உருகுவை தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருகுவை
Shirt badge/Association crest
அடைபெயர்Los Charrúas
La Celeste
(வான்வெளி நீலத்தினர்)

La Garra Charrúa
கூட்டமைப்புAsociación Uruguaya de Fútbol (AUF)
கண்ட கூட்டமைப்புதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர்ஆசுகார் தபரேசு
துணைப் பயிற்சியாளர்செல்சோ ஓடெரோ
அணித் தலைவர்டியாகோ லுகானோ
Most capsடியாகோ போர்லன் (107)
அதிகபட்ச கோல் அடித்தவர்லூயி சுயாரெசு (39)
தன்னக விளையாட்டரங்கம்எசுடேடியோ சென்டெனரியோ
பீஃபா குறியீடுURU
பீஃபா தரவரிசை6 Green Arrow Up Darker.svg 1
அதிகபட்ச பிஃபா தரவரிசை2 (சூன் 2012)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை76 (திசம்பர் 1998)
எலோ தரவரிசை9
அதிகபட்ச எலோ1 (பல்வேறு நாட்கள் 1920–31)
குறைந்தபட்ச எலோ46 (மார்ச் 1980)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 உருகுவை 2–3 அர்கெந்தீனா 
(மோன்டிவிடியோ, உருகுவை; 16 மே 1901)
பெரும் வெற்றி
 உருகுவை 9–0 பொலிவியா 
(லிமா; 9 நவம்பர் 1927)
பெரும் தோல்வி
 உருகுவை 0–6 அர்கெந்தீனா 
(மோன்டிவிடியோ, உருகுவை; 20 சூலை 1902)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்12 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1930 மற்றும் 1950
கோப்பா அமெரிக்கா
பங்கேற்புகள்41 (முதற்தடவையாக தென் அமெரிக்க கால்பந்துப் போட்டி, 1916 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1916, 1917, 1920, 1923, 1924,1926,1935,1942, 1956, 1959, 1967, 1983,1987, 1995, 2011
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 1997 இல்)
சிறந்த முடிவு4வது இடம், 1997, 2013

உருகுவை தேசிய கால்பந்து அணி பன்னாட்டு கால்பந்துப் போட்டிகளில் உருகுவை சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை உருகுவையில் கால்பந்தாட்டத்தைக் கட்டுப்படுத்தி வரும் உருகுவை கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. தற்போதைய முதன்மை பயிற்றுனராக ஆசுகார் தபரேசு உள்ளார். உருகுவையின் அணி கால்பந்து இரசிகர்களால் La Celeste (வான்வெளி நீலத்தவர்) அல்லது Charrúas எனக் குறிப்பிடப்படுகின்றது.

உருகுவே 2011 அமெரிக்கக் கோப்பையை வென்று தற்போதைய வாகையாளர்களாக விளங்குகின்றனர். கோபா அமெரிக்கா கோப்பையை 15 முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். உலகக்கோப்பையை, 1930ஆம் ஆண்டில் போட்டி நடத்தும் நாடாகவும் 1950ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1924ஆம் ஆண்டிலும் 1928ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். மொத்தமாக 20 அலுவல்முறை பன்னாட்டு வெற்றிகளை பெற்றுள்ள உருகுவை மிகுந்த பன்னாட்டு விருதுகளை வென்ற நாடாக சாதனை படைத்துள்ளது. உருகுவை 3.25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிறிய நாடு என்கையில் இச்சாதனைகளின் பெருமை விரியும்.

வெளி இணைப்புகள்[தொகு]