2014 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2014 உலகக்கோப்பை கால்பந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2014 உலகக்கோப்பை கால்பந்து
Copa do Mundo FIFA
பிரேசில் 2014

2014 ஃபீஃபா உலகக் கிண்ண அதிகாரபூர்வச் சின்னம்
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடு பிரேசிலின் கொடி பிரேசில்
நாட்கள் 13 சூன் - 13 சூலை
அணிகள் 32 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
மைதானங்கள் 12 (12 நகரங்களில்)
2010
2018

2014 உலகக்கோப்பை கால்பந்து (2014 FIFA World Cup) அல்லது 20வது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 13 முதல் ஜூலை 13 வரை நடைபெறுகின்றன.

இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னதாக 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் இடம்பெற்றது. 2007இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போட்டிகளை ஏற்றுநடத்தும் நாடாக பிரேசிலைத் தேர்ந்தெடுத்தது.

சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்துள்ளன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்படுகின்றன. இங்குதான் முதன்முதலாக புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.[1]

பிரேசிலுடன் 1930 இலிருந்து உலகக்கோப்பை வென்ற உலக வாகையாளர் நாடுகளான உருகுவை, இத்தாலி, செருமனி, இங்கிலாந்து, அர்கெந்தீனா, பிரான்சு மற்றும் எசுப்பானியா பங்கேற்கின்றன. 2010 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 1–0 கோல் கணக்கில் வென்று முதன்முறையாக கோப்பையை வென்ற எசுப்பானியா இங்கு அதனை தக்கவைத்துக்கொள்ள விளையாடுகிறது. இதுவரை தென் அமெரிக்காவில் நடந்த நான்கு போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன.[2]

போட்டி நடத்தும் நாடு தேர்வு[தொகு]

செப் பிளாட்டர் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக பிரேசிலை அறிவித்தல்

மார்ச்சு 7, 2003இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் போட்டிகளை சுழற்றுவது என்ற கொள்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தென் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவித்தது.[3][4] இந்த முடிவு முதன்முறையாக அடுத்தடுத்த இரு உலகக்கோப்பைகள் ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட வாய்ப்பளித்தது.

சூன் 3, 2003இல் தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு அர்கெந்தீனா, பிரேசில்,கொலாம்பியா இந்தப் போட்டிகளை நடத்த விரும்பியது.[5] ஆனால், மார்ச்சு 2004இல் கூடிய தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு சங்கங்கள் ஒருமனதாக பிரேசில் இந்தப் போட்டிகளை தங்கள் சார்பில் நடத்த தெரிவு செய்தன.[6]

இடைக்காலத்தில் கொலம்பியா தான் ஏற்று நடத்த ஏலக்கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து[7] அலுவல்பூர்வமாக திசம்பர் 2006இல் தனது கோரிக்கையை அறிவித்தது.[8] இதற்கு ஒரு வாரம் முன்னதாக பிரேசிலும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.[9] பின்னதாக, கொலம்பியா அலுவல்பூர்வமாக ஏப்ரல் 2007இல் தனது ஏலக்கோரிக்கையை மீட்டுக் கொண்டதால் மீண்டும் பிரேசிலே ஒரே கோரிக்கையாளராக அமைந்தது.[10] 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஃபிபா முறையாக பிரேசிலை இந்நிகழ்வை ஏற்று நடத்தும் நாடாக உறுதி செய்தது.[11]

தகுதிநிலை[தொகு]

இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான இடங்கள் மார்ச் 3, 2011 அன்று முடிவாயின; 31 இடங்களுக்கான பகிர்வு முந்தையப் போட்டியைப் போன்றே தகுதிப் போட்டிகளின் மூலம் முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.[12] சூலை 30, 2011 அன்று இரியோ டி செனீரோவில் உள்ள மரீனா ட குளோரியா தங்குவிடுதியில் 2014 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுக்கான நிரல் வரையப்பட்டது.[13][14] ஏற்று நடத்தும் நாடாக, பிரேசில் தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.

208 ஃபிஃபா தேசிய அணிகளில் 203 தகுதிச் சுற்றுக்களில் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் சூன் 15, 2011 முதல் நவம்பர் 20, 2013 வரை நடைபெற்றன. தகுதிபெற்ற 32 அணிகளில் 24 அணிகள் முந்தைய போட்டியிலும் தகுதி பெற்றிருந்தனர். புதியவர்களாக பொசுனியா எர்செகோவினா, முதல்முறையாக தனிநாடாக, தகுதி பெற்றுள்ளனர்.[15] ஃபிஃபா உலகத் தரவரிசைப்படி உயர்ந்த தரவரிசையில் இருந்து பங்குபெறாத நாடாக உக்ரைன் உள்ளது.[16] 2002க்குப் பிறகு முதன்முறையாக ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் தகுதிபெறவில்லை.

தகுதிபெற்ற அணிகள்[தொகு]

கீழ்வரும் 32 அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. போட்டி ஆட்டங்களின் நிரலை வரைவதற்கான அவற்றின் போட்டி தரவரிசைகளுக்கு அக்டோபர் 2013 ஃபிஃபா தரவரிசைப் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[17]

ஆசி.காகூ (4)
ஆப்.காகூ (5)
வமஅககாகூ (4)
தெஅகாகூ (6)
ஐகாசகூ (13)
     உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற நாடு      தகுதி பெறாத நாடு      போட்டியிடாத நாடு      ஃபிஃபா உறுப்பினரல்லாத நாடு

இடம்[தொகு]

இரியோ டி செனீரோ, ரிசெ பிரசிலியா, கூமா சாவோ பாவுலோ, சாபா போர்த்தலேசா, சியா
எசுடேடியோ டொ மரக்கானா எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா[18] கொரிந்தியன்சு அரங்கம் எசுடேடியோ கேஸ்தலோவ்

22°54′43.8″S 43°13′48.59″W / -22.912167, -43.2301639 (Estádio do Maracanã)

15°47′0.6″S 47°53′56.99″W / -15.7835, -47.8991639 (Estádio Nacional Mané Garrincha)

23°32′43.91″S 46°28′24.14″W / -23.5455306, -46.4733722 (Arena de São Paulo)

3°48′26.16″S 38°31′20.93″W / -3.8072667, -38.5224806 (Estádio Castelão)

கொள்ளளவு: 76,935[19]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளளவு: 70,042[20]

(புதிய அரங்கு)

கொள்ளளவு: 68,000
(புதிய அரங்கு)
கட்டுமான முன்னேற்றம் 94%
[21]
கொள்ளளவு: 64,846[22]

(புதுப்பிக்கப்பட்டது)

Maracana Stadium June 2013.jpg Brasilia Stadium - June 2013.jpg Arena de Itaquera (2014) - 2.jpg Fortaleza Arena.jpg
பெலோ அரிசாஞ்ச், மிஜெ போர்ட்டோ அலெக்ரி, ரிசு
மினெய்ரோ விளையாட்டரங்கம் எசுடேடியோ பெய்ரா ரியோ

19°51′57″S 43°58′15″W / -19.86583, -43.97083 (Estádio Mineirão)

30°3′56.21″S 51°14′9.91″W / -30.0656139, -51.2360861 (Estádio Beira-Rio)

கொள்ளவு: 62,547

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 51,300[23]
(புதுப்பிக்கப்பட்டது)
கட்டுமான முன்னேற்றம் 92%[21]
Novo mineirão aérea.jpg Estádio Beira-Rio (2014) - 2.jpg
சால்வடோர், பா ரெசிஃபி, பெ
அரீனா பொன்டே நோவா இட்டாய்பவா அரீனா

12°58′43″S 38°30′15″W / -12.97861, -38.50417 (Arena Fonte Nova)

8°2′24″S 35°0′29″W / -8.04, -35.00806 (Arena Pernambuco)

கொள்ளவு: 56,000[24]

(புதுப்பிக்கப்பட்டது)

கொள்ளவு: 46,154

(புதிய அரங்கு)

Itaipava Arena - March 2013.jpg Itaipava Arena Pernambuco - Recife, Pernambuco, Brasil.jpg
குய்யாபா, மா மனௌசு, அமா நடால், ரி குரிடிபே,
அரீனா பன்டனல் அரீனா அமசோனியா அரீனா டஸ் டுனஸ் அரீனா ட பய்க்சாடா

15°36′11″S 56°7′14″W / -15.60306, -56.12056 (Arena Pantanal)

3°4′59″S 60°1′41″W / -3.08306, -60.02806 (Arena Amazônia)

5°49′44.18″S 35°12′49.91″W / -5.8289389, -35.2138639 (Arena das Dunas)

25°26′54″S 49°16′37″W / -25.44833, -49.27694 (Arena da Baixada)

கொள்ளவு: 42,968
(புதிய அரங்கு)
கட்டுமான முன்னேற்றம் 87%[21]
கொள்ளவு: 42,374
(புதிய அரங்கு)
கட்டுமான முன்னேற்றம் 92.83%[21]
கொள்ளவு: 42,086
(புதிய அரங்கு)
கட்டுமான முன்னேற்றம் 97%[21]
கொள்ளவு: 43,981[25]
(புதுப்பிக்கப்பட்டது)
கட்டுமான முன்னேற்றம் 85.5%[21]
Arena Pantanal (2014)-2.jpg Arena Amazônia (2014) - 2.jpg Dunes Arena closer.jpg Arenadabaixada.jpg

இறுதி குலுக்கல்[தொகு]

தொட்டி 1 (மூலம்) தொட்டி 2 (ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா) தொட்டி 3 (ஆசியா மற்றும் வட அமெரிக்கா) தொட்டி 4 (ஐரோப்பா)

Flag of Brazil.svg பிரேசில் (நடத்தும் நாடு)
Flag of Argentina.svg ஆர்ஜெண்டீனா
Flag of Colombia.svg கொலம்பியா
Flag of Uruguay.svg உருகுவை
Flag of Belgium (civil).svg பெல்ஜியம்
Flag of Germany.svg செருமனி
Flag of Spain.svg எசுப்பானியா
Flag of Switzerland.svg சுவிட்சர்லாந்து

Flag of Algeria.svg அல்ஜீரியா
Flag of Cameroon.svg கமரூன்
Flag of Côte d'Ivoire.svg ஐவரி கோஸ்ட்
Flag of Ghana.svg கானா
Flag of Nigeria.svg நைஜீரியா
Flag of Chile.svg சிலி
Flag of Ecuador.svg எக்குவடோர்

Flag of Australia.svg ஆஸ்திரேலியா
Flag of Japan.svg சப்பான்
Flag of Iran.svg ஈரான்
Flag of South Korea.svg தென் கொரியா
Flag of Costa Rica.svg கோஸ்ட்டா ரிக்கா
Flag of Honduras.svg ஹொண்டுராஸ்
Flag of Mexico.svg மெக்சிக்கோ
Flag of the United States.svg அமெரிக்கா

Flag of Bosnia and Herzegovina.svg பொசுனியாவும் எர்செகோவினாவும்
Flag of Croatia.svg குரோவாசியா
Flag of England.svg இங்கிலாந்து
Flag of France.svg பிரான்ஸ்
Flag of Greece.svg கிரேக்கம்
Flag of Italy.svg இத்தாலி (தொட்டி 2க்கு)
Flag of the Netherlands.svg நெதர்லாந்து
Flag of Portugal.svg போர்த்துகல்
Flag of Russia.svg உருசியா

ஆட்ட நடுவர்கள்[தொகு]

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச்சு 2013இல் முன்தெரிவாக 52 நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆறு காற்பந்து கூட்டமைப்புக்களிலிலிருந்தும் ஒரு நடுவருக்கு இரு துணை நடுவர்கள் கூட்டாக இந்தப் பட்டியல் அமைந்திருந்தது.[26] 2014 சனவரி 14 அன்று பிஃபாவின் நடுவர் குழு 25 மூன்று நபர் நடுவர் அணிகளையும் ஆதரவாக எட்டு இரட்டையர் அணிகளையும் 43 வெவ்வேறு நாடுகளிலிலிருந்து அறிவித்தது.[27][28]

கோல்-கோடு தொழினுட்பம்[தொகு]

உலகக்கோப்பை காற்பந்தின் இறுதிப்போட்டிகளில் முதன்முறையாக நடுவர்களுக்குத் துணையாக கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உந்துதலாக முந்தைய உலகக்கோப்பை அமைந்தது; 2010ஆம் ஆண்டுப் போட்டியில் பதினாறுவர் சுற்றில் செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு கோல் வழங்க தவறுதலாக மறுக்கப்பட்டது.[29] இந்தப் பிழையை அடுத்து பிஃபா தலைவர் செப் பிளாட்டர் "கோல்-கோடு தொழினுட்பத்தைக் கருத்தில் எடுக்காதிருப்பது முட்டாள்தனம்" எனக் கடுமையாகச் சாடினார்.[30] இதனையடுத்து 2012இல் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் இதன் பயன்பாட்டிற்கு ஏற்பளித்தது.[31] இந்த மாற்றத்திற்கு பின்பு இந்தத் தொழினுட்பம் பிஃபாவின் 2012, 2013 கழக உலகக்கோப்பை போட்டிகளிலும் 2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் முறையாக 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படவுள்ளது. அக்டோபர் 2013இல் செருமனி நிறுவனத்தின் கோல்கன்ட்ரோல் இந்தப் போட்டியில் அலுவல்முறையாகப் பயன்படுத்தவிருக்கும் தொழினுட்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[32]

மறைகின்ற தெளிப்பு[தொகு]

உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முறையாக மறைகின்ற தெளிப்பு பயன்படுத்தப்படவிருக்கின்றது; நீரை அடிப்படையாகக் கொண்ட இந்த தெளிப்பு சில நிமிடங்களிலேயே மறைகின்ற தன்மை உடையதாக உள்ளது. தடங்கலற்ற உதையின்போது தடுக்கும் அணிக்கான பத்து கஜ கோட்டையும் பந்தை எங்கு வைப்பது என்பதையும் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 2013 பிஃபா 20-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா 17-கீழ் உலகக்கோப்பையிலும் 2013 பிஃபா கழகங்களுக்கான உலகக்கோப்பையிலும் வெற்றிகரமான சோதனையோட்டங்களுக்குப் பிறகு இதன் பயன்பாட்டிற்கு பிஃபா அனுமதி வழங்கியுள்ளது.[33]

போட்டிகள்[தொகு]

குழு நிலை[தொகு]

குழுவில் வெற்றி பெற்ற அணிகளும் அதற்கடுத்து வரும் அணிகளும் சுற்று 16க்கு முன்னேறும்.[34]

     வாகையாளர்      இரண்டாமிடம்      மூன்றாமிடம்      நான்காமிடம்      கால் இறுதி      சுற்று 16      குழு நிலை
சமநிலையை முறி கட்டளை விதி

குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறதி செய்யப்படும்:

 1. எல்லா குழு போட்டிகளிலும் அதிக புள்ளி
 2. எல்லா குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம்
 3. எல்லா குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை
 4. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள்
 5. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம்
 6. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை
 7. பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல்
குழு அட்டவணையில் முக்கிய நிறம்
16 அணிகளின் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

குழு ஏ[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
Flag of Brazil.svg பிரேசில் 0 0 0 0 0 0 0 0
Flag of Croatia.svg குரோவாசியா 0 0 0 0 0 0 0 0
Flag of Mexico.svg மெக்சிக்கோ 0 0 0 0 0 0 0 0
Flag of Cameroon.svg கமரூன் 0 0 0 0 0 0 0 0
12 சூன் 2014
17:00
பிரேசில் Flag of Brazil.svg போட்டி 1 Flag of Croatia.svg குரோவாசியா கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ

13 சூன் 2014
13:00
மெக்சிக்கோ Flag of Mexico.svg போட்டி 2 Flag of Cameroon.svg கமரூன் அரீனா டஸ் டுனஸ், நடால்

17 சூன் 2014
16:00
பிரேசில் Flag of Brazil.svg போட்டி 17 Flag of Mexico.svg மெக்சிக்கோ எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா

18 சூன் 2014
19:00
கமரூன் Flag of Cameroon.svg போட்டி 18 Flag of Croatia.svg குரோவாசியா அரீனா அமசோனியா, மனௌசு

23 சூன் 2014
17:00
கமரூன் Flag of Cameroon.svg போட்டி 33 Flag of Brazil.svg பிரேசில் எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா

23 சூன் 2014
17:00
குரோவாசியா Flag of Croatia.svg போட்டி 34 Flag of Mexico.svg மெக்சிக்கோ அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி

குழு பி[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
Flag of Spain.svg எசுப்பானியா 0 0 0 0 0 0 0 0
Flag of the Netherlands.svg நெதர்லாந்து 0 0 0 0 0 0 0 0
Flag of Chile.svg சிலி 0 0 0 0 0 0 0 0
Flag of Australia.svg ஆஸ்திரேலியா 0 0 0 0 0 0 0 0
13 சூன் 2014
16:00
எசுப்பானியா Flag of Spain.svg போட்டி 3 Flag of the Netherlands.svg நெதர்லாந்து அரீனா பொன்டே நோவா, சால்வடோர்

13 சூன் 2014
19:00
சிலி Flag of Chile.svg போட்டி 4 Flag of Australia.svg ஆஸ்திரேலியா அரீனா பன்டனல், குய்யாபா

18 சூன் 2014
13:00
ஆஸ்திரேலியா Flag of Australia.svg போட்டி 20 Flag of the Netherlands.svg நெதர்லாந்து எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி

18 சூன் 2014
16:00
எசுப்பானியா Flag of Spain.svg போட்டி 19 Flag of Chile.svg சிலி மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ

23 சூன் 2014
13:00
ஆஸ்திரேலியா Flag of Australia.svg போட்டி 35 Flag of Spain.svg எசுப்பானியா எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே

23 சூன் 2014
13:00
நெதர்லாந்து Flag of the Netherlands.svg போட்டி 36 Flag of Chile.svg சிலி கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ

குழு சி[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
Flag of Colombia.svg கொலம்பியா 0 0 0 0 0 0 0 0
Flag of Greece.svg கிரேக்கம் 0 0 0 0 0 0 0 0
Flag of Côte d'Ivoire.svg ஐவரி கோஸ்ட் 0 0 0 0 0 0 0 0
Flag of Japan.svg சப்பான் 0 0 0 0 0 0 0 0
14 சூன் 2014
13:00
கொலம்பியா Flag of Colombia.svg போட்டி 5 Flag of Greece.svg கிரேக்கம் மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்

14 சூன் 2014
22:00
ஐவரி கோஸ்ட் Flag of Côte d'Ivoire.svg போட்டி 6 Flag of Japan.svg சப்பான் அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி

19 சூன் 2014
13:00
கொலம்பியா Flag of Colombia.svg போட்டி 21 Flag of Côte d'Ivoire.svg ஐவரி கோஸ்ட் எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா

19 சூன் 2014
19:00
சப்பான் Flag of Japan.svg போட்டி 22 Flag of Greece.svg கிரேக்கம் அரீனா டஸ் டுனஸ், நடால்

24 சூன் 2014
17:00
சப்பான் Flag of Japan.svg போட்டி 37 Flag of Colombia.svg கொலம்பியா அரீனா பன்டனல், குய்யாபா

24 சூன் 2014
17:00
கிரேக்கம் Flag of Greece.svg போட்டி 38 Flag of Côte d'Ivoire.svg ஐவரி கோஸ்ட் எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா

குழு டி[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
Flag of Uruguay.svg உருகுவை 0 0 0 0 0 0 0 0
Flag of Costa Rica.svg கோஸ்ட்டா ரிக்கா 0 0 0 0 0 0 0 0
Flag of England.svg இங்கிலாந்து 0 0 0 0 0 0 0 0
Flag of Italy.svg இத்தாலி 0 0 0 0 0 0 0 0
14 சூன் 2014
16:00
உருகுவை Flag of Uruguay.svg போட்டி 7 Flag of Costa Rica.svg கோஸ்ட்டா ரிக்கா எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா

14 சூன் 2014
19:00
இங்கிலாந்து Flag of England.svg போட்டி 8 Flag of Italy.svg இத்தாலி அரீனா அமசோனியா, மனௌசு

19 சூன் 2014
16:00
உருகுவை Flag of Uruguay.svg போட்டி 23 Flag of England.svg இங்கிலாந்து கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ

20 சூன் 2014
13:00
இத்தாலி Flag of Italy.svg போட்டி 24 Flag of Costa Rica.svg கோஸ்ட்டா ரிக்கா அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி

24 சூன் 2014
13:00
இத்தாலி Flag of Italy.svg போட்டி 39 Flag of Uruguay.svg உருகுவை அரீனா டஸ் டுனஸ், நடால்

24 சூன் 2014
13:00
கோஸ்ட்டா ரிக்கா Flag of Costa Rica.svg போட்டி 40 Flag of England.svg இங்கிலாந்து மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்

குழு ஈ[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
Flag of Switzerland.svg சுவிட்சர்லாந்து 0 0 0 0 0 0 0 0
Flag of Ecuador.svg எக்குவடோர் 0 0 0 0 0 0 0 0
Flag of France.svg பிரான்ஸ் 0 0 0 0 0 0 0 0
Flag of Honduras.svg ஹொண்டுராஸ் 0 0 0 0 0 0 0 0
15 சூன் 2014
13:00
சுவிட்சர்லாந்து Flag of Switzerland.svg போட்டி 9 Flag of Ecuador.svg எக்குவடோர் எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா

15 சூன் 2014
16:00
பிரான்ஸ் Flag of France.svg போட்டி 10 Flag of Honduras.svg ஹொண்டுராஸ் எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி

20 சூன் 2014
16:00
சுவிட்சர்லாந்து Flag of Switzerland.svg போட்டி 25 Flag of France.svg பிரான்ஸ் அரீனா பொன்டே நோவா, சால்வடோர்

20 சூன் 2014
19:00
ஹொண்டுராஸ் Flag of Honduras.svg போட்டி 26 Flag of Ecuador.svg எக்குவடோர் எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே

25 சூன் 2014
17:00
ஹொண்டுராஸ் Flag of Honduras.svg போட்டி 41 Flag of Switzerland.svg சுவிட்சர்லாந்து அரீனா அமசோனியா, மனௌசு

25 சூன் 2014
17:00
எக்குவடோர் Flag of Ecuador.svg போட்டி 42 Flag of France.svg பிரான்ஸ் மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ

குழு எப்[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
Flag of Argentina.svg ஆர்ஜெண்டீனா 0 0 0 0 0 0 0 0
Flag of Bosnia and Herzegovina.svg பொசுனியாவும் எர்செகோவினாவும் 0 0 0 0 0 0 0 0
Flag of Iran.svg ஈரான் 0 0 0 0 0 0 0 0
Flag of Nigeria.svg நைஜீரியா 0 0 0 0 0 0 0 0
15 சூன் 2014
19:00
ஆர்ஜெண்டீனா Flag of Argentina.svg போட்டி 11 Flag of Bosnia and Herzegovina.svg பொசுனியாவும் எர்செகோவினாவும் மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ

16 சூன் 2014
16:00
ஈரான் Flag of Iran.svg போட்டி 12 Flag of Nigeria.svg நைஜீரியா எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே

21 சூன் 2014
13:00
ஆர்ஜெண்டீனா Flag of Argentina.svg போட்டி 27 Flag of Iran.svg ஈரான் மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்

21 சூன் 2014
19:00
நைஜீரியா Flag of Nigeria.svg போட்டி 28 Flag of Bosnia and Herzegovina.svg பொசுனியாவும் எர்செகோவினாவும் அரீனா பன்டனல், குய்யாபா

25 சூன் 2014
13:00
நைஜீரியா Flag of Nigeria.svg போட்டி 43 Flag of Argentina.svg ஆர்ஜெண்டீனா எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி

25 சூன் 2014
13:00
பொசுனியாவும் எர்செகோவினாவும் Flag of Bosnia and Herzegovina.svg போட்டி 44 Flag of Iran.svg ஈரான் அரீனா பொன்டே நோவா, சால்வடோர்

குழு ஜி[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
Flag of Germany.svg செருமனி 0 0 0 0 0 0 0 0
Flag of Portugal.svg போர்த்துகல் 0 0 0 0 0 0 0 0
Flag of Ghana.svg கானா 0 0 0 0 0 0 0 0
Flag of the United States.svg அமெரிக்கா 0 0 0 0 0 0 0 0
16 சூன் 2014
13:00
செருமனி Flag of Germany.svg போட்டி 13 Flag of Portugal.svg போர்த்துகல் அரீனா பொன்டே நோவா, சால்வடோர்

16 சூன் 2014
19:00
கானா Flag of Ghana.svg போட்டி 14 Flag of the United States.svg அமெரிக்கா அரீனா டஸ் டுனஸ், நடால்

21 சூன் 2014
16:00
செருமனி Flag of Germany.svg போட்டி 29 Flag of Ghana.svg கானா எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா

22 சூன் 2014
19:00
அமெரிக்கா Flag of the United States.svg போட்டி 30 Flag of Portugal.svg போர்த்துகல் அரீனா அமசோனியா, மனௌசு

26 சூன் 2014
13:00
அமெரிக்கா Flag of the United States.svg போட்டி 45 Flag of Germany.svg செருமனி அரீனா பெர்னம்புகோ, ரெசிஃபி

26 சூன் 2014
13:00
போர்த்துகல் Flag of Portugal.svg போட்டி 46 Flag of Ghana.svg கானா எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா

குழு எச்[தொகு]

அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
Flag of Belgium (civil).svg பெல்ஜியம் 0 0 0 0 0 0 0 0
Flag of Algeria.svg அல்ஜீரியா 0 0 0 0 0 0 0 0
Flag of Russia.svg உருசியா 0 0 0 0 0 0 0 0
Flag of South Korea.svg தென் கொரியா 0 0 0 0 0 0 0 0
17 சூன் 2014
13:00
பெல்ஜியம் Flag of Belgium (civil).svg போட்டி 15 Flag of Algeria.svg அல்ஜீரியா மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்

17 சூன் 2014
19:00
உருசியா Flag of Russia.svg போட்டி 16 Flag of South Korea.svg தென் கொரியா அரீனா பன்டனல், குய்யாபா

22 சூன் 2014
13:00
பெல்ஜியம் Flag of Belgium (civil).svg போட்டி 31 Flag of Russia.svg உருசியா மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ

22 சூன் 2014
16:00
தென் கொரியா Flag of South Korea.svg போட்டி 32 Flag of Algeria.svg அல்ஜீரியா எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி

26 சூன் 2014
17:00
தென் கொரியா Flag of South Korea.svg போட்டி 47 Flag of Belgium (civil).svg பெல்ஜியம் கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ

26 சூன் 2014
17:00
அல்ஜீரியா Flag of Algeria.svg போட்டி 48 Flag of Russia.svg உருசியா எசுடேடியோ டொ மரக்கானா, குரிடிபே

ஆட்டமிழக்கும் நிலை[தொகு]

16 அணிகளின் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி
                           
28 சூன் – பெலோ அரிசாஞ்ச்            
 வெற்றியாளர் - குழுA  
4 சூலை – போர்த்தலேசா
 இரண்டாமிடம் - குழு B    
 வெற்றியாளர் - போட்டி 49  
28 சூன் – இரியோ டி செனீரோ
   வெற்றியாளர் - போட்டி 50    
 வெற்றியாளர் - குழு C  
8 சூலை – பெலோ அரிசாஞ்ச்
 இரண்டாமிடம் - கு ழுD    
 வெற்றியாளர் - போட்டி 57  
30 சூன் – பிரசிலியா
   வெற்றியாளர் - போட்டி 58    
 வெற்றியாளர் - குழு E  
4 சூலை – இரியோ டி செனீரோ
 இரண்டாமிடம் - குழு F    
 வெற்றியாளர் - போட்டி 53  
30 சூன் – போர்ட்டோ அலெக்ரி
   வெற்றியாளர் - போட்டி 54    
 வெற்றியாளர் - குழு G  
13 சூலை – இரியோ டி செனீரோ
 இரண்டாமிடம் - குழு H    
 வெற்றியாளர் - போட்டி 61  
29 சூன் – போர்த்தலேசா
   வெற்றியாளர் - போட்டி 62  
 வெற்றியாளர் - குழு B  
5 சூலை – சவ்வாதோர்
 இரண்டாமிடம் - குழு A    
 வெற்றியாளர் - போட்டி 51  
29 சூன் – ரெசிஃபி
   வெற்றியாளர் - போட்டி 52    
 வெற்றியாளர் - குழு D  
9 சூலை – சாவோ பாவுலோ
 இரண்டாமிடம் - குழு C    
 வெற்றியாளர் - போட்டி 59  
1 சூலை – சாவோ பாவுலோ
   வெற்றியாளர் - போட்டி 60     மூன்றாம் இடம்
 வெற்றியாளர் - குழு F  
5 சூலை – பிரசிலியா 12 சூலை – பிரசிலியா
 இரண்டாமிடம் - குழு E    
 வெற்றியாளர் - போட்டி 55    தோல்வியடைந்தவர் - போட்டி 61  
1 சூலை – சவ்வாதோர்
   வெற்றியாளர் - போட்டி 56      தோல்வியடைந்தவர் - போட்டி 62  
 வெற்றியாளர் - குழு H  
 இரண்டாமிடம் - குழு G    

சுற்று 16[தொகு]

28 சூன் 2014
13:00
வெற்றியாளர் - குழு ஏ போட்டி 49 இரண்டாமிடம் - குழு பி மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்

28 சூன் 2014
17:00
வெற்றியாளர் - குழு சி போட்டி 50 இரண்டாமிடம் - குழு டி மரக்கானா, இரியோ டி செனீரோ

29 சூன் 2014
13:00
வெற்றியாளர் - குழு பி போட்டி 51 இரண்டாமிடம் - குழு ஏ எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா

29 சூன் 2014
17:00
வெற்றியாளர் - குழு டி போட்டி 52 இரண்டாமிடம் - குழு சி இட்டாய்பவா அரீனா, ரெசிஃபி

30 சூன் 2014
13:00
வெற்றியாளர் - குழு ஈ போட்டி 53 இரண்டாமிடம் - குழு எப் எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா

30 சூன் 2014
17:00
வெற்றியாளர் - குழு ஜி போட்டி 54 இரண்டாமிடம் - குழு எச் எசுடேடியோ பெய்ரா ரியோ, போர்ட்டோ அலெக்ரி

1 சூலை 2014
13:00
வெற்றியாளர் - குழு எப் போட்டி 55 இரண்டாமிடம் - குழு ஈ கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ

1 சூலை 2014
17:00
வெற்றியாளர் - குழு எச் போட்டி 56 இரண்டாமிடம் - குழு ஜி அரீனா பொன்டே நோவா, சவ்வாதோர்

கால் இறுதிகள்[தொகு]

4 சூலை 2014
13:00
வெற்றியாளர் - போட்டி 53 போட்டி 58 வெற்றியாளர் - போட்டி 54 மரக்கானா, இரியோ டி செனீரோ

4 சூலை 2014
17:00
வெற்றியாளர் - போட்டி 49 போட்டி 57 வெற்றியாளர் - போட்டி 50 எசுடேடியோ கேஸ்தலோவ், போர்த்தலேசா

5 சூலை 2014
13:00
வெற்றியாளர் - போட்டி 55 போட்டி 60 வெற்றியாளர் - போட்டி 56 எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா

5 சூலை 2014
17:00
வெற்றியாளர் - போட்டி 51 போட்டி 59 வெற்றியாளர் - போட்டி 52 அரீனா பொன்டே நோவா, சவ்வாதோர்

அரை இறுதிகள்[தொகு]

8 சூலை 2014
17:00
வெற்றியாளர் - போட்டி 57 போட்டி 61 வெற்றியாளர் - போட்டி 58 மினெய்ரோ, பெலோ அரிசாஞ்ச்

9 சூலை 2014
17:00
வெற்றியாளர் - போட்டி 59 போட்டி 62 வெற்றியாளர் - போட்டி 60 கொரிந்தியன்சு அரங்கம், சாவோ பாவுலோ

மூன்றாமிட போட்டி[தொகு]

12 சூலை 2014
17:00
தோல்வியடைந்தவர் - போட்டி 61 போட்டி 63 தோல்வியடைந்தவர் - போட்டி 62 எசுடேடியோ நாசியோனல் மனே கரிஞ்சா, பிரசிலியா

இறுதி[தொகு]

13 சூலை 2014
16:00
61வது போட்டி வெற்றியாளர் போட்டி 64 62வது போட்டி வெற்றியாளர் மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ

மேற்சான்றுகள்[தொகு]

 1. "FIFA launch GLT tender for Brazil 2013/14". FIFA.com (19 February 2013).
 2. "If the World Cup started tomorrow". ESPN (12 June 2013).
 3. "2014 FIFA World Cup to be held in South America". FIFA.com (7 மார்ச் 2003).
 4. "Rotation ends in 2018". FIFA.com (29 அக்டோபர் 2007).
 5. "Argentina, Brazil and Colombia want 2014 World Cup". People's Daily (19 சனவரி 2003).
 6. "Brazil set to host World Cup". BBC. 18 மார்ச் 2003. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/2858989.stm. 
 7. "Colombia bids for 2014 World Cup". BBC. 17 சூலை 2006. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/5187170.stm. 
 8. "Colombia join 2014 World Cup race". BBC. 19 திசம்பர் 2006. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/6191981.stm. 
 9. "Brazil to make 2014 World Cup bid". BBC. 13 திசம்பர் 2006. http://news.bbc.co.uk/sport1/hi/football/internationals/6173775.stm. 
 10. "Brazil confirms bid – Colombia withdraws". Fifa.com (13 ஏப்ரல் 2007).
 11. "Brazil confirmed as 2014 hosts". FIFA (30 அக்டோபர் 2007). மூல முகவரியிலிருந்து 31 அக்டோபர் 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 அக்டோபர் 2007.
 12. "Financial report presented, Brazil 2014 slots & host countries decided". Fifa.com (3 மார்ச் 2011).
 13. "Rio draw pits Spain against France". FIFA.com (30 சூலை 2011). பார்த்த நாள் 28 மார்ச் 2013.
 14. "Draw for World Cup qualifiers at Marina da Glória in Rio" (Portuguese). globoesporte.com (8 திசம்பர் 2010). பார்த்த நாள் 21 சனவரி 2011.
 15. "Barbarez: The World Cup is priceless". Fifa.com (16 அக்டோபர் 2013).
 16. "Portugal climbs to 5th in FIFA Ranking". Goal.com (28 நவம்பர் 2013).
 17. "World Cup seeds to be based on அக்டோபர் world ranking". Espn Fc (4 அக்டோபர் 2013). பார்த்த நாள் 12 சனவரி 2014.
 18. "Estádio Nacional Mané Garrincha". FIFA.com. பார்த்த நாள் 14 June 2013.
 19. "Estadio do Maracana - Rio De Janeiro". fifa.com. பார்த்த நாள் 2 June 2013.
 20. "Fifa admite adotar nome Mané Garrincha em estádio de Brasília na Copa". Copadomundo.uol.com.br (6 May 2013). பார்த்த நாள் 20 June 2013.
 21. 21.0 21.1 21.2 21.3 21.4 21.5 "A seis meses da Copa do Mundo, atrasos marcam obras dos estádios" (Portuguese). www.estadão.com.br (13 December 2013). பார்த்த நாள் 16 December 2013.
 22. "Estadio Castelao - Fortaleza". Fifa.com. பார்த்த நாள் 20 June 2013.
 23. "Site oficial do Sport Club Internacional - Projeto Gigante Para Sempre". Internacional.com.br. பார்த்த நாள் 25 May 2013.
 24. "Arena Fonte Nova - Salvador Stadium". Fifa.com (28 January 1951). பார்த்த நாள் 20 June 2013.
 25. "Arena da Baixada's capacity". Globoesporte.globo.com (30 July 2013). பார்த்த நாள் 16 September 2013.
 26. "Open list of prospective referees & assistant referees for the 2014 FIFA World Cup" (PDF). FIFA (7 March 2013).
 27. "Referee trios and support duos appointed for 2014 FIFA World Cup". FIFA (15 January 2014).
 28. "Referees & Assistant referees for the 2014 FIFA World Cup". FIFA (14 January 2014).
 29. "England v Germany: Frank Lampard denied goal by Uruguayan linesman – in pictures". The Daily Telegraph. 27 June 2010. http://www.telegraph.co.uk/sport/football/world-cup/pictures/7857609/England-v-Germany-Frank-Lampard-denied-goal-by-Uruguayan-linesman-in-pictures.html. 
 30. "World Cup 2010: Blatter apologises for disallowed goal". BBC Sport. 29 June 2010. http://news.bbc.co.uk/sport1/hi/football/world_cup_2010/8771294.stm. 
 31. "IFAB gives the green light to goal-line technology". FIFA (5 July 2012).
 32. "GoalControl confirmed as goal-line technology provider for Brazil 2014". FIFA (10 October 2013).
 33. "Vanishing spray set for World Cup". eurosport.com (21 November 2013).
 34. "Regulations – FIFA World Cup Brazil 2014". FIFA.

வெளி இணைப்பு[தொகு]

Wikivoyage-Logo-v3-icon.svg 2014 உலகக்கோப்பை காற்பந்து பயண வழிகாட்டி விக்கிப்பயணத்திலிருந்து