உள்ளடக்கத்துக்குச் செல்

சீரீ ஆ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரீ ஆ
நாடுகள்இத்தாலி
கால்பந்து
ஒன்றியம்
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தோற்றம்1898 officially
1929 as round-robin tournament
அணிகளின்
எண்ணிக்கை
20
Levels on pyramid1
தகுதியிறக்கம்சீரீ பி
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
இத்தாலியக் கோப்பை
இத்தாலிய உன்னதக்கோப்பை
சர்வதேச
கோப்பை(கள்)
யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு
தற்போதைய
வாகையர்
யுவென்டசு (28வது வாகையர் பட்டம்)
(2011–12)
அதிகமுறை
வாகைசூடியோர்
யுவென்டசு (28 பட்டங்கள்)
தொலைக்காட்சி
பங்குதாரர்கள்
SKY Italia
Mediaset Premium
இணையதளம்legaseriea.it
2012–13 Serie A

சீரீ ஆ (Serie A,இத்தாலிய ஒலிப்பு: [ˈsɛːrje ˈa]) என்பது இத்தாலியின் கால்பந்துக் கழகங்களுக்கான கூட்டிணைவுப் போட்டித்தொடராகும். அந்நாட்டின் கால்பந்துப் போட்டித்தொடர் கூட்டிணைவுகளில் முதல்நிலையில் இருப்பதாகும். விளம்பர ஆதரவின் காரணமாக சீரீ ஆ டிஐஎம் (Serie A TIM) என்றறியப்படுகிறது. இது 1929-30 பருவத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்று வாகையர் பட்டத்துக்குப் போட்டியிடும். உலக அளவில் புகழ்பெற்ற அணிகளான யுவென்டசு, ஏசி மிலான் மற்றும் இன்டர்நேசனல் ஆகிய கழகங்கள் சீரீ ஆ-வைச் சேர்ந்தவையாகும்.

உலக அளவில் கால்பந்துக் கூட்டிணைவுப் போட்டித்தொடர்களில் சீரீ ஆ முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 90-களிலும் 2000-களின் மத்திவரையிலும் சீரீ ஆ-வே சிறந்த கால்பந்துக் கூட்டிணைவுத் தொடராகக் கருதப்பட்டது.[1] ஐரோப்பியக் கோப்பைப் போட்டிகளின் இறுதியாட்டத்தை எட்டிய அணிகளில் அதிகமானவை சீரீ ஆ-வைச் சேர்ந்தவையாகும்; இத்தாலிய கால்பந்துக் கழகங்கள் மொத்தம் 26 முறை ஐரோப்பியக் கோப்பை இறுதியாட்டங்களில் விளையாடி 12 முறை வென்றிருக்கின்றன. (இறுதிப் போட்டியை இத்தனை முறை எட்டியிருப்பது இதுவரை விஞ்சப்படாத சாதனையாகும்.) [2]

யூஈஎஃப்ஏ-வின் கூட்டிணைவுக் குணகங்களின்படி சீரீ ஆ, ஐரோப்பாவில் இங்கிலாந்தின் பிரீமியர் லீக், எசுப்பானியத்தின் லா லீகா, செருமனியின் புன்டசுலீகா ஆகியவற்றுக்குப் பிறகு 4-ஆம் இடத்தைப் பிடிக்கிறது.[3] இக்குணகம், அக்குறிப்பிட்ட கூட்டிணைவைச் சேர்ந்த கழகங்கள் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு ஆகியவற்றில் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து கணக்கிடப்படும்.

உசாத்துணைகள்

[தொகு]
  1. http://www.uefa.com/memberassociations/association=ita/honours/index.html
  2. Kevin Ashby (2007-05-24). "Serie A reiterates star quality". UEFA.com. பார்க்கப்பட்ட நாள் 2007-08-13.
  3. "UEFA Country Ranking 2011". பார்க்கப்பட்ட நாள் 9 August 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரீ_ஆ&oldid=4009129" இலிருந்து மீள்விக்கப்பட்டது