கரீம் பென்சிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரீம் பென்சிமா

யூரோ 2012 போது பென்சிமா.
சுய தகவல்கள்
முழுப் பெயர்Karim Mostafa Benzema[1]
பிறந்த நாள்19 திசம்பர் 1987 (1987-12-19) (அகவை 35)
பிறந்த இடம்லியோன், பிரான்சு
உயரம்1.87 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்)[2]
ஆடும் நிலை(கள்)முன்னணி தாக்கு வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ரியல் மாட்ரிட்
எண்9
இளநிலை வாழ்வழி
1996–2005லியோன்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2004–2006லியோன் பி20(15)
2004–2009லியோன்112(43)
2009–ரியல் மாட்ரிட்159(72)
பன்னாட்டு வாழ்வழி
2004பிரான்சு U174(1)
2004–2005பிரான்சு U1817(14)
2005–2006பிரான்சு U199(5)
2006–2007பிரான்சு U215(0)
2007–பிரான்சு67(23)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 15:56, 17 மே 2014 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 15 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

கரீம் மொஸ்தஃபா பென்சிமா (Karim Mostafa Benzema, திசம்பர் 19,1987) பிரான்சின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பிரான்சியத் தேசிய காற்பந்தணிக்கும் லா லீகாவில் எசுப்பானியக் கழகமான ரியல் மாட்ரிட்டிற்காகவும் ஆடி வருகிறார். முன்னணி தாக்கு வீரராக விளையாடும் இவர் நடுக்கள ஆட்ட வீரராகவும் விளையாடும் திறனுடையவர்.[3] "ஆழ்ந்த-திறனுள்ள விளையாட்டாளர்" என்றும் "ஆட்டத்தை முடிப்பவர்" என்றும் பாராட்டப்படுகிறார்.[4]

பென்சிமா பன்னாட்டளவில் பிரான்சிற்காக இளமைக் காலத்திலேயே விளையாடியவர். 17 அகவைக்கு குறைவானர்களுக்கான போட்டிகளில் தொடங்கி 18, 19, 21 அகவையினருக்கான போட்டிகளில் விளையாடியுள்ளார். மூத்தவர்களுக்கான அணியில் முதன்முதலாக மார்ச்சு 2007இல் ஆஸ்திரிய அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் பங்கேற்றார். தமது முதல் ஆட்டத்திலேயே தமது முதல் பன்னாட்டு கோலை அடித்து அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். பென்சிமா பிரான்சிற்காக ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியின் 2008 மற்றும் 2012 ஆண்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்தப் போட்டிகளில் உருமேனியாவிற்கு எதிராகவும் இத்தாலிக்கு எதிராகவும் நடந்த குழுநிலை ஆட்டங்களில் பங்கேற்றார்.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்_பென்சிமா&oldid=3303571" இருந்து மீள்விக்கப்பட்டது