உள்ளடக்கத்துக்குச் செல்

அடிடாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிடாசு ஏஜி
வகைஏஜி (பொதுபங்கீட்டு நிறுவனம்)
நிறுவுகை1924இல் கெப்ரூடர் தாசுலர் ஷூபாப்ரிக் ஆக
(1949இல் பதிவு செய்யப்பட்டது)[1]
நிறுவனர்(கள்)அடோல்ஃப் தாஸ்லர்
தலைமையகம்எர்சோகெநோராக், செருமனி
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கும்
முதன்மை நபர்கள்இகோர் லான்டோ (தலைவர்)
எர்பெர்ட் ஹெய்னர் (முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைஉடை, ஒய்யாரத் துணைப்பொருட்கள்
உற்பத்திகள்காலணி, விளையாட்டுடை, விளையாட்டுக் கருவிகள், ஒப்பனைப் பொருட்கள்
வருமானம்14.49 பில்லியன் (2013)[2]
இயக்க வருமானம்€1.202 பில்லியன் (2013)[2]
இலாபம்€787 மில்லியன் (2013)[2]
மொத்தச் சொத்துகள்€11.59 பில்லியன் (2013)[2]
மொத்த பங்குத்தொகை€5.489 பில்லியன் (2013)[2]
பணியாளர்50,728 (2013)[2]
இணையத்தளம்www.adidas-group.com
பிலிப்பீன்சின் மணிலா பெருநகரில் போனிபேசியோ குளோபல் நகரத்தில் அடிடாசு கடை.

அடிடாஸ் (Adidas AG) என்பது ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆடை, காலணி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் பவேரியாவில் உள்ளது. இது அடிடாசு குழுமத்தின் சார்புவைப்பு நிறுவனமாகும். அடிடாசு குழுமத்தில் ரீபொக் விளையாட்டுடை நிறுவனம், (அவற்றின் ஆஷ்வொர்த் உடைகள், ராக்போர்ட் நிறுவனங்கள் உட்பட) டெய்லர்மேடு-அடிடாசு குழிப்பந்து நிறுவனம், பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகத்தில் 9.1% பங்குகள் உள்ளன. விளையாட்டு காலணிகளைத் தவிர பைகள், சட்டைகள், கடிகாரங்கள், கண்கண்ணாடிகள் மற்றும் பிற விளையாட்டு, உடை தொடர்புடைய பொருட்களை அடிடாசு தயாரிக்கிறது. ஆடை, காலணி விற்பனையில் ஐரோப்பாவின் முன்னணி நிறுவனமாகவும், உலகளவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் இருக்கிறது.(முதல் இடத்தில் நைக்கி நிறுவன்ம் உள்ளது)[3]

அடிடாசை 1948இல் அடோல்ஃப் டாஸ்லர் நிறுவினார். முன்னதாக இவரும் அண்ணன் ருடோல்ஃப் டாஸ்லரும் இணைந்து நடத்தி வந்த கெப்ரூடர் தாசுலர் ஷூபாப்ரிக்கை பிரித்துக் கொண்டனர். அடோல்ஃப் அடிடாசை ஆரம்பித்த அதேவேளையில் ருடோல்ஃப் புமா காலணி தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார் 1949இல் பதிவு செய்யப்பட்ட இவ்விரு நிறுவனங்களும் போட்டி நிறுவனங்களாக வளர்ந்தன. இவை இரண்டுமே செருமனியின் எர்சோகெநோராக்கிலிருந்து இயங்குகின்றன.

இந்நிறுவனத்தின் உடைகளிலும் காலணிகளிலும் மூன்று இணைகோடுகள் வழமையாக இடம் பெற்றிருக்கும்; இதுவே அடிடாசின் தற்போதைய அலுவல்முறை சின்னமாக உள்ளது.[4][5] 2012இல் அடிடாசின் வருமானம் 14.88 பில்லியனாக இருந்தது.[2]

எசுப்பானியா தேசிய காற்பந்து அணிக்கான ஆடையை அடிடாஸ் நிறுவனம் தயாரித்தது

இந்த நிறுவனம் 2010 உலகக்கோப்பைக்கான கால்பந்தை தயாரித்தது[6]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Adidas Group History". adidas-group.com. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Annual Report 2012". adidas. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Adidas, Deutsche Telekom, Infineon: German Equity Preview". Bloomberg L.P.. 16 January 2008. http://www.bloomberg.com/apps/news?pid=20601100&sid=ah3ZhaeNWMdM&refer=germany. பார்த்த நாள்: 26 January 2008. 
  4. Smit, Barbara (2007). Pitch Invasion, Adidas, Puma and the making of modern sport. Penguin. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102368-6.
  5. Chadwick, Simon; Arthur, Dave (2007). International cases in the business of sport. Butterworth-Heinemann. p. 438. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-8543-3.
  6. "adidas Brazuca – Name of Official Match Ball decided by Brazilian fans". FIFA.com. Fédération Internationale de Football Association. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-29. பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிடாஸ்&oldid=3927013" இலிருந்து மீள்விக்கப்பட்டது