கூடுதல் நேரம் (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடுதல் நேரம் (Overtime, extra time) அல்லது மிகை நேரம் என்பது ஓர் ஆட்டத்தை சமனாக அறிவிப்பதைத் தவிர்த்து முடிவொன்றை எட்ட விளையாட்டு விதிகளுக்குட்பட்டு ஆட்டம் தொடர கூடுதல் நேரம் தருவதாகும். பெரும்பாலான விளையாட்டுக்களில் ஒரு ஆட்டத்தில் தெளிவான வெற்றியாளர் யார் எனத் தெரிவது தேவையானபோதே இத்தகைய கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது. காட்டாக, ஓர் அணியோ அல்லது ஒரு விளையாட்டாளரோ மட்டும்தான் அடுத்தசுற்றுக்குச் செல்ல இயலும் என்னும் ஒற்றை வெளியேற்றப் போட்டிகளில் இவ்வாறு கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது. குறிப்பாக சமனாகும் ஆட்டங்களை விரும்பாத வட அமெரிக்காவில் அனைத்து ஆட்டங்களிலுமே ஏதேனும் ஒரு வகையான கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது.

கூடுதல் நேரம் வழங்குவது குறித்த விதிமுறைகள் விளையாட்டையும் சில நேரங்களில் போட்டியையும் பொறுத்து மாறுபடுகின்றன. சில விளையாட்டுக்களில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படாது எந்த அணி அல்லது விளையாட்டாளர் முதலில் புள்ளிகள் பெறுகிறாரோ அந்த அணி (அ)அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். இது "உடனடி மரணம்" எனப்படுகிறது. மற்றவற்றில் குறிப்பிட்ட நேரம் முடியும் வரை ஆட்டம் விளையாடப்பட்டு பின்னரே முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்தக் கூடுதல் நேரத்திலும் ஆட்டம் சமனாக இருந்தால், ஆட்ட/போட்டி விதிகளுக்கேற்ப, ஆட்டம் சமனாக முடிவுறலாம்; மேலும் கூடுதல் நேரங்கள் வழங்கப்படலாம்; அல்லது மாற்று சமன்நீக்கி மோதல் போன்ற சமன்நீக்கி செயல்முறைகள் பயன்படுத்தப்படலாம்.

ஆங்கில வழக்கில் வட அமெரிக்காவில் "ஓவர்டைம்" என்றும் மற்ற கண்டங்களில் "எக்சுட்ரா டைம்" என்றும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

காற்பந்தாட்டத்தில் பிபா நடத்தும் போட்டிகளில் ஆட்டமிழக்கும் நிலை ஆட்டங்களில் கூடுதல் நேரம் 2x15 நிமிடங்களாக 30 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.[1][2] காட்டாக, 2014இல் பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை காற்பந்தாட்டத்தில் சூலை 1, 2014 அன்று நடந்த ஆட்டமிழக்கும் நிலை பெல்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிற்கு இடையேயான ஆட்டத்தில் வழமையான நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் இடாதநிலையில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் அணி 2-1 கணக்கில் அமெரிக்காவை வென்றது. [3]

தொகுப்பு[தொகு]

வேறாகக் குறிப்பிடாவிடின் நேர அளவு நிமிடங்களில் தரப்பட்டுள்ளன.

விளையாட்டு கூடுதல் நேர அளவு முழுமையான ஆட்டத்தின் நேர அளவு நேர அளவின் விழுக்காடு பயன்பாடு
சங்கக் கால்பந்து 30 90 33% சில ஆட்டங்களில்
அமெரிக்கக் காற்பந்தாட்டம் (என்எஃப்எல்) 15 60 25% சில ஆட்டங்களில்
கூடைப்பந்தாட்டம் (என்பிஏ)
(3x3)
(என்எஃப்எச்எஸ்)
பிற
5
நேரமில்லை[a 1]
4
5
48
10
32
40
10%
N/A
13%
13%
அனைத்துப் போட்டி ஆட்டங்களிலும்
பனி வளைதடியாட்டம் (தொழில்முறை)
(என்எச்எல் வாகையாட்டங்கள்)
5
20
60
60
8%
33%
சில ஆட்டங்களில்
அனைத்து இசுடான்லி கோப்பை ஆட்டமிழக்கும்நிலை ஆட்டங்களிலும்
எறிபந்தாட்டம் 10 60 17% சில ஆட்டங்களில்
இரக்பி கூட்டிணைவு 10 80 13% சில ஆட்டங்களில்
இரக்பி ஒன்றியம் 20 80 25% சில ஆட்டங்களில்
  1. 3x3இல் கூடுதல் நேரம் ஏதாவதொரு அணி 2 புள்ளிகள் எடுத்தாலோ, "மூன்று-புள்ளி" வளைவிற்குப் பின்னாலிருந்து ஓர் கூடையில் இடுவதற்கு இணையாகவோ அல்லது ஏதாவது இரு வழமையான கூடைகள், தடங்கலற்ற எறிதல்களின் இணைவாலோ முடிவுக்கு வரும்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "How long is extra time in soccer?". Answers. 2 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Extra time for playing in football". Sports Stack Exchange. 2 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Belgium holds off the United States in extra time, 2-1". CBSSports.com. 1 சூலை 2014. 2014-07-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.