பத்திரிக்கை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.[5][9] பிரேசிலியன் நடனமாடுபவரான ஜனைனா மெண்டஸ் 25 பிப்ரவரி 2005 அன்று ரொனால்டினோவின் குழந்தையைப் பெற்றார். இந்த குழந்தைக்கு ரொனால்டினோவின் மறைந்த தந்தை ஜோவாவின் பெயரைச் சூட்டினர்.[10]

கிளப் வாழ்க்கை[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ரொனால்டினோவின் தொழில் வாழ்க்கை கிராமியோவின் தலைமை பயிற்சியாளரான லியம் ஹிக்கின்ஸின் கீழ் இயங்கி வந்த இளைஞர் குழுவில் இருந்து தொடங்கியது. 1998 ஆம் ஆண்டு முதுநிலை அணியான கோபா லிபர்டடோர்ஸுடன் இவர் விளையாடத் தொடங்கினார்.[11] 2001 ஆம் ஆண்டு ரொனால்டினோவுடன் உடன்படிக்கை செய்துகொள்வதற்கான ஆர்வத்தை அர்செனல் தெரிவித்தது. ஆனால் அதிகமான சர்வேத போட்டிகளில் கலந்து கொள்ளாதவர் மற்றும் EU வீரர் இல்லை என்பதால் அர்செனலிடம் சென்ற பிறகு இவர் விளையாட அடிக்கடி அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.[12] இவர் ஸ்காட்டிஷ் பிரிமியர் லீக்கில் செயிண்ட். மிரென் அணிக்காக விருந்தினராக விளையாட பரிசீலிக்கப்பட்டார். ஆனால் பிரேசிலில் மோசடி பாஸ்போர்ட் அவதூறில் இவர் சிக்கியதால் மீண்டும் விளையாட முடியாமல் போனது.[13] 2001 ஆம் ஆண்டில் பேரிஸ் செயிண்ட்-ஜெர்மன் என்ற பிரெஞ்சு அணிக்காக விளையாட ஐந்து-ஆண்டு ஒப்பந்தத்தை €5.1 மில்லியன் தொகைக்கு செய்து கொண்டார்.[14]

2001-02 பருவத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் அணியின் மேலாளர் லூயிஸ் பெர்னாண்டஸ் அவர்கள் ரொனால்டினோ கால்பந்து விளையாடுவதை காட்டிலும் பேரிசியன் இரவு வாழ்க்கையில் அதிகமாக கவனத்தை செலவிடுகிறார் எனக் குற்றம் சாட்டினார். மேலும் பிரேசிலில் அவரது விடுமுறை நாட்கள் குறித்த நேரத்தில் முடிவடைவதில்லை எனப் புகார் கூறினார்.[11] 2003 ஆம் ஆண்டில் PSG எந்த ஒரு ஐரோப்பிய போட்டிக்கும் இவரை தகுதி செய்யாததால் கிளப்பில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அப்போது இவர் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே PSG அணியில் இருந்திருந்தார்.

பார்சிலோனா[தொகு]

தொடக்கத்தில் FC பார்சிலோனாவின் தலைவரான ஜான் லபோர்டா கிளப்பிற்கு டேவிட் பெக்காமை அழைத்து வருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் ரியல் மட்ரிடு கிளப்பிற்கு அவர் மாறியதைத் தொடர்ந்து பார்சிலோனா மான்செஸ்டர் யுனைடேட்க்கு எதிராக ரோனால்டினோவை ஏலத்தில் எடுக்க அவரது இடம் மாற்றத்திற்கான ஒப்பந்தக் கையெழுத்திற்காக €32,250,000 தொகையைக் கொடுத்தது.[14] இந்த அணிக்காக முதன் முதலில் வாஷிங்டன் D.Cயில் RFK அரங்கத்தில் மிலனுக்கு எதிராக நடந்த நட்பு ரீதியான போட்டியில் விளையாடினார். இதில் 2-0 கணக்கான வெற்றியில் இவரது பங்களிப்பாக ஒரு கோலை அணிக்காக அளித்திருந்தார். முதல் பாதி ஆட்டத்தில் ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்ட பிறகு இவர் மீண்டும் திரும்பி பார்சிலோனாவை முதன்மையடைய உதவினார். இதனால் லீக் முடிவில் இந்த அணிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.

2004-05 ஆம் ஆண்டுகளில் ரொனால்டினோ அவரது முதல் லீக் பட்டத்தை வென்றார். மேலும் 20 டிசம்பர் 2004 அன்று FIFA ஆண்டிற்கான உலக வீரர் என அவருக்கு பெயரிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் ரொனால்டினா தொடர்ந்து இரண்டாவது முறையாக FIFA ஆண்டிற்கான உலக வீரர் என்ற கெளரவத்தைப் பெற்றார். இதன்மூலம் செல்சியாவின் பிராங் லம்பர்டு மற்றும் பெல்லோ பார்கா வீரரான சாமுவேல் இடொ'ஒவை வீழ்த்தினார். 8 மார்ச் 2005 அன்று UEFA சாம்பியன்ஸ் லீக்கின் முதல் நாக்அவுட் சுற்றில் செல்சாவிடம் தோல்வியடைந்ததால் பார்சிலோனா ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் அடைந்த தோல்வியில் இரண்டு கோல்களையும் ரொனால்டினோவே சேர்த்திருந்தார்.[15]

2008 ஆம் ஆண்டில் அவரது ஒப்பந்தம் முடிவுறும் போது ஒப்பந்தத்தை 2014 வரை நீட்டிக்க மொத்தமாக 9 ஆண்டுகளுக்கு £85 மில்லியன் தருவதாக ரொனால்டினோவிடம் அறிவுறுத்தப்பட்டது.[16] ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் இவர் இரண்டு ஆண்டு நீட்டிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் குறைந்த சம்பள வெளியீட்டு வகைமுறையில் அவர் வெளியேற நினைத்ததால் கிளப்பானது பார்சிலோனாவிடம் இருந்து கண்டிப்பாக குறைந்தது £85 மில்லியனை அவருக்கு அளிக்குமாறு குறிப்பிட்டிருந்தது.[17]

நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பிரான்க் ரிஜ்கார்ட்டுடன் ரொனால்டினோ.

2004-05 பருவ முடிவில் ரொனால்டினோ விருது வழங்குபவர்களிடம் இருந்து தனிப்பட்ட விருதுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார். இதன் தொடக்கமாக 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் FIFPro ஆண்டிற்கான உலகின் சிறந்த வீரர் விருதை வென்றார். கூடுதலாக 2005 இன் FIFPro வேர்ல்ட் XI அணியிலும் இவர் இருந்தார். 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர் என்ற பெயரையும் பெற்றார். மேலும் அந்த ஆண்டில் ரொனால்டினோ 956 புள்ளிகளுடன் இரண்டாவது முறையாக FIFA ஆண்டிற்கான சிறந்த உலக வீரர் விருதைப் பெற்றார். இரண்டாவதாக வந்த (306) பிராங்க் லம்பரை விட மூன்று மடங்கு தொகைக்கு மேல் அவருக்கு கிடைத்தது. நவம்பர் 19 அன்று நடந்த எல் கிளாசிகோ வின் முதல் லீக்கில் ரொனால்டினோ இரண்டு முறை கோல் அடித்ததன் மூலம் பார்சிலோனா ரியல் மட்ரிடை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இரண்டாவது கோலை அடித்து போட்டியை அவர் கையகப்படுத்திய பிறகு மாட்ரிட்டின் ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு ஆரவாரத்தைத் தெரிவித்தனர்.

செல்டா டி விகோவிற்கு எதிராக ரொனால்டோ முனையை எடுக்கிறார்

2006 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக UEFA ஆண்டிற்கான சிறந்த அணியாக ரொனால்டினோ தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 05-06 சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதியில் பார்சிலோனா 2-0 என்ற கணக்கில் SL பெனிபிகாவை வீழ்த்திய போது அந்தப் போட்டியில் ரொனால்டினோ தன் பங்களிப்பாக ஒரு கோலைச் சேர்த்திருந்தார். மிலனுக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் அரையிறுதியில் வெற்றியைத் திரட்டிய பின்னர் ரொனால்டினோ வழிநடத்திய தொடரில் லுடோவிக் கைலி மட்டுமே கோல் அடித்தார். 17 மே 2006 அன்று பார்சிலோனா அணி சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் விளையாடி அதில் 2-1 என்ற கணக்கில் அர்செனலை வீழ்த்தியது. இரண்டு வாரங்களுக்கு முன்பு செல்டா விகோவை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்ததன் மூலம் இரண்டாவது நேரடியான லா லிகா பட்டத்தை பார்சிலோனா கைப்பற்றியது. இது ரொனால்டினோவிற்கு முதல் தொழில்வாழ்க்கை இரட்டை வெற்றியைப் பெற்றுத்தந்தது. அவர் இந்த பருவத்தை அனைத்து போட்டிகளிலும் தனது தொழில் வாழ்வில் சிறந்த 26 கோல்களைச் சேர்த்து நிறைவு செய்தார். மேலும் 2005-06 ஆம் ஆண்டிற்கான சிறந்த சாம்பியன் லீக் வீரர் என்ற பெயரையும் பெற்றார்.

25 நவம்பர் 2006 அன்று ரொனால்டினோ அவரது தொழில் வாழ்க்கையில் 50 வது கோலை வில்லரெல்லுக்கு எதிராக அடித்தார். அதன்பிறகு இரண்டாவது முறையாக தலைக்கு மேலாக பைசைக்கிள் கிக் அடித்து கோல் அடித்தார். பிறகு இரண்டாவதாக அடித்த கோலைப் பற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த போது அவர் பள்ளிச் சிறுவனாக இருந்ததில் இருந்து இந்த வகையான கோலை அடிப்பதற்கு கனவு கண்டதாகத் தெரிவித்தார்.[18] இவர் ஒரு முறை கோல் அடித்த பிறகு பார்சிலோனாவின் மற்ற வீரர்கள் மற்ற இரண்டு கோல்களைச் சேர்த்ததில் கிளப் உலகக்கோப்பையில் 4-0 என்ற கணக்கில் மெக்சிகோவின் கிளப் அமெரிக்காவை 14 டிசம்பரில் வென்றது. ஆனால் பிறகு இறுதிப்போட்டியில் பார்சிலோனா பிரேசிலியன் கிளப்பான இண்டெர்னேசினலுடன் 1-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.[19] மேலும் அந்த போட்டியின் புரோன்ஸ் பால் விருதைப் பெற வேண்டிய ரொனால்டினோ அங்கு இல்லை.

அடுத்த நாள் ரொனால்டினோ 2006 FIFA ஆண்டிற்கான சிறந்த உலக வீரர் விருதை தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெற்றார். அவரைத் தொடர்ந்து உலகக்கோப்பை வெற்றிக் கேப்டன் பேபியோ கன்னவரொ மற்றும் ஜினெடினெ ஜிடென் ஆகியோர் இருந்தனர்.[20] 2007 ஆம் ஆண்டு ஜனவரியில் UEFA இன் ஆண்டின் சிறந்த அணியில் ரோனால்டினோவின் பெயர் மூன்றாவது முறை நேரடியாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில் இவர் 290,000க்கும் அதிகமான விண்ணப்பங்களில் அதிகமான எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றிருந்தார்.[21] பல நாட்களுக்கு முன் எல் கிளாசிக்கோ வில் பார்சிலோனா 3-3 என்ற கணக்கில் ரியல் மட்ரிடை சமன் செய்த போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக 13 மார்ச்சில் நடந்த சேரிட்டி போட்டியைத் தவறவிடும் படி கட்டாயப்படுத்தப்பட்டார்.[22][23]

ரொனால்டினோ மிலனுக்காக விளையாடுகிறார்

3 பிப்ரவரி 2008 அன்று இவரது தொழில்வாழ்க்கையின் 200வது போட்டியை பார்சிலோனாவிற்காக CA ஒசஸ்னாவிற்கு எதிராக ஒரு லீக் போட்டியில் விளையாடினார். எனினும் 2007-08 கேம்பைன் முழுவதும் அவருக்கு ஏற்பட்ட காயங்களுடனே சென்றது. மேலும் 3 ஏப்ரலில் அவருடைய வலதுகாலின் தசை கிழிந்ததால் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே அவருடைய பருவம் முடிவடைந்தது.[24] மே 19 அன்று லபோர்டா கூறும்போது ரொனால்டினோவுக்கு "புதிய சவால்" தேவைப்படுகிறது. அவருடைய தொழில் வாழ்க்கைக்கு மீண்டுவந்தால் அவருக்கு புதிய கிளப் தேவைப்படும் என கோரிக்கை விடுத்தார்.[25] ஜூன் 6 அன்று மான்செஸ்டர் சிட்டி உரிமையாளர் தக்சின் சினவட்ரா அவரைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.[26]

ஜூன் 28 அன்று வெனிசுலாவில் நடந்த இனப்பாகுபாடுக்கு எதிரான கண்காட்சி போட்டியில் ரொனால்டினோ மற்றும் பார்சிலோனா அணியின் சகவீரரான லியோனில் மெஸ்சி இருவரும் நட்சத்திர அணியில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்தனர். இந்த போட்டி 7-7 என்ற கணக்கில் சமன் ஆனது. ரொனால்டினோ இரண்டு கோல்களுடன் மேலும் இரண்டு கோல் சேர்ப்பதற்கு துணை புரிந்து பார்சிலோனா வீரராக கடைசிப் போட்டியை நிறைவு செய்தார்.[27]

மிலன்[தொகு]

2008 ஆம் ஆண்டு ஜூலையில் மிலனின் மூன்று-ஆண்டு ஒப்பந்தப்படி இத்தாலியன் சீரி Aவில் சேருவதற்காக மான்செஸ்டர் சிட்டி £25.5 மில்லியனுக்கு விடுத்த கோரிக்கையை நிராகரித்தார். இந்த மிலனின் ஒப்பந்தத்தால் ஒரு வருடத்திற்கு ஏறத்தாழ £5.1 மில்லியன் (€6.5 மில்லியன்) தொகையைப் பெறமுடியும். மேலும் ஒரு மண்டலத்திற்கு £14.5 மில்லியன் (€18.5 மில்லியன்) தொகையை வருமானமாக பெறலாம்.[28][29] எண் 10 ஐ முதலிலே அவருடைய சக அணிவீரர் க்ளாரென்ஸ் சீடொர்ப் கைப்பற்றியிருந்தார். அதனால் 80 ஐ அவரது ஜெர்சி எண்ணாக தேர்வு செய்தார். ஏனெனில் 1980 அவர் பிறந்த ஆண்டாகும். 28 செப்டம்பர் 2008 அன்று டெர்பியில் இண்டர்நேசனல் கிளப்பை 1-0 என்ற கணக்கில் மிலன் வெற்றி பெற்றபோது அணிக்கான முதலாவது கோலை ரோனால்டினோ சேர்த்தார். 19 அக்டோபர் 2008 அன்று அணி 3-0 என்ற கணக்கில் சம்ப்டோரியாவை வீழ்த்தி வெற்றி கொண்ட போது அவர் முதல் முறையாக அணிக்காக இரண்டு கோல்களைச் சேர்த்திருந்தார். நவம்பர் 6 அன்று UEFA கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டியில் 93வது-நிமிடத்தில் அவர் அடித்த கோலால் S.C. ப்ராகா எதிரான போட்டியில் வெற்றி பெற்றனர்.

அவரது முதல் பருவத்தின் முடிவில் அனைத்து போட்டிகளில் 32 முறை தோன்றி மிலனுக்காக 10 கோல்களைச் சேர்த்திருந்தார். இந்த பருவத்தின் சிறந்த தொடக்கத்திற்குப் பிறகு ரொனால்டினோ போட்டிக்கு உடற்தகுதி பெற முடியாமல் அவதியுற்றார். மேலும் இவர் அடிக்கடி மாற்று வீரராக போட்டியின் கடைசியில் விளையாடியது மிலனுக்கான முதல் பருவத்தை ஏமாறச் செய்வதாக இருந்தது.

காகா ரியல் மட்ரிட்டுக்கு புறப்பட்டதிலிருந்து ரொனால்டினோ மிலன் கிளப்பிற்காக அதிகமான பங்களிப்பைத் தருவதாக உறுதியளித்தார். இந்த பருவத்திற்கு மெதுவான தொடக்கத்தை தந்த பிறகு FC பார்சிலோனாவிற்காக விளையாடி சர்வதேச சூப்பர்ஸ்டாரானது போன்ற ஆட்டத்தை மீண்டும் மெதுவாக வெளிப்படுத்தத் தொடங்கினார்.

சர்வதேச விளையாட்டு வாழ்க்கை[தொகு]

ரொனால்டினோ 2006 உலகக் கோப்பையில் கார்னர் கிக்யை எடுக்கிறார்

அனைத்து வயது வரம்பிலும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய மிகச் சில பிரேசிலிய வீரர்களில் ரொனல்டினோவும் ஒருவர் ஆவார். 1997 ஆம் ஆண்டில் FIFA U-17 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெற்றி கொண்ட முதல் பிரேசிலிய அணியில் இவரும் பங்களித்திருந்தார். அதன் முதல் குரூப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது முதல் கோலை பெனாலிட்டி முறையில் அடித்தார். இந்த போட்டியில் 7-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. ரொனால்டினோ இரண்டு கோல்களை அணிக்காக சேர்த்தார். மேலும் அவருக்கு அதற்காக புரோன்ஸ் பால் விருது வழங்கப்பட்டது. பிரேசில் சேர்த்த மொத்தமான இருபத்தியொரு கோல்களில் இந்த இரண்டு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரேசிலியன் ஜனாதிபதி லூலாவுடன் ரொனால்டினோ

1999 ஆம் ஆண்டு ரொனால்டினோ சுறுசுறுப்பாக சர்வேத போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தார் 1999 FIFA வேர்ல்ட் யூத் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் பங்கேற்றார். பிரேசிலின் கடைசி குரூப் போட்டியில் அவரது முதல் கோலை அணிக்காக அளித்தார். பதினாறாவது சுற்றில் குரோடியாக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் அணி வெற்றி பெற்றபோது ஆட்டத்தின் முதல் பகுதியில் அணிக்கு இரண்டு கோல்களைச் சேர்த்திருந்தார். மேலும் உருகுவேயுடன் காலிறுதியில் பிரேசில் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்ட போது அணிக்காக மூன்று கோல்களை இவர் சேர்த்திருந்தார். ஜூன் 26 அன்று 1999 கோபா அமெரிக்கா தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பிரேசில் லட்டிவாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற போது முதல் தடவையையாக அவர் அணியில் பங்கேற்றிருந்தார். மேலும் கோபா அமெரிக்காவில் பிரேசிலின் வெற்றிகளின் போது கிளப்பிற்காக ஒரு கோலை சேர்த்தார். கோபா அமெரிக்கா முடிவுற்று ஒருவாரத்திற்குப் பிறகு 1999 கான்ஃபெடரேசன்ஸ் கோப்பையில் விளையாட அழைக்கப்பட்டார். இறுதி போட்டியைத் தவிர்த்து சவுதி ஆரேபியாவை 8-2 என்ற கணக்கில் படுதோல்வி அடையச் செய்து அணி வெற்றி பெற்ற போட்டியில் தொடர்ந்து மூன்று கோல்களைச் சேர்த்தது உள்ளிட்ட ஒவ்வொரு போட்டியிலும் அணிக்காக கோல் சேர்த்தார். ரொனால்டினோ இறுதி போட்டியில் கோல் எதுவும் சேர்க்கவில்லை. அதனால் மெக்சிகோவிடம் 4-3 என்ற கணக்கில் பிரேசில் தோல்வியைத் தழுவியது. விளையாட்டுகளில் சிறந்த வீரருக்கு அளிக்கப்படும் தங்கப் பந்து விருதும் விளையாட்டுகளில் அதிக கோல் சேர்த்தவருக்கு அளிக்கப்படும் தங்கக் காலனி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டில் ரொனால்டினோ ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்ஸில் பிரேசில் U-23 அணிக்காக கலந்து கொண்டார். அந்த ஆண்டுக்கு முன்பு ரொனால்டினோ முன்-ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஏழு போட்டிகளில் ஒன்பது கோல்கள் சேர்த்து பிரேசில் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். இருந்தபோதும் ஒலிம்பிக்ஸில், இறுதியில் தங்கப் பதக்கம் வென்ற கேம்ரூன் அணியினால் காலிறுதியில் பிரேசில் வீழ்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. ரொனால்டினோ நான்கு முறைகள் தோன்றி அணிக்கு ஒரே ஒரு கோலை மட்டுமே சேர்த்தார். இது கேம்ரூனால் காலிறுதியில் அணி வெளியேற்றப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

2002 ஆம் ஆண்டில் ரொனால்டினோ முதல் தடவையாக உலகக் கோப்பையில் பங்கேற்றார். 1999 கோபா அமெரிக்கா வெற்றி அணியில் பங்கேற்ற ரொனால்டோ மற்றும் ரிவால்டோ போன்ற வலிமை மிக்க தடுப்பு ஆட்டக்காரர்களும் இவரது அணியில் இருந்தனர். இவர் ஐந்து போட்டிகளில் தோன்றி இரண்டு கோல்களை அணிக்கு சேர்த்தார். குரூப் படிநிலைப் போட்டியில் சீனாவிற்கு எதிராக 4-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்ற போட்டியில் இவர் அணிக்கான முதல் கோலைச் சேர்த்திருந்தார். ஜூன் 21 அன்று இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய காலிறுதிப் போட்டியில் அவர் அடித்த இரண்டாவது கோல் அணியை வெற்றி பெறச் செய்தது. போட்டியின் 50வது நிமிடத்தில் ரொனால்டினோ 35 அடியில் இருந்து அடித்த ப்ரீ-கிக் இங்கிலாந்து கோல்கீப்பரான டேவிட் சீமனைக் கடந்து கோலானது இது பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற காரணமாக அமைந்ததது. எனினும் எழு நிமிடத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணி வீரரான டேனி மில்ஸ்ஸிடம் தவறாக நடந்து கொண்டதால் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் அறையிறுதிப் போட்டியில் விளையாட தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனால் பிரேசில் அணிக்குத் திரும்பிய பிறகு ஜெர்மனிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்ற காரணமாக இருந்தார்.

சேவியர் மர்கைரஸ் மற்றும் ரொனால்டினோ, செயிண்ட். ஜாகப் ஸ்டடியன், பேசில் (சுவிட்சர்லாந்து), சுவிட்சர்லாந்து - பிரேசில் 1:2

ரொனால்டினோவின் அடுத்த சர்வதேச விளையாட்டு போட்டி 2003 கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை ஆகும். எனினும் ரொனால்டினோ இந்த போட்டிகளில் எந்த கோல்களையும் அணிக்கு சேர்க்காததால் இந்த போட்டிகளில் பிரேசில் மிகவும் மோசமாக விளையாடி குரூப் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து வந்த ஆண்டில் பிரேசிலின் 2004 கோபா அமெரிக்கா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பயிர்ச்சியாளரான கார்லோஸ் ஆல்பெர்டொ பரீய்ரா அவரது அணி நட்சத்திரங்களுக்கு ஓய்வளித்து முன்பே பெரிதாக ஒதுக்கப்பட்டிருந்த அணியை பயன்படுத்த முடிவெடுத்தார்.[30]

2005 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது கான்ஃபிடரேசன் கோப்பை போட்டிகளில் அணியின் தலைவராகப் பங்கேற்றார் ஜூன் 29 அன்றைய இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற காரணமாக இருந்ததற்காக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் ரொனால்டினோ மூன்று கோல்களை அணிக்கு சேர்த்திருந்தார். மேலும் போட்டிகளில் ஒன்பது கோல்களுடன் ஆல்-டைம் ஸ்கோரராக கவுத்டெமொக் பலன்கோவுடன் இணைந்தார்.

2008 கோடைகால ஒலிம்பிக்ஸில் ரொனால்டினோ.

ரோனால்டினோ 2006 உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் பிரேசிலிற்காக அனைத்து ஐந்து ஆட்டங்களிலும் அட்ரியனோ, ரொனால்டோ மற்றும் காகா போன்ற தடுப்பு ஆட்டக்காரர்களுடன் இணைந்து "வியக்கத்தக்க நால்வர்" என மிகவும் பிரபலமானார். எனினும் இந்த நால்வரும் இணைந்து பிரேசிலிற்காக ஐந்து கோல்கள் மட்டுமே சேர்த்தது போட்டிகள் முழுவதும் ஏமாற்றத்தை அளித்தது. இதில் ரொனால்டினோ அவரது சர்வதேச விளையாட்டு வாழ்க்கையில் மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தினார். போட்டியில் அணிக்கு கோல் எதுவும் சேர்க்காமல் கில்பர்டோ அடித்த கோலிற்கு ஒரே ஒரு தடவை உதவினார். இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் ஜப்பானை இவரது அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இவர் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தாத காரணத்தால் பிரான்சிடம் 1-0 என்ற கணக்கில் பிரேசில் வீழ்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. இந்த போட்டி நேரம் முழுவதும் பிரேசில் ஒரே ஒரு முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சித்தது.[31] அணி நாடு திரும்பிய பிறகு பிரேசிலியர்கள் மற்றும் ஊடகங்களால் அணியினர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். ஜூலை 3 அன்று பிரேசில் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இரண்டு நாள்களுக்குப் பிறகு சாபிக்கோவில் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பவர்கள் 7.5-மீட்டர் (23-அடி) பெரிய இழைக்கண்ணாடியை அழித்து நாசப்படுத்தினர். மேலும் ரொனால்டினோவின் பிசின் தடவப்பட்ட சிலையை எரித்தனர்.[32] 2004 ஆம் ஆண்டில் FIFA ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை இவர் பெற்றதை கொண்டாடும் விதமாக இந்த சிலை அமைக்கப்பட்டது. அதே நாள் ரொனால்டினோ, அட்ரியனோவுடன் இணைந்து பார்சிலோனாவிற்குத் திரும்பி அவரது வீட்டில் விருந்து கொண்டாடினார். இந்த விருந்து அதிகாலை வரை நைட்கிளப்பில் தொடர்ந்தது. இது அணியின் ஆற்றல் குறைபாட்டால் அவர்களின் நம்பிக்கைக்கு மோசம் ஏற்பட்டதாக நம்பி இருந்த பல பிரேசிலிய ரசிகர்களிடம் கடினமான உணர்வுகளை வெளிப்படுத்தியது.[33]

24 மார்ச் 2007 அன்று சிலி அணிக்கு எதிராக இருமுறை கோல் சேர்த்ததில் 4-0 என்ற கணக்கில் இவரது அணி வெற்றி பெற்றது, 2005 கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு அவர் சேர்த்த முதல் கோலாக இது குறிப்பிடப்பட்டது. மேலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அணிக்கு இவர் கோல் சேர்க்காமல் இருந்தது முடிவிற்கு வந்தது.[34] போட்டியில் உடல் சோர்வைக் காரணம் கூறி மன்னிப்புக் கேட்டதன் பிறகு 2007 கோபா அமெரிக்காவிற்கு அவர் அழைக்கப்படவில்லை.[35] பிரேசில் 5-0 என்ற கணக்கில் ஈக்வடார் அணிக்கு எதிராக பெற்ற நட்பு ரீதியான வெற்றியைத் தொடர்ந்து இவர் ஸ்பெயினில் இருந்து திரும்ப தாமதப்படுத்தியதால் அக்டோபர் 18 அன்று இவர் மீதுள்ள கருத்து வேறுபாட்டால் பார்சிலோனா இவரை போட்டியில் ஆட விடாமல் காத்திருப்பில் வைத்தது. ரியோ டி ஜனிரோ பகுதியில் ஒரு இரவுவிடுதியில் ரொனால்டினோவும் பல பிரேசில் வீரர்களும் இரவு நேர விருந்தளித்து வெற்றியைக் கொண்டாடினர். ரொனால்டினோ அடுத்த நாள் காலை 11 மணிக்கு விடுதியை விட்டு வெளியேறினார். ஊடகங்களின் குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக காரில் அமர்ந்து அங்கிருந்து வெளியேறினார்.[36]

7 ஜூலை 2008 அன்று பிரேசிலின் 2008 கோடைகால ஒலிம்பிக்ஸ் அணியில் மிகவும் மூத்த வீரர்களில் ரொனால்டினோவின் பெயரும் இடம்பெற்றது.[37] வரப்போகிற சாம்பியன்ஸ் லீக்கில் இவரின் பங்களிப்பை கருத்தில் கொண்டு பார்சிலோனா தொடக்கத்தில் இவரின் மாற்றத்தைத் தடுத்தது. ஆனால் மிலன் ரோனால்டினோவை பெய்ஜிங்கிற்கு பயணம் செல்ல அனுமதித்ததால் இவர் மிலனின் சேர்ந்தார். அதனால் இந்த முடிவு பயனற்றுப் போனது.[38] அரையிறுதியில் அர்ஜெண்டினா, பிரேசிலை வீழ்த்துவதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் பிரேசில் உறுதியான வெற்றி பெற்றபோது ரொனால்டினோ அந்த போட்டியில் இரண்டு கோல்கள் மட்டுமே அணிக்காக சேர்த்திருந்தார். வெண்கலப் பதக்கத்தைப் பெறுவதற்கான போட்டியில் பெல்ஜியத்தை 3-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்ற போது அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

AC மிலன் கிளப்பில் இருந்து அவருடைய விளையாட்டுத் திறமை குறைந்ததால் ரொனால்டினோ பிரேசில் அணியில் அவரது இடத்தை இழந்தார். 2010 FIFA உலகக் கோப்பைக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு ரொனால்டினோ அழைத்துச் செல்லப்படுவாரா என்பது ஐயமாகவே உள்ளது.

விளையாட்டு வாழ்க்கை புள்ளிவிவரங்கள்[தொகு]

கிளப் வாழ்க்கை[தொகு]

4 November 2009. அன்று இருந்த தகவல்களின் படி[39]
Club performance League Cup Continental Total
SeasonClubLeague AppsGoalsAppsGoals AppsGoals AppsGoals
Brazil LeagueCopa do Brasil South America Total
1998 கிரிமியோ சீரி A 6 1 2 0 8 1
1999 17 6 3 0 20 6
2000 21 14 3 3 24 17
France LeagueCoupe de France Europe Total
2001–02 பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் கோட்டம் 1 28 9 6 2 6 2 40 13
2002–03 லீக் 1 27 8 6 3 4 1 37 12
Spain LeagueCopa del Rey Europe Total
2003–04 பார்சிலோனா லா லிகா 32 15 6 3 7 4 45 22
2004–05 35 9 0 0 7 4 42 13
2005–06 29 17 4 2 12 7 45 26
2006–07 32 21 6 1 11 3 49 25
2007–08 17 8 1 0 8 1 26 9
Italy LeagueCoppa Italia Europe Total
2008–09 மிலன் சீரி A 29 8 1 0 5 2 35 10
2009–10 10 2 0 0 3 1 9 2
Total Brazil 44 21 8 3 52 24
France 55 17 12 5 10 3 77 25
Spain 145 70 17 6 45 19 207 95
Italy 39 10 1 0 8 3 48 13
Career Total 283 118 38 14 63 25 428 169

சர்வதேச விளையாட்டு வாழ்க்கை[தொகு]

1 April 2009. அன்று இருந்த தகவல்களின் படி[40][41][42][43][44][45][46][47][48]
தேசிய அணி கிளப் பருவம் ஆடியவை கோல்கள்
பிரேசில் கிரிமியோ 1999 13 7
2000 5 1
2001 3 1
பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் 2001–2002 9 3
2002–2003 9 2
பார்சிலோனா 2003–2004 5 2
2004–2005 16 11
2005–2006 8 0
2006–2007 7 2
2007-2008 7 3
மிலன் 2008–2009 5 0
மொத்தம் 87 32

கௌரவங்கள்[தொகு]

FC பார்சிலோனா

சர்வதேசம்

 • FIFA U-17 உலகக் கோப்பை: 1997
 • கோபா அமெரிக்கா: 1999
 • FIFA உலகக் கோப்பை: 2002
 • FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை: 2005
 • 1996 கோடைகால ஒலிம்பிக்ஸ்: வெண்கலப் பதக்கம்

தனிப்பட்டவை

 • FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை அதிக ஸ்கோர் பெற்றவர்: 1999
 • FIFA கான்ஃபெடரேசன்ஸ் கோப்பை கோல்டன் பால்: 1999
 • ரியோ கிராண்டி டு சல் ஸ்டேட் சாம்பியன்ஷிப் அதிக ஸ்கோர் பெற்றவர்: 1999
 • FIFA உலகக் கோப்பை அனைத்து நட்சத்திர அணி: 2002
 • FIFA 100
 • டோன் பலோன் விருது (Best Foreign Player in லா லிகா)வின் சிறந்த வெளிநாட்டு வீரர் : 2004, 2006
 • EFE கோப்பை (லா லிகாவின் சிறந்த ஐபெரோ-அமெரிக்க விளையாட்டு வீரர்): 2004
 • FIFA ஆண்டிற்கான உலகின் சிறந்த வீரர்: 2004, 2005
 • UEFA கிளப் சிறந்த முன்மாதிரி: 2004-05
 • ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர்: 2005
 • FIFPro ஆண்டிற்கான உலகின் சிறந்த வீரர் 2005, 2006
 • UEFA கிளப் ஆண்டின் கால்பந்து வீரர்: 2005-06
 • UEFA ஆண்டின் சிறந்த அணி: 2004, 2005, 2006
 • FIFPro வேர்ல்டு XI: 2005, 2006, 2007

குறிப்புகள்[தொகு]

 1. "A.C. Milan FC profile". A.C Milan. 2008-07-16. http://www.acmilan.com/LM_Actor.aspx?idSquadra=3&idStagione=15&idPersona=1315&name=Ronaldinho. பார்த்த நாள்: 2008-07-16. 
 2. "Ronaldinho". Talk Football. http://www.talkfootball.co.uk/guides/football_legends_ronaldinho.html. பார்த்த நாள்: 2008-06-22. 
 3. ரொனால்டினோ சாக்கர் விளையாட்டின் பிரபலமாக மாறினார், ஜாக் பெல், nytimes.com, மார்ச் 26, 2007, அணுகப்பட்டது மார்ச் 26, 2007.
 4. டீய்சி கோஸ் சு ரொன்னி டா லிட்டில் இத்தாலி இன் போய் - கசீட்டா டெல்லோ ஸ்போர்ட் , 7/18/08
 5. 5.0 5.1 Wahl, Grant (June 1, 2006). "One-on-one with Ronaldinho". Sports Illustrated இம் மூலத்தில் இருந்து 2006-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060616023710/http://sportsillustrated.cnn.com/2006/writers/grant_wahl/06/01/ronaldinho.qa/index.html. பார்த்த நாள்: 2006-06-14. 
 6. Mitten, Andy (January 2006). "The Master". FourFourTwo. pp. 72-74 இம் மூலத்தில் இருந்து 2007-07-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070701185807/http://www.fourfourtwo.premiumtv.co.uk/page/Interviews/0%2C%2C11442~758106%2C00.html. 
 7. "Egypt 1997: Brazil restore some pride". FIFA.com இம் மூலத்தில் இருந்து 2007-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070529034535/http://www.fifa.com/en/comp/U17/tournament/0,6288,U17-2005-17,00.html. பார்த்த நாள்: 2006-06-26. 
 8. "Egypt 1997 goalscorers". FIFA.com இம் மூலத்தில் இருந்து 2007-04-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070409132102/http://fifa.com/en/comp/PrevGoalScorers/0,5874,U17-1997-I,00.html. பார்த்த நாள்: 2006-06-26. 
 9. Webster, Justin (June 5, 2005). "Homage from Catalonia". Guardian. http://football.guardian.co.uk/comment/story/0,,1499509,00.html. பார்த்த நாள்: 2006-05-20. 
 10. "Ronaldinho Gaúcho fala sobre seu filho pela primeira vez". UOL Esporte. 2005-08-24. http://esporte.uol.com.br/ultimas/efe/2005/08/24/ult1777u33157.jhtm. பார்த்த நாள்: 2006-05-20. 
 11. 11.0 11.1 ரட்நீட்ஜ், கைர், "த பிரின்ஸ்லெஸ் பிரின்ஸ் ஆப் பார்சிலோனா", வேர்ல்டு சாக்கர், ஜனவரி 2005, பப. 8-9
 12. "Arsene KO'd in Dinho bid". The Sun இம் மூலத்தில் இருந்து 2005-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051223193540/http://www.thesun.co.uk/article/0%2C%2C2002390000-2005590125%2C00.html. பார்த்த நாள்: 2007-04-12. 
 13. McGowan, Stephen (March 30, 2001). "Saints fail in Ronaldinho move". Scotland - News (ESPN.com Soccernet) இம் மூலத்தில் இருந்து 2007-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070629002913/http://soccernet.espn.go.com/archive/scotland/news/2001/0330/20010330smfcsronaldinho.html. பார்த்த நாள்: 2008-06-06. 
 14. 14.0 14.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100123143640/http://www.transfermarkt.de/de/spieler/3373/ronaldinho/transferdaten.html. 
 15. "Chelsea 4-2 Barcelona". BBC Sport. 8 March, 2005. http://news.bbc.co.uk/sport2/hi/football/europe/4321491.stm. பார்த்த நாள்: 2006-06-27. 
 16. லோவி, சிட், "பிரண்ட்ஸ் அண்ட் எனிமீஸ்", வேர்ல்ட் சாக்கர், ஆகஸ்ட் 2005, ப. 18-21
 17. "Ronaldinjo do 2010. u Barseloni". B92. 2005-09-02 இம் மூலத்தில் இருந்து 2007-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20070808112220/http://www.b92.net/sport/fudbal.php?nav_id=175775&dd=02&mm=09&yyyy=2005. பார்த்த நாள்: 2006-06-14.  (செரிபியனில்)
 18. "Ronaldinho fulfils boyhood dream with overhead goal". ESPNsoccernet / Reuters. November 26, 2006 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024135047/http://soccernet.espn.go.com/news/story?id=393786&cc=3436. பார்த்த நாள்: 2007-01-06. 
 19. "Ronaldinho turns on style as Barcelona beat Club America 4-0". Yahoo! Asia News. 7 December 2006 இம் மூலத்தில் இருந்து 7 ஜனவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070107070636/http://asia.news.yahoo.com/061214/kyodo/d8m0kc804.html. 
 20. "Cannavaro & Ronaldinho: We already feel like winners". FIFA.com. 18 December 2006 இம் மூலத்தில் இருந்து 27 ஜனவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070127144137/http://www.fifa.com/en/mens/awards/gala/0,2418,128141,00.html?articleid=128141. 
 21. "uefa.com - ஆண்டின் சிறந்த அணி" இம் மூலத்தில் இருந்து 2009-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091112084436/http://www.uefa.com/fanzone/teamoftheyear/news/newsid=497866.html. 
 22. "Ronaldinho misses out". Manutd.com. 13 March 2007. http://www.manutd.com/default.sps?pagegid=%7BB4CEE8FA%2D9A47%2D47BC%2DB069%2D3F7A2F35DB70%7D&newsid=410669. 
 23. மான்செஸ்டர் யுனைடேட் அதிகாரப்பூர்வ வலைத்தளம் - செய்திகள் மற்றும் தோற்றங்கள்:
 24. Tynan, Gordon (April 5, 2008). "Injury ends Ronaldinho's campaign". Football (The Independent). http://www.independent.co.uk/sport/football/european/injury-ends-ronaldinhos-campaign-804944.html. பார்த்த நாள்: 2008-06-06. 
 25. "Laporta: Ronaldinho needs to leave Nou Camp". FourFourTwo. 2008-05-19 இம் மூலத்தில் இருந்து 2008-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080723164915/http://fourfourtwo.com/news/spain/9517/default.aspx. பார்த்த நாள்: 2008-05-19. 
 26. Ducker, James (June 5, 2008). "Manchester City set to move for Ronaldinho". The Times Online (The Times). http://www.timesonline.co.uk/tol/sport/football/premier_league/manchester_city/article4069564.ece. பார்த்த நாள்: 2008-06-06. 
 27. "MSN கால்பந்து" இம் மூலத்தில் இருந்து 2009-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091229151746/http://msn.football365.com/story/0%2C17033%2C8652_3757681%2C00.html. 
 28. ரொனால்டினோ சான் சைரோவில் உடன்படிக்கை
 29. கால்பந்து: கைகளில் இயக்கக் குறைபாடு நீக்கும் உத்திக்கு பார்சிலோனா செலவழிப்பது மாதிரியான இழிவிலிருந்து ரொனால்டோவை மிலன் பாதுகாத்தது | கால்பந்து | த கார்டியன்
 30. பிரேசிலின் வெற்றி கோபா அமெரிக்காவின் நம்பிக்கையை பாதித்தது பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம். ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டடு. 2004-07-26. 2009-05-26 அன்று பெறப்பட்டது.
 31. "Ronaldinho no factor in Brazil defeat". Sports Illustrated. July 1, 2006 இம் மூலத்தில் இருந்து 2006-07-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060705053643/http://sportsillustrated.cnn.com/2006/soccer/specials/world_cup/2006/07/01/ronaldinho.brazil.ap/index.html. பார்த்த நாள்: 2006-07-07. 
 32. "Estátua de Ronaldinho é queimada em Santa Catarina". UOL Esporte. 2006-07-03. http://copa.esporte.uol.com.br/copa/2006/ultnot/brasil/2006/07/03/ult3505u683.jhtm. பார்த்த நாள்: 2006-07-04. 
 33. "Decepção da Copa, Ronaldinho "festeja" com comida, dança e balada". Folha Online. 2006-07-04. http://www1.folha.uol.com.br/folha/esporte/ult92u105276.shtml. பார்த்த நாள்: 2006-07-04. 
 34. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 35. சோர்வடைந்த ரொனால்டினோ கோபா அமெரிக்காவை தவிர்க்கும் படி கேட்டுக் கொண்டார். ரெயூடெர்ஸ் 2007-05-15. 2009-05-26 அன்று பெறப்பட்டது.
 36. "Ronaldinho and Robinho dropped by their Primera Liga teams". Malaysian Star இம் மூலத்தில் இருந்து 2007-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071030175637/http://thestar.com.my/sports/story.asp?file=%2F2007%2F10%2F21%2Fsports%2F19234220&sec=sports. பார்த்த நாள்: 2007-12-21. 
 37. "FIFA.com - பிரேசில் நட்சத்திரங்கள் பெய்ஜிங்கிற்காக தலைமை ஏற்றனர்" இம் மூலத்தில் இருந்து 2008-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081215033401/http://www.fifa.com/mensolympic/news/newsid=823355.html#brazil+stars+heading+beijing. 
 38. "மிலனின் ரொனால்டினோ காகாவுடன் விளையாடுவதற்கு உற்சாகமாக இருந்தார்" இம் மூலத்தில் இருந்து 2009-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090402072559/http://football.uk.reuters.com/european/news/L17250376.php. 
 39. A.C. மிலன் - ரொனால்டினோ
 40. செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2002-2003
 41. செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2002-2003
 42. செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2002-2003
 43. செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2004-2005
 44. செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2006-2007
 45. செலிகா பிரேசிலேரியா (பிரேசில் தேசிய அணி) 2008-2009
 46. செலிகா பிரேசிலேரியா ரெஸ்ட்ரிடிவா (பிரேசில் தேசிய கட்டுப்படுத்தப்பட்ட அணி) 1996-1999
 47. செலிகா பிரேசிலேரியா ரெஸ்ட்ரிடிவா (பிரேசில் தேசிய கட்டுப்படுத்தப்பட்ட அணி) 2000-2003
 48. செலிகா பிரேசிலேரியா ரெஸ்ட்ரிடிவா (பிரேசில் தேசிய கட்டுப்படுத்தப்பட்ட அணி) 2004-2008

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ronaldinho
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொனால்டினோ&oldid=3792790" இருந்து மீள்விக்கப்பட்டது