பிஃபா உலகத் தரவரிசை
| 2026 சூன் 11 நிலவரப்படி முதல் 20 தரவரிசைகள் | |||
| தரம் | மாற்றம் | அணி | புள்ளிகள் |
|---|---|---|---|
| 1 | 1841.3 | ||
| 2 | 1816.71 | ||
| 3 | 1773.88 | ||
| 4 | 1759.78 | ||
| 5 | 1728.47 | ||
| 6 | 1726.14 | ||
| 7 | ▼ 1 | 1715.22 | |
| 8 | 1694.51 | ||
| 9 | 1676.56 | ||
| 10 | 1666.57 | ||
| 11 | 1650.21 | ||
| 12 | 1645.64 | ||
| 13 | ▼ 1 | 1644.89 | |
| 14 | ▼ 1 | 1638.71 | |
| 15 | 1635.92 | ||
| 16 | ▼ 2 | 1627.48 | |
| 17 | 1611.04 | ||
| 18 | 1584.38 | ||
| 19 | 1569.82 | ||
| 20 | 1564.61 | ||
| *2026 ஏப்பிரல் 1 முதலான மாற்றம் | |||
| *அடுத்த புதுப்பிப்பு 2026 சூலை 20 அன்று | |||
| FIFA.com இல் முழுமையான தரவரிசை | |||
பீஃபா ஆண்கள் உலகத் தரவரிசை (FIFA Men's World Ranking) என்பது காற்பந்து விளையாட்டில் உள்ள ஆண்கள் தேசிய அணிகளுக்கான ஒரு உலகத் தரவரிசை முறையாகும், இது முதன்முதலில் திசம்பர் 1992 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] காற்பந்தின் உலக நிர்வாக அமைப்பான பீஃபா-வின் உறுப்பு நாடுகளின் ஆண்கள் அணிகள், அவற்றின் விளையாட்டு முடிவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. இதில் மிகவும் வெற்றிகரமான அணிகள் உயர் தரவரிசையில் வைக்கப்படுகின்றன. சூன் 2026 நிலவரப்படி, அர்கெந்தீனா இந்தத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. எட்டு அணிகள் (அர்கெந்தீனா, பெல்ஜியம், பிரேசில், பிரான்சு, செருமனி, இத்தாலி, நெதர்லாந்து, எசுப்பானியா ஆகியன) முதலிடத்தைப் பிடித்துள்ளன, இவற்றில் பிரேசில் மிக நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
பீஃபா-வால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பன்னாட்டுப் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. முந்தைய கணக்கீட்டு முறை தேசிய அணிகளின் ஒப்பீட்டு பலத்தை திறம்பட பிரதிபலிக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தத் தரவரிசை முறை பலமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2018 ஆகத்து 16 முதல், இந்தத் தரவரிசை முறை சதுரங்கம், கோ விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் எலோ தரவுகோள் முறையை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தரவரிசைக்கு கோக்கோ கோலா நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது; இதன் காரணமாக, பீஃபா/கோக்கோ கோலா உலகத் தரவரிசைப் பெயரும் பயன்படுத்தப்படுகிறது. கோக்கோ கோலா பெண்களுக்கான போட்டிக்கும் நல்கை வழங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The FIFA/Coca-Cola Men's World Ranking. 11 சூன் 2026
