உள்ளடக்கத்துக்குச் செல்

கானா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானா கானா
Shirt badge/Association crest
அடைபெயர்கறுப்பு விண்மீன்கள்
ஆப்பிரிக்காவின் கறுப்பு விண்மீன்கள்
கூட்டமைப்புகானா கால்பந்துச் சங்கம் (GFA)
மண்டல கூட்டமைப்புWAFU (மேற்கு ஆப்பிரிக்கா)
கண்ட கூட்டமைப்புCAF (ஆப்பிரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர்Akwasi Appiah
துணைப் பயிற்சியாளர்Maxwell Konadu
அணித் தலைவர்Asamoah Gyan[1]
அணியின் துணைத் தலைவர்André Ayew[2]
Most capsRichard Kingson (90)
அதிகபட்ச கோல் அடித்தவர்Edward Acquah
Kwasi Owusu (40)
பீஃபா குறியீடுGHA
பீஃபா தரவரிசை24
அதிகபட்ச பிஃபா தரவரிசை14 (பிப்ரவரி, ஏப்ரல், மே 2008)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை89 (சூன் 2004)
எலோ தரவரிசை33
அதிகபட்ச எலோ14 (30 சூன் 1966)
குறைந்தபட்ச எலோ97 (14 சூன் 2004)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
Third colours
முதல் பன்னாட்டுப் போட்டி
 Gold Coast 1–0 நைஜீரியா 
(அக்ரா, British Gold Coast; 28 மே 1950)
பெரும் வெற்றி
 கென்யா 0–13 Ghana கானா
(Nairobi, கென்யா; 12 திசம்பர் 1965)[3]
பெரும் தோல்வி
 பல்கேரியா 10–0 Ghana கானா
(Leon, Mexico; 2 அக்டோபர் 1968)[4]
உலகக் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 2006 இல்)
சிறந்த முடிவுகாலிறுதி; 2010
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை
பங்கேற்புகள்19 (முதற்தடவையாக 1963 இல்)
சிறந்த முடிவுவாகையர்: 1963, 1965,
1978, 1982

கானா தேசிய கால்பந்து அணி (Ghana national football team,வார்ப்புரு:Lang-ak ), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் கானா நாட்டின் சார்பில் பங்குபெறும் கால்பந்து அணியாகும். இவ்வணியினர் கறுப்பு விண்மீன்கள் (Black stars,வார்ப்புரு:Lang-ak) என்ற அடைமொழியிட்டு அழைக்கப்படுகின்றனர். கானா நாட்டில் கால்பந்துக்கான மேலாண்மை அமைப்பான கானா கால்பந்துச் சங்கம் இவ்வணியை நிர்வகிக்கிறது; இது, ஆப்பிரிக்க நிலப்பகுதியின் பழமையான கால்பந்துக் கூட்டமைப்பாகும்.

2006-ஆம் ஆண்டுவரை உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கு இவ்வணி தகுதிபெறவில்லை. ஆயினும், ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தப்பெறும் கால்பந்துப் போட்டிகளுக்கு ஐந்துமுறை தொடர்ச்சியாகத் தகுதிபெற்றது. ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை நான்குமுறை ( 1963, 1965, 1978 மற்றும் 1982 ) வென்றுள்ளனர்;[5] மேலும், நான்குமுறை (1968, 1970, 1992 மற்றும் 2010) இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றனர்.

2005-ஆம் ஆண்டில் ஒரு கால்பந்துப் போட்டியிலும் தோற்காமல் இருந்ததால், ஃபிஃபாவின் சிறந்த முன்னேற்றம் காண்பித்த அணி என்ற விருதை வென்றனர். 2006-ஆம் ஆண்டின் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் குழுநிலைக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 2010 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் காலிறுதியை எட்டியபோது, அந்நிலையை அடைந்த மூன்றாவது ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றனர். கடந்த இரு உலகக்கோப்பைப் போட்டிகளைக் கணக்கில்கொண்டு அணிகளை வரிசைப்படுத்தும்போது, உலக அளவில் சிறந்த 10 அணிகளுக்குள் ஒரு அணியினராக கறுப்பு விண்மீன்கள் திகழ்கின்றனர். இத்தகைய கால இடைவெளியில், ஐரோப்பா அல்லது தென்னமெரிக்க நாடுகளைத் தவிர்த்து சிறந்த 10 அணிகளில் இடம்பிடிக்கும் முதல் அணி இதுவாகும்.

2013-ஆம் ஆண்டில், ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்கு நான்குமுறை தொடர்ச்சியாகத் தகுதிபெறுவதை இரண்டு தடவைகள் செய்து சாதனை படைத்த அணியானது; 1963-லிருந்து 1970 வரை மற்றும் 2008-லிருந்து 2013 வரை.

குறிப்புதவிகள்[தொகு]

  1. "Andre Ayew congratulates new Ghana captain Gyan". mtnfootball.com. 24 அக்டோபர் 2012. Archived from the original on 2013-06-06. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2013.
  2. "Ayew: A dream to captain Black Stars". kickoff.com. 11 ஆகத்து 2011. Archived from the original on 2014-05-28. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2013.
  3. "Kenya International Matches". RSSSF. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "MATCH: 02.10.1968 Ghana – Bulgaria 0:10". eu-football.info. 2 அக்டோபர் 1968. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2011.
  5. "African Football: The early years". bbc.co.uk (பிபிசி). 16 சனவரி 2004. http://news.bbc.co.uk/sport2/hi/football/africa/3396199.stm. பார்த்த நாள்: 16 சனவரி 2004. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானா_தேசிய_காற்பந்து_அணி&oldid=3580600" இலிருந்து மீள்விக்கப்பட்டது