ஏ.சி. மிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிலான்
முழுப்பெயர்Associazione Calcio Milan S.p.A.[1]
அடைபெயர்(கள்)I Rossoneri (The Red and Blacks)
Il Diavolo (The Devil)
Casciavit (Lombard for: Screwdrivers)
குறுகிய பெயர்ACM
தோற்றம்13 திசம்பர் 1899; 123 ஆண்டுகள் முன்னர் (1899-12-13)[2]
ஆட்டக்களம்சான் சிரோ
ஆட்டக்கள கொள்ளளவு80,018
Owner(s)Fininvest (99.93%)
Other Shareholders (0.07%)[3]
Honorary Presidentசில்வியோ பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi)[4]
Head coachவின்சென்சோ மொன்டெல்லா (Vincenzo Montella)
கூட்டமைப்புசீரீ ஆ
2015–16 சீரீ ஆசீரீ ஆ, 7-ஆம் இடம்
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

ஏ.சி. மிலான் (A.C. Milan, Associazione Calcio Milan இத்தாலிய ஒலிப்பு: [assotʃatˈtsjoːne ˈkaltʃo ˈmiːlan]) என்பது இத்தாலியைச் சேர்ந்த தொழில்முறை காற்பந்துக் கழகமாகும். 1899-இல் தொடங்கப்பட்ட இக்கழகம் தனது வரலாற்றின் முழுமையையும், 1980-81 மற்றும் 1982-83 பருவங்களைத் தவிர்த்து, இத்தாலியின் முதல்நிலை காற்பந்துக் கூட்டிணைவுத் தொடரில் (1929-30ஆம் பருவத்தில் இருந்து சீரீ ஆ என அறியப்படுகிறது) பங்கேற்று வருகிறது.

இக்கழகமானது இத்தாலியின் மிலன் நகரில் அமைந்துள்ளது. 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளிக்கக்கூடிய சான் சிரோ ஆட்டக்களத்தினை தனது அமைவிடக் களமாகக் கொண்டுள்ளது.[5] சான் சிரோ ஆட்டக்களத்தை, இன்டர் மிலான் அணியுடன் பகிர்ந்துகொண்டு ஆடிவருகின்றனர்; ஏ.சி. மிலான் அணியின் மிகப்பெரும் எதிர் அணியாகக் கருதப்படுவது இன்டர் மிலான் அணியாகும். இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி டெர்பி டெல்லா மடோன்னியா (Derby Della Madonnia) என்றழைக்கப்படுகிறது.[6]

இக்கழகம் 18 அதிகாரபூர்வ யூஈஎஃப்ஏ மற்றும் ஃபிஃபா கோப்பைகளை வென்றுள்ளது. இவ்வகையில் போகா ஜீனியர்ஸ் கால்பந்து அணியுடன் உலக அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது; ரியல் மாட்ரிட் மற்றும் அல் ஆலி கால்பந்துக் கழகங்கள் தலா 20 கோப்பைகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றன.[7][8][9]

உசாத்துணைகள்[தொகு]

  1. "Organisational chart". acmilan.com (Associazione Calcio Milan) இம் மூலத்தில் இருந்து 7 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007130329/http://www.acmilan.com/en/club/organisational_chart. பார்த்த நாள்: 4 October 2010. 
  2. "History". acmilan.com (Associazione Calcio Milan) இம் மூலத்தில் இருந்து 7 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007130309/http://www.acmilan.com/en/club/history. 
  3. Marotta, Luca (2 May 2016). "AC Milan, Bilancio 2015: i risultati sportivi condizionano negativamente quelli economici" (in Italian) இம் மூலத்தில் இருந்து 5 மே 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160505132022/http://www.tifosobilanciato.it/2016/05/02/ac-milan-bilancio-2015-risultati-sportivi-condizionano-negativamente-economici. பார்த்த நாள்: 18 May 2016. 
  4. "Cariche sociali [Club officers]" (in Italian). acmilan.com (Associazione Calcio Milan). http://www.acmilan.com/it/club/officers. பார்த்த நாள்: 7 March 2013. 
  5. "Struttura" (in Italian). sansiro.net (San Siro) இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100612094451/http://sansiro.net/struttura.asp. பார்த்த நாள்: 4 October 2010. 
  6. "Is this the greatest derby in world sports?". Theroar.com.au. 26 January 2010. http://www.theroar.com.au/2010/01/26/is-this-the-greatest-derby-in-the-world/. பார்த்த நாள்: 28 September 2011. 
  7. Conn, Tom (21 December 2014). "Real Madrid match AC Milan and Boca Juniors with 18 international titles". Inside Spanish Football இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222201343/http://www.insidespanishfootball.com/141480/real-madrid-match-ac-milan-and-boca-juniors-with-18-international-titles/. பார்த்த நாள்: 22 December 2014. 
  8. "Milan loses the throne. Al Ahly is the most successful club in the world". Football Magazine. 22 February 2014. http://www.football-magazine.it/en/il-milan-perde-il-trono-lal-ahly-e-il-club-piu-titolato-al-mondo/. பார்த்த நாள்: 22 December 2014. 
  9. "Honours". acmilan.com (Associazione Calcio Milan) இம் மூலத்தில் இருந்து 7 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007114727/http://www.acmilan.com/en/club/palmares. பார்த்த நாள்: 4 October 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ.சி._மிலான்&oldid=3759134" இருந்து மீள்விக்கப்பட்டது