இரட்டை (கால்பந்து)
Jump to navigation
Jump to search
கால்பந்து சங்கங்களின் சொல்லாடலில் இரட்டை (the double) என்பது குறிப்பிட்ட காற்பந்தாட்ட அணி அந்நாட்டின் கூட்டிணைவு மற்றும் அதன் பிரதானமான கோப்பை ஆகிய இரண்டையும் ஒரே பருவத்தில் வெல்வதைக் குறிக்கும். மேலும் இரு அணிகளுக்கிடைப்பட்ட போட்டிகளில் தன்னிடம் மற்றும் வெளியிடம் ஆகிய இரண்டிலுமே ஒரே அணி வெற்றி பெரும் பட்சத்தில் அதுவும் இரட்டை என்றே குறிக்கப்பெறும்.
முதற்தடவையாக "இரட்டை" வெற்றிகளைப் பெற்ற அணி இங்கிலாந்தின் பிரெஸ்ட்டன் நோர்த் என்ட் கால்பந்துக் கழகம் (Preston North End) ஆகும். இது 1889 ஆம் ஆண்டில் எஃப் ஏ கோப்பை, மற்றும் இங்கிலாந்து காற்பந்தாட்டக் கூட்டமைப்பு கோப்பை ஆகியவற்றை வென்றது.