பொலிவியா தேசிய காற்பந்து அணி
அடைபெயர் | லா வேர்தே (பச்சைக்காரர்கள்)[1] | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | பொலிவிய காற்பந்துக் கூட்டமைப்பு (FBF) | ||
கண்ட கூட்டமைப்பு | தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | யூலியோ சீசர் பால்டிவீசோ | ||
அணித் தலைவர் | எட்வர்டு சென்டெனோ | ||
அணியின் துணைத் தலைவர் | மார்செலோ மோரெனோ | ||
Most caps | லூயி கிறிஸ்டால்டோ (93) மார்கோ சான்டி (93)[2] | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | ஜோக்கின் போடெரோ (20)[3] | ||
தன்னக விளையாட்டரங்கம் | எர்னன்டோ சிலெசு விளையாட்டரங்கம் (Estadio Hernando Siles) | ||
பீஃபா குறியீடு | BOL | ||
பீஃபா தரவரிசை | 79 (5 மே 2016) | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 18 (சூலை 1997) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 115 (அக்டோபர் 2011) | ||
எலோ தரவரிசை | 53 (சூன் 2015) | ||
அதிகபட்ச எலோ | 22 (சூன் 1997[4]) | ||
குறைந்தபட்ச எலோ | 86 (சூலை 1989[5]) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
சிலி 7–1 பொலிவியா (சான் டியேகோ (சிலி); அக்டோபர் 12, 1926) | |||
பெரும் வெற்றி | |||
Bolivia 7–0 வெனிசுவேலா (லா பாஸ்; ஆகத்து 22, 1993) Bolivia 9–2 எயிட்டி (La Paz, Bolivia; மார்ச் 3, 2000) | |||
பெரும் தோல்வி | |||
உருகுவை 9–0 பொலிவியா (லிமா, பெரு; நவம்பர் 6, 1927) பிரேசில் 10–1 பொலிவியா (சாவோ பாவுலோ, பிரேசில்; ஏப்ரல் 10, 1949) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 3 (முதற்தடவையாக 1930 இல்) | ||
சிறந்த முடிவு | குழு நிலை, 1930, 1950, 1994 | ||
கோபா அமெரிக்கா | |||
பங்கேற்புகள் | 24 (முதற்தடவையாக 1926 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 1963 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 1999 இல்) | ||
சிறந்த முடிவு | குழு நிலை, 1999 | ||
இணையதளம் | www |
பொலிவியா தேசிய காற்பந்து அணி (Bolivia national football team) 1926ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் பொலிவியா சார்பாக விளையாடும் அணியாகும். பொலிவியக் காற்பந்துக் கூட்டமைப்பினால் (FBF)[upper-alpha 1] பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் கீழான தென்னமெரிக்க காற்பந்துக் கூட்டமைப்பின் பத்து உறுப்பினர்களில் ஒன்றாகும்.
1930 மற்றும் 1950 உலகக்கோப்பைகளில் பங்கேற்றுள்ள இந்த அணி பன்னாட்டுக் காற்பந்துக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கத் தொடங்கிய பிறகு ஒருமுறைதான் தகுதி பெற்றுள்ளது—1994. அவ்வாண்டு,சிகாகோவில் நடந்த உலகக்கோப்பை விளையாட்டில் முதல் சுற்றிலேயே வாகையாளர்கள் செருமனியுடன் மோதி 0-1 என்ற கணக்கில் தோற்றது. 'இதன்பிறகு எந்த உலகக்கோப்பையிலும் முதல் சுற்றைக் கடந்து பொலிவியா விளையாடியதில்லை. இருப்பினும், கோபா அமெரிக்காவில் 1963இல் வாகையாளர்களாகவும் 1997இல் இரண்டாவதாகவும் வென்றுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு சிலியில் நடந்த கோபா அமெரிக்கா போட்டிகளில் எக்குவடோரை 3–2 என்ற கணக்கில் தோற்கடித்து, 1997க்குப் பிறகு முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினர்.[6]
குறிப்புகள்
[தொகு]- ↑ இது பொலிவியக் காற்பந்துக் கூட்டமைப்பின் எசுப்பானிய மொழிப் பெயரான Federación Boliviana de Fútbol என்பதன் சுருக்கமாகும்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ http://www.yourspanishtranslation.com/famous-bolivian-footballers
- ↑ http://www.rsssf.com/miscellaneous/bol-recintlp.html
- ↑ http://www.rsssf.com/miscellaneous/bol-recintlp.html
- ↑ http://www.eloratings.net/Bolivia.htm
- ↑ http://www.eloratings.net/Bolivia.htm
- ↑ http://futbol.univision.com/copa-america/article/2015-06-15/ecuador-2-bolivia-3-cronica?ftloc=channel566:wcmWidgetUimStage&ftpos=channel566:wcmWidgetUimStage:1&cmpid=345677&hootPostID=45f58e8c40d8360c7e909014610475b7#axzz3dBb8CynY