2010 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2010 உலகக் கிண்ணம் காற்பந்து
தென்னாப்பிரிக்கா 2010
2010 ஃபீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம்
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு தென்னாப்பிரிக்கா
நாட்கள்11 சூன் – 11 சூலை
அணிகள்32 (6 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள்10 (9 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் எசுப்பானியா (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் நெதர்லாந்து
மூன்றாம் இடம் செருமனி
நான்காம் இடம் உருகுவை
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்62
எடுக்கப்பட்ட கோல்கள்139 (2.24 /ஆட்டம்)
பார்வையாளர்கள்30,58,112 (49,324/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)செருமனி தொமஸ் முல்லர்
எசுப்பானியா டேவிட் வில்லா
நெதர்லாந்து உவெசுலி சினைச்டர்
உருகுவை டீகோ பொர்லான்
(5 கோல்கள்)
சிறந்த ஆட்டக்காரர்உருகுவை டீகோ பொர்லான்
2006
2014

2010 உலகக்கோப்பை கால்பந்து (2010 FIFA World Cup) அல்லது 19வது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் 2010 ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெற்றன. முதற் தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இறுதிச் சுற்று நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும்.

உலகக்கோப்பையின் இறுதிச் சுற்றைத் தேர்ந்தெடுக்க மே 2004 இல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் மொரோக்கோ, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை தென்னாப்பிரிக்கா வென்று உலக்கோப்பையை நடத்தும் தகுதி பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகள் 1930 ஆம் ஆண்டில் முதன் முதலில் உருகுவே நாட்டில் இடம்பெற்றது. கடைசியாக ஜெர்மனியில் நடைபெற்ற 2006 உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இத்தாலி வெற்றி பெற்றது. 2014 ஆம் ஆண்டு போட்டிகள் பிரேசிலில் இடம்பெறவுள்ளன.

  இறுதிச்சுற்றுக்குத் தெரிவான நாடுகள்
  இறுதிச்சுற்றுக்கு தெரிவாகாத நாடுகள்
  உலகக்கோப்பையில் விளையாடாத நாடுகள்
  ஃபீஃபா உறுப்புரிமை அற்ற நாடுகள்

தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 204 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. உலகக்கோப்பை உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆப்பிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது.

இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஜூன் 11 இல் ஆரம்பமாயின. 32 அணிகளும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தமது பிரிவு அணிகளை எதிர்த்து மூன்று போட்டிகளில் பங்குபற்றின. ஒவ்வொரு பிரிவிலும் ஆகக்கூடுதல் புள்ளிகளைப் பெற்ற இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன. போட்டியை நடத்தும் நாட்டு அணி இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகாதது இதுவே முதல் முறையாகும்[1][2].

முதல் சுற்று முடிவில் 16 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. knock-out முறையில் ஜூன் 26 இல் அடுத்த சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாயின. இச்சுற்றில் வென்ற 8 அணிகள் அதற்கடுத்த காலிறுதிக்கு தகுதிபெற்றன.

ஜூலை 11 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் விளையாட நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இவ்விரண்டு அணிகளும் முன்னொருபோதும் உலகக்கோப்பையை வென்றதில்லை. அத்துடன், ஐரோப்பாவுக்கு வெளியே இடம்பெறும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய அணிகள் மோதியதும் இதுவே முதன் முறையாகும்.

இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது. 90 நிமிட ஆட்ட முடிவில் எந்த அணியும் கோல் போடாததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் ஸ்பெயின் அணி 1 கோல் போட்டு வெற்றி பெற்றது. இதுவே ஸ்பெயின் அணி கைப்பற்றிய முதலாவது உலகக்கோப்பையாகும்[3]. மூன்றாவது இடத்துக்கு நடந்த போட்டியில் ஜெர்மனி அணி உருகுவே அணியை 3-2 என்ற கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைப் பெற்றது. தென்னாப்பிரிக்கா, மற்றும் இத்தாலி, பிரான்ஸ் ஆகியன முதற்சுற்றிலேயே தோற்று வெளியேறின. அர்ஜெண்டினா, பிரேசில், மற்றும் ஜெர்மனி ஆகியன நாக்-அவுட் நிலைகளில் வெளியேறின.

தகுதி பெற்ற அணிகள்[தொகு]

32 அணிகள் தென்னாப்பிரிக்காவில் விளையாடத் தகுதி பெற்றன.

இளநீலம்: இறுதி, இளம்பச்சை: அரையிறுதி, மஞ்சள்: காலிறுதி, Peach: 16 அணிகள் போட்டி, சிவப்பு: முதற்சுற்று

ஆசியா (3)
ஆப்பிரிக்கா (6)

வட அமெரிக்கா (3)
தென் அமெரிக்கா (5)
ஓசியானியா (2)

ஐரோப்பா (13)

அரங்கம் அமைந்துள்ள இடங்கள்[தொகு]

2005, உலகக் கோப்பை ஏற்பாட்டாளர்கள் 12 இடங்களை தேர்வு செய்தனர். அவைகளாவன: பிளோம்ஃபோன்டீன், கேப் டவுன், டர்பன், ஜோகன்ஸ் பர்க் (இரண்டு இடங்கள்), கிம்பர்லே, மோம்பேலா, ஒர்கினே, போலாகவானே, எலிசபத் துறைமுகம், பிரிடோரியா மற்றும் ருஸ்டன்பர்க். இவைகள் பத்து இடங்களாக குறைக்கப்பட்டு [4] ஃபிஃபா அமைப்பால் 17 மார்ச் 2006 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

ஜோகானஸ்பேர்க் டர்பன் கேப் டவுன் ஜோகானஸ்பேர்க் பிரிட்டோரியா
சாக்கர் நகரம் மோசஸ் மாப்ஹிடா அரங்கம் கேப் டவுன் அரங்கம் எல்லிஸ் பூங்கா அரங்கம் லாப்டஸ் வெர்ஸ்பெல்டு அரங்கம்
26°14′5.27″S 27°58′56.47″E / 26.2347972°S 27.9823528°E / -26.2347972; 27.9823528 (Soccer City) 29°49′46″S 31°01′49″E / 29.82944°S 31.03028°E / -29.82944; 31.03028 (Moses Mabhida Stadium) 33°54′12.46″S 18°24′40.15″E / 33.9034611°S 18.4111528°E / -33.9034611; 18.4111528 (Cape Town Stadium) 26°11′51.07″S 28°3′38.76″E / 26.1975194°S 28.0607667°E / -26.1975194; 28.0607667 (Ellis Park Stadium) 25°45′12″S 28°13′22″E / 25.75333°S 28.22278°E / -25.75333; 28.22278 (Loftus Versfeld Stadium)
இருக்கைகள்: 94,700 இருக்கைகள்: 70,000 இருக்கைகள்: 69,070 இருக்கைகள்: 62,567 இருக்கைகள்: 51,760
Loftus Versfeld Stadium.jpg
எலிசபெத் துறை புளோம்ஃபோன்டைன் போலாக்வானே ரஸ்டன்பெர்க் உம்பொம்பெலா
நெல்சன் மண்டேலா பே அரங்கம் சுயாதீன மாநில அரங்கம் பீட்டர் மொக்காபா அரங்கம் ரோயல் பஃபோகெங் அரங்கம் உம்பொம்பெலா அரங்கம்
33°56′16″S 25°35′56″E / 33.93778°S 25.59889°E / -33.93778; 25.59889 (நெல்சன் மண்டேலா பே அரங்கம்) 29°07′02.25″S 26°12′31.85″E / 29.1172917°S 26.2088472°E / -29.1172917; 26.2088472 (பிரி ஸ்டேட் அரங்கம்) 23°55′29″S 29°28′08″E / 23.924689°S 29.468765°E / -23.924689; 29.468765 (பீட்டர் முகாபா அரங்கம்) 25°34′43″S 27°09′39″E / 25.5786°S 27.1607°E / -25.5786; 27.1607 (ராயல் ப்போகெங் அரங்கம்) 25°27′42″S 30°55′47″E / 25.46172°S 30.929689°E / -25.46172; 30.929689 (மோம்பேலா அரங்கம்)
இருக்கைகள்: 48,459 இருக்கைகள்: 48,000 இருக்கைகள்: 46,000 இருக்கைகள்: 44,530 இருக்கைகள்: 43,589

South Africa 2010 FIFA World Cup.svg

எலிசபெத் துறைமுகம்
  • ^1 டர்பன் அரங்கமாக
  • ^2 கிரீன்பாயின்ட் அரங்கமாக

இறுதிச் சுற்று[தொகு]

இறுதிச்சுற்றுப் பிரிவுகள்
பிரிவு A பிரிவு B பிரிவு C பிரிவு D
 தென்னாப்பிரிக்கா  அர்கெந்தீனா  இங்கிலாந்து  செருமனி
 மெக்சிக்கோ  நைஜீரியா  ஐக்கிய அமெரிக்கா  ஆத்திரேலியா
 உருகுவை  தென் கொரியா  அல்ஜீரியா  செர்பியா
 பிரான்சு  கிரேக்க நாடு  சுலோவீனியா  கானா
பிரிவு E பிரிவு F பிரிவு G பிரிவு H
 நெதர்லாந்து  இத்தாலி  பிரேசில்  எசுப்பானியா
 டென்மார்க்  பரகுவை  வட கொரியா  சுவிட்சர்லாந்து
 சப்பான்  நியூசிலாந்து  ஐவரி கோஸ்ட் படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு
 கமரூன்  சிலவாக்கியா  போர்த்துகல்  சிலி

முதல்நாள் விழா[தொகு]

முதல்நாள் விழா 2010 ஜூன் 11 உள்ளூர் நேரம் 14:00 மணிக்கு ஜோகனஸ்பேர்க்கில் ஆரம்பமாகியது[5]. இவ்விழா கிட்டத்தட்ட 40 நிமிட நேரம் நடைபெற்றது. புகழ்பெற்ற கலைஞர்கள் உட்பட 1500 பேர் இவ்விழாவில் பங்காளர்களாகப் பங்குபற்றிச் சிறப்பித்தனர். பார்வையாளர்களாக தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா, ஐநா செயலர் பான் கி மூன் உட்படப் பல தலைவர்கள் பார்வையாளர்களாகப் பங்குபற்றினர். நெல்சன் மண்டேலா தனது 13 வயது கொள்ளு பேத்தி வாகன விபத்தொன்றில் முதல் நாள் இறந்ததை அடுத்து ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளவில்லை[6].

ஆட்டங்கள்[தொகு]

அனைத்து நேரங்களும் தென்னாப்பிரிக்க நேரம் (UTC+2)

சுற்று ஆட்டம்[தொகு]

பிரிவு A[தொகு]

வி வெ தோ கோ.சா கோ.எ கோ.வே பு
 உருகுவை 3 2 1 0 4 0 +4 7
 மெக்சிக்கோ 3 1 1 1 3 2 +1 4
 தென்னாப்பிரிக்கா 3 1 1 1 3 5 −2 4
 பிரான்சு 3 0 1 2 1 4 −3 1


11 சூன் 2010
 தென்னாப்பிரிக்கா 1 - 1  மெக்சிக்கோ
 உருகுவை 0 - 0  பிரான்சு
16 சூன் 2010
 தென்னாப்பிரிக்கா 0 - 3  உருகுவை
17 சூன் 2010
 பிரான்சு 0 - 2  மெக்சிக்கோ
22 சூன் 2010
 மெக்சிக்கோ 0 - 1  உருகுவை
 பிரான்சு 1 - 2  தென்னாப்பிரிக்கா

பிரிவு B[தொகு]

வி வெ தோ கோ.சா கோ.எ கோ.வே பு
 அர்கெந்தீனா 3 3 0 0 7 1 +6 9
 தென் கொரியா 3 1 1 1 5 6 −1 4
 கிரேக்க நாடு 3 1 0 2 2 5 −3 3
 நைஜீரியா 3 0 1 2 3 5 −2 1


12 சூன் 2010
 தென் கொரியா 2 - 0  கிரேக்க நாடு
 அர்கெந்தீனா 1 - 0  நைஜீரியா
17 சூன் 2010
 அர்கெந்தீனா 4 - 1  தென் கொரியா
 கிரேக்க நாடு 2 - 1  நைஜீரியா
22 சூன் 2010
 நைஜீரியா 2 - 2  தென் கொரியா
 கிரேக்க நாடு 0 - 2  அர்கெந்தீனா

பிரிவு C[தொகு]

வி வெ தோ கோ.சா கோ.எ கோ.வே பு
 ஐக்கிய அமெரிக்கா 3 1 2 0 4 3 +1 5
 இங்கிலாந்து 3 1 2 0 2 1 +1 5
 சுலோவீனியா 3 1 1 1 3 3 0 4
 அல்ஜீரியா 3 0 1 2 0 2 −2 1


12 சூன் 2010
 இங்கிலாந்து 1 - 1  ஐக்கிய அமெரிக்கா
13 சூன் 2010
 அல்ஜீரியா

||align=center| 0 - 1 || சுலோவீனியா

18 சூன் 2010
 சுலோவீனியா 2 - 2  ஐக்கிய அமெரிக்கா
 இங்கிலாந்து 0 - 0  அல்ஜீரியா

23 சூன் 2010
 சுலோவீனியா 0 - 1  இங்கிலாந்து
 ஐக்கிய அமெரிக்கா 1 - 0  அல்ஜீரியா

பிரிவு D[தொகு]

வி வெ தோ கோ.சா கோ.எ கோ.வே பு
 செருமனி 3 2 0 1 5 1 +4 6
 கானா 3 1 1 1 2 2 0 4
 ஆத்திரேலியா 3 1 1 1 3 6 −3 4
 செர்பியா 3 1 0 2 2 3 −1 3


13 சூன் 2010
 செர்பியா 0 - 1  கானா
 செருமனி 4 - 0  ஆத்திரேலியா
18 சூன் 2010
 செருமனி 0 - 1  செர்பியா
19 சூன் 2010
 கானா 1 - 1  ஆத்திரேலியா
23 சூன் 2010
 கானா 0 - 1  செருமனி
 ஆத்திரேலியா 2 - 1  செர்பியா

பிரிவு E[தொகு]

வி வெ தோ கோ.சா கோ.எ கோ.வே பு
 நெதர்லாந்து 3 3 0 0 5 1 +4 9
 சப்பான் 3 2 0 1 4 2 +2 6
 டென்மார்க் 3 1 0 2 3 6 −3 3
 கமரூன் 3 0 0 3 2 5 −3 0


14 சூன் 2010
 நெதர்லாந்து 2 - 0  டென்மார்க்
 சப்பான் 1 - 0  கமரூன்
19 சூன் 2010
 நெதர்லாந்து 1 - 0  சப்பான்
 கமரூன் 1 - 2  டென்மார்க்
24 சூன் 2010
 டென்மார்க் 1 - 3  சப்பான்
 கமரூன் 1 - 2  நெதர்லாந்து

பிரிவு F[தொகு]

வி வெ தோ கோ.சா கோ.எ கோ.வே பு
 பரகுவை 3 1 2 0 3 1 +2 5
 சிலவாக்கியா 3 1 1 1 4 5 −1 4
 நியூசிலாந்து 3 0 3 0 2 2 0 3
 இத்தாலி 3 0 2 1 4 5 −1 2


14 சூன் 2010
 இத்தாலி 1 - 1  பரகுவை
15 சூன் 2010
 நியூசிலாந்து 1 - 1  சிலவாக்கியா
20 சூன் 2010
 சிலவாக்கியா 0 - 2  பரகுவை
 இத்தாலி 1 - 1  நியூசிலாந்து
24 சூன் 2010
 சிலவாக்கியா 3 - 2
செய்தி
 இத்தாலி
 பரகுவை 0 - 0  நியூசிலாந்து

பிரிவு G[தொகு]

வி வெ தோ கோ.சா கோ.எ கோ.வே பு
 பிரேசில் 3 2 1 0 5 2 +3 7
 போர்த்துகல் 3 1 2 0 7 0 +7 5
 ஐவரி கோஸ்ட் 3 1 1 1 4 3 +1 4
 வட கொரியா 3 0 0 3 1 12 −11 0


15 சூன் 2010
 ஐவரி கோஸ்ட் 0 - 0  போர்த்துகல்
 பிரேசில் 2 - 1  வட கொரியா
20 சூன் 2010
 பிரேசில் 3 - 1  ஐவரி கோஸ்ட்
21 சூன் 2010
 போர்த்துகல் 7 - 0  வட கொரியா
25 சூன் 2010
 போர்த்துகல் 0 - 0  பிரேசில்
 வட கொரியா 0 - 3  ஐவரி கோஸ்ட்

பிரிவு H[தொகு]

வி வெ தோ கோ.சா கோ.எ கோ.வே பு
 எசுப்பானியா 3 2 0 1 4 2 +2 6
 சிலி 3 2 0 1 3 2 +1 6
 சுவிட்சர்லாந்து 3 1 1 1 1 1 0 4
படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு 3 0 1 2 0 3 −3 1


16 சூன் 2010
படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு 0 - 1  சிலி
 எசுப்பானியா 0 - 1
செய்தி
 சுவிட்சர்லாந்து
21 சூன் 2010
 சிலி 1 - 0  சுவிட்சர்லாந்து
 எசுப்பானியா 2 - 0 படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு
25 சூன் 2010
 சிலி 1 - 2  எசுப்பானியா
 சுவிட்சர்லாந்து 0 - 0 படிமம்:Flag of Honduras (2008 Olympics).svg ஒண்டுராசு

இறுதிச் சுற்று[தொகு]

16 அணிகளின் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி
                           
26 ஜூன் – (ஆட்டம் 49)            
  உருகுவை  2
2 ஜூலை – (ஆட்டம் 58)
  தென் கொரியா  1  
  உருகுவை  1(4)
26 ஜூன் – (ஆட்டம் 50)
    கானா  1(2)  
  ஐக்கிய அமெரிக்கா  1
6 ஜூலை – (ஆட்டம் 61)
  கானா  2  
  உருகுவை   2
28 ஜூன் – (ஆட்டம் 53)
    நெதர்லாந்து   3  
  நெதர்லாந்து  2
2 ஜூலை – (ஆட்டம் 57)
  சிலவாக்கியா  1  
  நெதர்லாந்து   2
28 ஜூன் – (ஆட்டம் 54)
    பிரேசில்   1  
  பிரேசில்  3
11 ஜூலை – (ஆட்டம் 64)
  சிலி  0  
  நெதர்லாந்து   0
27 ஜூன் – (ஆட்டம் 52)
    எசுப்பானியா   1
  அர்கெந்தீனா   3
3 ஜூலை – (ஆட்டம் 59)
  மெக்சிக்கோ   1  
  அர்கெந்தீனா   0
27 ஜூன் – (ஆட்டம் 51)
    செருமனி   4  
  செருமனி   4
7 ஜூலை – (ஆட்டம் 62)
  இங்கிலாந்து   1  
  செருமனி   0
29 ஜூன் – (ஆட்டம் 55)
    எசுப்பானியா   1   மூன்றாம் இடம்
  பரகுவை   0 (5)
3 ஜூலை – (ஆட்டம் 60) 10 ஜூலை – (ஆட்டம் 63)
  சப்பான்   0 (3)  
  பரகுவை   0   உருகுவை   2
29 ஜூன் – (ஆட்டம் 56)
    எசுப்பானியா   1     செருமனி   3
  எசுப்பானியா   1
  போர்த்துகல்   0  

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


மூலம்[தொகு]

  1. http://m.espn.go.com/wireless/story?storyId=5314773&top
  2. http://www.usatoday.com/sports/soccer/worldcup/2010-06-22-south-africa-france_N.htm
  3. http://news.bbc.co.uk/sport2/hi/football/world_cup_2010/matches/match_64/default.stm
  4. "locations 2010 in Google Earth". 2008-06-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-06-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
  6. 2010 உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகியது, விக்கிசெய்தி

வெளி இணைப்புகள்[தொகு]