உள்ளடக்கத்துக்குச் செல்

இரியோ டி செனீரோ (மாநிலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரியோ டி செனீரோ
Estado do Rio de Janeiro
இரியோ டி செனீரோ மாநிலம்
இரியோ டி செனீரோ-இன் கொடி
கொடி
இரியோ டி செனீரோ-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Recte Rem Publicam Gerere (இலத்தீனம்)
"பொதுச் சேவைகளை நேர்மையுடன் நடத்துக"
பண்: 15ஆம் நவம்பர்
பிரேசிலில் இரியோ டி செனீரோ மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் இரியோ டி செனீரோ மாநிலத்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரும் மிகப்பெரும் நகரமும்இரியோ டெ செனீரோ
அரசு
  ஆளுநர்செர்ஜியோ காப்ரல் ஃபிஃகோ
  துணை ஆளுநர்லூயி பெர்னான்டோ டி சௌசா
பரப்பளவு
  மொத்தம்43,696.1 km2 (16,871.2 sq mi)
  பரப்பளவு தரவரிசை24வது
மக்கள்தொகை
 (2012)[1]
  மொத்தம்1,62,31,365
  தரவரிசைமூன்றாவது
  அடர்த்தி370/km2 (960/sq mi)
  அடர்த்தி தரவரிசைஇரண்டாவது
இனம்Fluminense
GDP
  Year2008 estimate
  TotalR$ 343,182,000,000 (2nd)
  Per capitaR$ 21,621 (3rd)
HDI
  Year2005
  Category0.832 high (5th)
நேர வலயம்ஒசநே-3 (BRT)
  கோடை (பசேநே)ஒசநே-2 (BRST)
அஞ்சல் குறியீடு
20000-000 to 28990-000
ஐஎசுஓ 3166 குறியீடுBR-RJ
இணையதளம்governo.rj.gov.br

இரியோ டி செனீரோ (Rio de Janeiro) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் இரியோ டி செனீரோ ஆகும்.

இரியோ டி செனீரோ மாநிலம் பிரேசிலின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.இதன் எல்லைகளாக மினாசு செராய்சு, எசுபிரிட்தோ சான்தோ மற்றும் சாவோ பாவுலோ போன்ற மாநிலங்களும் அத்திலாந்திக்குப் பெருங்கடலும் அமைந்துள்ளன. இந்த மாநிலத்தின் பரப்பளவு 43,653 சதுர கிலோமீட்டர்கள் (16,855 sq mi) ஆகும்.


இந்த மாநிலத்தின் மிகப்பெரும் நகரங்களாக இரியோ டி செனீரோ, சாவோ கோன்சலோ, டுக்கெ டி காக்சியசு, நோவா இக்வாசோ, பெல்போர்டு ரோக்சோ, நித்தேராய், சாவோ ஜோவோ டி மெரிட்டி, கேம்போசு டோசு கோய்டகசெசு, பெட்ரோபோலிசு, வோல்ட்டா ரெடொன்டா, மாஜ்ஜெ, இட்டாபோராய், மெக்காய், மெசுகுயிட்டா, காபோ பிரியோ, நோவா பிரிபுர்கொ, அங்க்ரா தோசு ரெயிசு மற்றும் பர்ரா மன்சா ஆகிய நகரங்கள் உள்ளன.

இந்த மாநிலம் பிரேசிலின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாகவும் தென்கிழக்கு மண்டலத்தில் மிகச்சிறிய மாநிலமாகவும் உள்ளது. இருப்பினும் பிரேசிலின் மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் மூன்றாவதாக உள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி 16 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். நாட்டில் மிகவும் நீளமான கடற்கரை உள்ள மூன்றாவது மாநிலமாக அமைந்துள்ளது.

மேற்சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியோ_டி_செனீரோ_(மாநிலம்)&oldid=3683979" இலிருந்து மீள்விக்கப்பட்டது